For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெள்ள சேதம்: ஜெவுடன் மத்திய குழு சந்திப்பு- ரூ.1,742 கோடி கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட 10 பேர் அடங்கிய மத்திய குழுஇன்று தமிழகம் வந்தது.

அவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் வெள்ள சேதம் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினர். அப்போது தமிழகத்திற்குவெள்ள நிவாரண நிதியாக ரூ. 1,742 கோடி மத்திய அரசு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கை வைத்தார்.

தமிழகத்தில் கடந்த மாதம் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி பெய்த பலத்த மழையால் சென்னை நகரம்வெள்ளக்காடானது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல ஏரிகள் உடைந்து பயிர்கள் நீரில் மூழ்கின. வெள்ளம்கரைபுரண்டு ஓடியதால் சாலைகள் பழுதடைந்தன. மேட்டூர் அணை திறந்துவிடப்பட்டதால் காவிரி கரையோர பகுதிகளானசேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களிலும் பலத்த சேதம் ஏற்பட்டது.

தஞ்சையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கி நாசமடைந்தன.

இந்த நிலையில் தமிழ்நாட்டு வெள்ள சேதத்துக்கு மத்திய அரசு ரூ.1,120 கோடி நிதியுதவி அளிக்க வேண்டும் எனக் கோரிபிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.

அந்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு, மழை வெள்ள சேதங்களை தமிழகத்தில் பார்வையிட மத்திய உள்துறை இணைஅமைச்சர் டி.எஸ். மிஸ்ரா தலைமையிலான 10 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அனுப்பி வைத்தது.

சென்னைக்கு இன்று காலை வந்த இந்த குழுவினரின் பெயர் விவரம் வருமாறு:

டி.எஸ். மிஸ்ரா-தலைவர், மனோகரன்-விவசாயத்துறை, ராஜன்குமார்-நிதித்துறை, ஜெயச்சந்திரன்-நெடுஞ்சாலைத்துறை,வெங்கடேசன்-ஊரகவளர்ச்சித்துறை, தினேஷ் சந்திரன்-குடிநீர்துறை, டாக்டர் ரெட்டி-சுகாதாரம், மெகரோத்ரா-கால்நடைபாரபரிப்பு மற்றும் மீன்வளம், அஞ்சலி சந்திரா-மின்வாரியம்

இவர்கள் 10 பேரும் இன்று கோட்டையில் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்தினார்கள். வெள்ளம் பாதித்தபகுதிகளில் மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களை அப்போது முதலமைச்சர் எடுத்து கூறினார்.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் எந்தெந்த ஊர்கள் கடும் பாதிப்பு ஏற்பட்டது என்பதையும் அவர் புகைப்படம் மற்றும்ஆதாரங்களுடன் விளக்கி கூறினார்.

மேலும் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழ்நாடு மழை வெள்ளச் சேதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும்அதன் சுற்றுப்புற மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மாநில இயற்கை சேத நிவாரண நிதி சுனாமி பாதித்த போது மக்களின் மறுவாழ்விற்காக நிவாரணம் வழங்கப்பட்டதில் முழுவதும்செலவாகிவிட்டது. இந்த நிலையில் மத்திய அரசு தாராளமாக நிதியுதவி வழங்க வேண்டும் என்றார்.

இதை தொடர்ந்து ஜெயலலிதா மத்திய குழுவினரிடம், ஏற்கனவே தமிழக வெள்ள நிவாரண பணிகளுக்கு நாங்கள் ரூ.1,120நிதியுதவி மத்திய அரசிடம் கேட்டிருந்தோம்.

ஆனால் தற்போது தொடர் மழையினால் தமிழகத்தில் பல மாவட்டங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசுரூ.1742 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதை மத்திய அரசிடம் பரிந்துரைக்குமாறும்குழுவினரிடம் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

அதன் பிறகு மத்திய குழுவினர் தலைமை செயலாளர் நாராயணன், வருவாய்த்துறை பேரிடர் மேலாண்மை சிறப்பு ஆணையர்ஆர்.சந்தானம் மற்றும் பலரிடம் மத்திய குழுவினர் விரிவாக ஆலோசனை நடத்தினார்கள்.

நாளை காலை மத்திய குழுவினர் 3 பிரிவாக சென்று சேத பகுதிகளை பார்வையிட தொடங்குகிறார்கள். வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஒரு குழு செல்கிறது. இதில் மத்திய அதிகாரிகள் கணபதி மெகரோத்ரா,அஞ்சலி சந்திரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தென்சென்னை பகுதிகளை சுற்றிகாட்ட இவர்களுடன் மாநகராட்சி கமிஷனர் விஜயகுமார் செல்கிறார்.

இன்னொரு குழுவினர் தலைவர் மிஸ்ரா தலைமையில் திருச்சி-தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களுக்கு செல்கிறது.இதில் மத்திய அதிகாரிகள் மனோகரன், ராஜன்குமார், ஜெயச்சந்திரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களுடன் பேரிடர் மேலாண்மை சிறப்பு ஆணையர் ஆர்.சந்தானம் செல்கிறார். 3வது குழுவில் அதிகாரிகள் வெங்கடேசன்,தினேஷ் சந்திரன், டாக்டர் ரெட்டி ஆகியோர் தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட சில மாவட்டங்களுக்கு செல்கிறார்கள்.

3 நாள் சுற்றுப்பயணத்திற்கு பிறகு 20ம் தேதி 3 குழுவினரும் சென்னை திரும்புகிறார்கள். சென்னையில் மீண்டும் உயர்அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார்கள்.

பின்னர் டெல்லி சென்று மத்திய அரசிடம் விரிவான அறிக்கையை கொடுப்பார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X