For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி வெள்ளத்தில் விழுந்தவர் 7 மணி நேரத்திற்கு பின் மீட்பு

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

திருச்சி காவிரி ஆற்று வெள்ளத்தை பார்க்க வந்த சென்னையை சேர்ந்தவர் காவிரி ஆற்றுக்குள் தவறி விழுந்தார். 7மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்.

சென்னை தேனாம்பேட்டை இளங்கோவன் சாலையில் வசித்து வரும் ரத்தினகுமார் (வயது 54) என்பவர்காவிரியில் வெள்ளத்தை பார்க்க ஆவலுற்று திருச்சிக்கு வந்தார்.

திருச்சி பைபாஸ் சாலையில் நின்று காவிரி வெள்ளத்தை பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென குடையுடன் தவறிவிழுந்தார். காவிரியின் பாலக்கட்டையை பிடித்த படி வெள்ளத்தில் நின்று கொண்டு என்னை காப்பாற்றுங்கள்என்று அபயக் குரல் எழுப்பினார்.

அந்த பகுதியில் ஜன நடமாட்டம் இல்லாததால் அவரது அபய குரல் யாருக்கும் கேட்கவில்லை. எனவே அவர்இரவு முழுவதும் தண்ணீரில் தத்தளித்தபடியே இருந்துள்ளார்.

காலையில் அந்த வழியாக வந்த ஒருவர் ரத்தினகுமாரின் குரல் கேட்டு அருகிலுள்ள சோதனைச் சாவடி போலீஸ்நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, ஏட்டுகள் விஜயகுமார், சந்தானகிருஷ்ணன், முருகன் ஆகியோர் ஸ்ரீரங்கம்தீயணைப்பு படையினர் உதவியுடன் ரத்தினகுமாரை கயிறு கட்டி 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன்மீட்டனர்.

உடனே அவர் ஸ்ரீரங்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரத்தினகுமார் இந்த சம்பம் பற்றி கூறியதாவது:

நான் சென்னையிலிருந்து திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சாமி தரிசனத்துக்கு வந்தேன். தரிசனம் முடிந்த பிறகுகாவிரி பாலத்தில் நின்று காவிரியில் பாய்ந்து வரும் தண்ணீரை பார்த்தேன்.

அதற்கு கீழ் பைபாஸ் பாலம் பகுதியில் உள்ள ஆறு பெரிதாக தெரிந்தது. பைபாஸ் பாலம் என்று சொன்னதால்நான் அங்கிருந்து சென்னை பஸ் பிடித்து விடலாம் என்று நினைத்து ஆட்டோவில் புறப்பட்டு வந்தேன்.

பாதி வழியில் ஆட்டோ டிரைவர் பெட்ரோல் இல்லை என்று கூறி என்னை இறக்கி விட்டுவிட்டார். நான் குடையைபிடித்துக் கொண்டு நடந்தே பாலத்துக்கு வந்தேன். அப்போது இரவு 11 மணி ஆகிவிட்டது.

திடீரென்று காற்று வேமாக வீச ஆரம்பித்தது. அப்போது என்னுடைய குடை தவறி பாலத்தில் விழுந்தது. அந்தவேகத்தில் நானும் தவறி உள்ளே விழுந்து விட்டேன் என்று கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X