For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிவாரணம் கோரி மக்கள் சாலை மறியல்-போக்குவரத்து பாதிப்பு, தடியடி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் 50 இடங்களில் வெள்ள நிவாரணம் கேட்டு பொது மக்கள் சாலை மறியல்களில் ஈடுபட்டனர்.இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசார் தடியடிநடத்தினர்.

திருவொற்றியூர், பூந்தமல்லி, அம்பத்தூர் போன்ற பகுதிகளில் நேற்று 50 இடங்களில் வெள்ள நிவாரணம்கிடைக்காத ஆத்திரத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் வாகனப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு வட சென்னையே ஸ்தம்பித்தது. இதே போல் போரூர்அருகே நீண்ட நேரம் சாலைமறியலில் ஈடுபட்டு கலைய மறுத்த பெண்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் 50பேர் படுகாயமடைந்தனர். அந்தப் பகுதியில் இதனால் பெரும் பதட்டம் நிலவியது.

சென்னையில் மழைவிட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும் வெள்ள நிவாரணப் பொருள்கள் முழுமையாககிடைக்காததால் கடந்த சில நாட்களாக பல இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் வெள்ள நிவாரணம் வழங்குவதில் சரியான நடைமுறைகள் பின்பற்றப் படாமல் குழப்பங்கள்தொடர்வதால் புறநகர்ப்பகுதிகளில் நேற்று 50 இடங்களில் திடீரென சாலை மறியலில் மக்கள் ஈடுபட்டனர்.

திருவொற்றியூரில் நகராட்சி அலுவலகம் முன்பாக நகராட்சி தலைவர் விஜயன் தலைமையில்ஆயிரக்கணக்கானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதே சமயத்தில் எல்லையம்மன் கோயில், ஒன்றிக்குப்பம்,விம்கோ நகர், ராமகிருஷ்ணா நகர், எண்ணூர் கடற்கரை சாலை என்று 20க்கும் மேற்பட்ட இடங்களில்பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ஒரே நேரத்தில் சாலை மறியல் நடந்ததால் திருவொற்றியூர், மணலி, எண்ணூர், மீஞ்சூர், பொன்னேரி போன்றஇடங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் சுங்கச்சாவடி பஸ் டெப்போ அருகே நிறுத்தப்பட்டன. இதனால்வடசென்னையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இந்த தகவல் அறிந்த வண்ணாரப்பேட்டை போலீஸ் துணைக் கமிஷனர் மாசானமுத்து, உதவி கமிஷனர் சின்னத்தம்பி, ஆர்டிஓ பாலசுப்பிரமணியம் ஆகியோர் சம்பவயிடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட மக்களைசமாதானப்படுத்தினார்கள். எனினும் மக்கள் அதை ஏற்கவில்லை.

இதனால் பெண்களுக்கும், அதிகாரிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சென்னை மாநகரில்பணக்காரர்களுக்கு கூட நிவாரணம் தரப்பட்டுள்ளது. ஆனால் இங்கே வேறு ஏதோ கணக்கு காட்டி நிவாரணம்தரமறுப்பதால் மறியலில் ஈடுபட்டுள்ளோம் என்று மக்கள் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து போரூரில் மவுலிவாக்கம், முகலிவாக்கம் ஆகிய இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள்நேற்று நடைபெற்றன.

அய்யப்பன் தாங்கலில் 1,500 பெண்கள் உள்பட ஏராளமானபேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பூந்தமல்லிபோலீஸ் உதவிக் கமிஷனர் சீனிவாசன், மதுரவாயல் உதவிகமிஷனர் மோகன் மற்றும் போலீசார் வந்து மக்களைகலையச் சொல்லி கட்டாயப்படுத்தினர்.

இருந்தாலும் மக்கள் கலைய மறுத்ததால் ஆத்திரமடைந்த உதவிக் கமிஷனர் மோகன் மற்றும் போலீசார் தடியடிநடத்த தொடங்கினர்.

இதில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் போலீசாரை நோக்கிகல்வீச்சு நடத்தினர்.

தடியடியில் காயமடைந்த பெண்கள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் மடிப்பாக்கம், தாம்பரம், கோவிலம்பாக்கம், போன்ற பகுதிகளிலும் வெள்ள நிவாரணம் கேட்டுபொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X