வென்றார் ராஜபக்ஷே: தமிழர் பகுதியில் மறுதேர்தல் கோரும் ரணில்
கொழும்பு:
![]() |
இதையடுத்து தேர்தல் புறக்கணிப்பு நடந்த தமிழர்கள் வசிக்கும் வட-கிழக்குப் பகுதிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் எனரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்று நடந்த வாக்குப் பதிவைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணும் பணி உடனடியாகத் தொடங்கியது. இன்று காலை அனைத்துவாக்களும் எண்ணப்பட்ட நிலையில் 50.33 சதவீத வாக்குகளைப் பெற்று ராஜபக்ஷே வெற்றி பெற்றார். 50 சதவீதத்துக்குக்குறைவாக வாக்குகள் பெற்றிருந்தால் இலங்கை அரசியல் சட்டப்படி மறு தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
வெறும் 1.9 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் ரணிலை ராஜபக்ஷே வென்றுள்ளார். இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில்மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றி பெற்ற முதல் வேட்பாளர் ராஜபக்ஷே தான் என்பது குறிப்பிடத்தத்தது. இன்றுராஜபக்ஷேவுக்கு பிறந்த நாள் 60வது பிறந்த நாளாகும்.
முன்னாள் நடிகரான ராஜபக்ஷே, வழக்கறிஞராகவும் இருந்தவர். அவருக்கு தெற்கு மற்றும் மத்திய இலங்கையில் அதிகவாக்குகள் கிடைத்தன. ரணிலுக்கு கொழும்பிலும் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் அதிக வாக்குகள்கிடைத்தன.
இருவருக்கும் சிங்களர்களின் வாக்குகள் கிட்டத்தட்ட சரிசமமாக கிடைத்துள்ள நிலையில் தனது வெற்றிக்கு வட கிழக்குப்பகுதிகளில் தமிழர்களின் வாக்குகளையே ரணில் முழுக்கவும் நம்பியிருந்தார். ஆனால், தேர்தலை தமிழர்கள் ஒட்டுமொத்தமாகப்புறக்கணித்ததால் ராஜபக்ஷேவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
நாடு முழுவதும் 75 சதவீத வாக்குகள் பதிவானாலும், வட-கிழக்குப் பகுதியில் 0.014 சதவீத வாக்குகளே பதிவாயின.யாழ்பாணத்தில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் 7,01,938 பேர். இதில் 2,168 பேர் மட்டுமே வாக்களித்தனர்.
![]() |
நாட்டிலேயே அதிகபட்சமாக குருனேகலே மாவட்டத்தில் தான் மிக அதிகபட்சமாக 85 சதவீத வாக்குகள் பதிவாயின.மட்டக்களப்பில் 44 சதவீத வாக்குகள் பதிவாயின.
வெற்றி பெற்றுள்ள ராஜபக்ஷே இரண்டு வாரங்களில் அதிபராகப் பதவியேற்பார். இதன்மூலம் கடந்த 11 வருடங்களாக இரண்டுமுறை அதிபராக இருந்த சந்திரிகாவின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது.
தனது வெற்றி குறித்துப் பேசிய ராஜபக்ஷே, இலங்கையில் அனைத்துத் தரப்பினரும் விரும்பும் வகையில் அமைதி ஏற்படுத்தபாடுபடப் போவதாகக் கூறினார்.
முன்னதாக, அதிபர் தேர்தலில் யார் வென்றாலும் தங்களுக்குக் கவலையில்லை என விடுதலைப் புலிகள் அறிவித்ததுகுறிப்பிடத்தக்கது. ரணில் மற்றும் ராஜபக்ஷே ஆகிய இருவரின் வாக்குறுதிகளையும் தாங்கள் நம்பவில்லை என்று கூறிய புலிகள்தேர்தலில் யாருக்கும் ஆதரவு தரவில்லை.
புலிகளின் ஆதரவும் தமிழர்களின் ஆதரவும் இருந்திருந்தால் ரணில் எளிதாக வென்றிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் தேர்தலையொட்டி வன்முறை இன்றும் நீடித்தது. இன்று அதிகாலை அம்பாறை மாவட்டம் அக்கரைப்பட்டு என்றஇடத்தில் பள்ளிவாசலின் மீது நடந்த கிரணைட் குண்டு வீச்சுத் தாக்குதலில் அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த 25 பேர்காயமடைந்தனர்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |