For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம் முழுவதும் கன மழை- பல பகுதிகளில் வெள்ளம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Trichy
தமிழகம் முழுவதும் இடைவிடாமல் பெய்து வரும் கன மழை காரணமாக 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெள்ள அபாயம்ஏற்பட்டுள்ளது.

வங்கக் கடலில் ஏற்படட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்துவிட்டாலும் கலையாமல் மன்னார் வளைகுடாவில்தொடர்ந்து நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகம், ஆந்திரா, கர்நாடகத்தின் தென் பகுதி ஆகியவை முழுவதுமே கருமேகக்கூட்டங்களால் சூழப்பட்டுள்ளன.

தொடர்ந்து இரவு பகலாக மழை பெய்து வருகிறது. இந்த வானிலை தொடரும் சூழல் இருப்பதால் மேலும் 2 நாட்களுக்கு மழைபெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Chennai Outskirts
இந்த கன மழை காரணமாக சென்னை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, நாகப்பட்டிணம், ராமநாதபுரம், கரூர், கடலூர், திருவாரூர்,பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், நாமக்கல், திருவள்ளூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் வீடுகளுக்குள்தண்ணீர் புகுந்துள்ளது.

மாநிலத்திலேயே அதிகபட்சமாக ஒரே நாளில் கடலூர் மாவட்டம் தொழுதூரில் 170மிமீ மழை பதிவாகியுள்ளது. பாபநாசம்,மணிமுத்தாறு, சேர்வலாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன. ஆபத்தைதவிர்க்க சில அணைகளிலிருந்து கூடுதல் நீர் திறந்து விடப்படுகிறது.

அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றிலிருந்து உபரி நீர் ஊருக்குள் திருப்பி விடப்பட்டுள்ளது.

அமராவதி அணையிலிருந்து விநாடிக்கு 96,000 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை,பெருஞ்சாணி அணைகளிலிருந்து பாசனத்துக்குத் திறந்துவிடப்படும் நீர் நிறுத்தப்பட்டுள்ளது.

Water released from poondi lake
தர்மபுரி தொப்பூரை அடுத்த செக்கதரப்பட்டியில் தொப்பையாறு அனண அமைந்துள்ளது. இந்த அணை 6 ஆண்டுகளுக்கு பிறகுமுழக் கொள்ளவான 50 அடியை எட்டியது. இதனால் அங்கு 4 தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின. எனவே அங்கு 23கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

விருதுநகரில் உடைந்த கண்மாய்கள்:

விருது நகர் மாவட்டத்தில் நேற்று முதல் பெய்து வரும் தொடர் மழையால் பல கண்மாய்கள் உடைந்தன. கிராமங்களில் வெள்ளம்சூழ்ந்தது. தென் மாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. எனவே மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகரில் தாழ்வான பகுதியான அருப்புக்கொட்டை சாலையில் 116 காலனி வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளத்தில்சிக்கிய 180 பேரை தீயணைப்பு படையினர் இரவோடு இரவாக கயிறு கட்டி மீட்டனர். அவர்கள் பத்திரமான இடத்தில்தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதே போல் 35வது வார்டில் உள்ள விஸ்வநாததாஸ் காலனியில் உள்ள 40 வீடுகள் இடிந்தன. இதனால் 40 குடும்பத்தினர் வீட்டைஇழந்து தவித்தனர். இது குறித்து தாலுகா அலுவலகத்திற்கு புகார் செய்தும் அவர்களை இதுவரை எந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.

விருது நகரின் மையப்பகுதியான தெப்பக்குளம் நிரம்பி வழிகிறது. கவுசிகா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.கொத்தனேரி கண்மாய் உடைந்து ஊருக்குள் வெள்ளம் பாய்ந்தது. இதனால் அப்பகுதி குடிசைகளை வெள்ளம் சூழ்ந்தது.

திருமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டி.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி பாலத்திற்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்துஓடியது. இதனால் நேற்றிரவு முதல் திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. விருதுநகரில் இருந்து மதுரைக்கு செல்லும் பஸ்கள் காரியப்பட்டி வழியாகதிருப்பிவிடப்பட்டது.

மதுரையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் அருப்புக்கோட்டை வழியாக விருதுநகர் அடைந்துசெல்கிறது.

திருவில்விபுத்தூர்:

திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, பிளவக்கல் அணைப்பகுதியில் பெய்த கன மழையால் அழகாபுரி அடுத்துள்ளதரைப்பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் திருவில்லிப்புத்தூர்-மதுரை செல்லும் பஸ் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுசிவகாசி, விருதுநகர் வழியாக திருப்பிவிடப்பட்டன.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டத்தில் கண்மாய்கள் உடைப்பெடுத்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் கிராமங்கள் மிதக்கின்றன.தேவகோட்டை, சருகணி, காளையார்கோயில் பகுதியில் கண்மாய்கள் உடைப்பெடுத்து கிராமங்களை சூழ்ந்ததால் இந்தகிராமங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. வீரகண்டான் கண்மாய் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்ததில் சிவகங்கை மாவட்டதீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரில் தத்தளித்த 20 குடும்பங்களை கயிறு கட்டி மீட்டனர்.

காரைக்குடியில் 10 கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. திருப்புவனம் அருகே உள்ள விரகனூர் அணை நிரம்பிவழிவதால் இன்று திறக்கப்படுகிறது. சூரக்குளம் கண்மாய் உடைந்ததில் பொன்னாம்பட்டி, வானமாவளி பகுதியில் 3 அடி தண்ணீர்செல்கிறது. இதில் 3 வீடுகள் இடிந்தன. 150 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.

வெள்ளத்தில் மிதந்த டிஎஸ்பி கார்:

சென்னையை சேர்ந்த டிஎஸ்பி சேவகப்பாண்டியன் திருக்கோஷ்டியூரில் உள்ள தன் மனைவியின் வீட்டிற்கு வந்தார். பின்னர்அங்கிருந்த கல்லல் அருகே செம்பொனூருக்கு காரில் சென்றார். அப்போது பட்டமங்கலம் கண்மாய் உடைந்து தண்ணீர்வெளியேறியதில் டிஎஸ்பி கார் தலைக்குப்புற கவிழ்ந்தது. பிறகு அக்கம்பக்கத்தினர் வந்து டிஎஸ்பியை மீட்டனர். தீயணைப்புபடையினரால் காரும் பத்திரமாக மீட்கப்பட்டது.

புவனகிரி பகுதியில் 100 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில்தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி நீர் திறக்கப்பட்டதால் தண்ணீர் சாலைகளில்பெருக்கெடுத்து ஓடியது. செம்பரம்பாக்கம் ஏரி 2வது நாளாக இன்றும் திறக்கப்படுகிறது. சைதாப்பேட்டையில் கூவம் ஆற்றைஒட்டிய பகுதிகள் நீரில் மூழ்கின.

கிண்டி-சைதாப்பேட்டையை இணைக்கும் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. தமிழகத்தில் மழை வெள்ளம் ஆகியவற்றில் சிக்கிஉயிரிழந்தோரின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.

நெய்வேலியில் நிலக்கரி சுரங்களில் நீர் புகுந்துவிட்டதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X