For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நகைக் கடை அதிபர் குடும்பம் கொலை: கள்ளத் தொடர்பு, செக்ஸ் டார்ச்சர் அம்பலம்

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

Sheela

சேலத்தில் நகை வியாபாரியும் அவரது மனைவி, மகனும் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.கொல்லப்பட்ட வியாபாரியின் மனைவியான ஷீலாவுக்கும் இன்னொரு நகைக் கடைக்காரருக்கும் இடையே கள்ளத் தொடர்புஇருந்தது தெரிய வந்துள்ளது.

அந்த நகைக் கடைக்காரரை ஷீலா அடிக்கடி செக்ஸுக்கு அழைத்து தொல்லை தந்த விவரமும் வெளியாகியுள்ளது.

சேலம் மூங்கம்பாடி பகுதியில் வெள்ளி நகைக் கடை வைத்திருந்தவர் மோகன் ராவ். இவரது மனைவி ஷீலா. இவர்களது மகன்பிரேம் (13). இந்த மூவரும் புதன்கிழமை இரவு வீட்டில் வைத்து கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டிருந்தனர்.

வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தாலும் இது நகை, பணத்துக்கா நடந்த கொலையாகத் தெரியவில்லை எனபோலீசார் கூறினர்.

மோகன் ராவ் பல நகைக் கடைகளுக்கு பைனான்ஸ் செய்துள்ளார். பல கடைகளின் சொத்துப் பத்திரங்களை வாங்கி வைத்துக்கொண்டு கறாராக இருந்துள்ளார். இதனால் பண விஷயம் காரணமாகக் கூட இவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனபோலீஸார் சந்தேகித்தனர்.

Mohan Rao, Sheela&their son in the blood pool

இந் நிலையில் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் செக்ஸ் தொடர்பு அம்பலம் வெளியில் வந்துள்ளது.

கொலை தொடர்பாக நகைக் கடைக்காரர் ஒருவரையும் அச்சக அதிபர் ஒருவரையும் சந்தேகப்பட்ட போலீசார் அவர்களிடம்விசாரணை நடத்தினர்.

இந்த நகைக் கடைக்காரருக்கும் ஷீலாவுக்கும் நெருக்கமான தொடர்பு இருந்து வந்துள்ளது. அவருக்கு ஷீலா ரூ. 25 லட்சம் வரைபண உதவி செய்துள்ளார். உதவி ஒரு பக்கம் செய்தாலும் இன்னொரு பக்கம் அந்த நகைக்கடைக்காரரை அடிக்கடி வீட்டுக்கு வரச்சொல்லி அழைத்து செக்ஸ் வைத்துக் கொள்வாராம் ஷீலா.

இந் நிலையில் ஜெயலட்சுமி என்ற புதிய பெண்ணுடன் அந்த நகைக் கடைக்காரருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்துஷீலா தன்னை செக்சுக்கு அழைத்தபோது அதைத் தவிர்த்திருக்கிறார்.

இதையடுத்து தனது பணத்தை ஷீலா திருப்பிக் கேட்டு மிரட்டியுள்ளார். பணத்தைத் தர முடியாவிட்டால் தான்சொல்லும்போதெல்லாம் தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாராக ஷீலாவின் டார்ச்சர் அதிகமானதால் சேலம் செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் சில மாதங்களுக்கு முன் புகார்தந்தாராம் அந்த நகைக்கடைக்காரர். இதையடுத்து ஷீலாவை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர் போலீசார்.

தன்னைப் பற்றி போலீசில் சொன்னதால் எரிச்சலான ஷீலா, அந்த நகைக்கடைக்காரருடன் நட்பை முறித்துக் கொண்டார். மேலும்அவருக்குத் தந்த ரூ. 25 லட்சத்தை உடனே திருப்பிக் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நகைக் கடைக்காரர் ஷீலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுபடுகிறது.

மேலும் தனது புதிய கள்ளக் காதலியான ஜெயலட்சுமியை விட்டும் ஷீலாவை மிரட்டியுள்ளார். இந்த ஜெயலட்சுமி தன்னைஇன்ஸ்பெக்டரின் மனைவி என்று சொல்லிக் கொண்டு போன் மூலம் ஷீலாவை மிரட்டியுள்ளார்.

மீண்டும் பணம் கேட்டு தொல்லை தந்தால் தொலைத்துவிடுவோம் என ஜெயலட்சுமி மிரட்டியுள்ளார். இது குறித்து ஷீலாவேசெவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். மேலும் முதல்வர் ஜெயலலிதாவின் தனிப் பிரிவுக்கும் புகார்அனுப்பியுள்ளார்.

இந் நிலையில் தான் ஷீலாவும் அவரது கணவர், மகன் கொலையாகியுள்ளனர்.

இதனால் இந்தக் கொலையை அந்த நகைக் கடைக்காரர் தான் கூலிப் படையை அனுப்பி செய்திருக்க வேண்டும் என போலீசார்கருதுகின்றனர். அந்த ஜெயலட்சுமி குறித்தும் நகைக்கடைக்காரரிடம் விசாரணை நடக்கிறது.

இது தவிர அச்சக அதிபருக்கும் கொலையான ஷீலா குடும்பத்தினருக்கும் இடத் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால்அவரிடமும் விசாரணை நடக்கிறது.

கொலைகளைச் செய்த கூலிப் படை சென்னையில் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து சேலம் போலீசாரின் ஒரு தனிப் படைசென்னைக்கு வந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X