For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெள்ள மீட்புப் பணியில் ராணுவம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Kollimalai
தமிழ்நாட்டில் பெய்து வரும் தொடர் மழையால் பஸ்- ரயில் போக்குவரத்து 2வது நாளாக இன்றும் பாதிக்கப்பட்டுள்ளது.

வங்ககடலில் உருவான புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்ததில் சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடுகிறது.பாலங்கள் உடைந்ததால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. விழுப்புரம், கடலூர், திருச்சி, மதுரை மாவட்டங்களில்சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சென்னையில் இருந்து சென்ற அரசு விரைவு பஸ்கள்ஆங்காங்கே வழியில் நிற்கின்றன.

சென்னையில் இருந்து நேற்று முன் தினம் சென்ற தொலை தூர பஸ்கள் மதுரை, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், திருநெல்வேலி,தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளுக்கு செல்ல முடியாமல் வெள்ளம் காரணமாக வழியிலேயே நிற்கின்றன.

அரசு விரைவு போக்குவரத்து மொத்தவுள்ள 800 பஸ்களில் 400 பஸ்கள் வெள்ளத்தில் ஆங்காங்கே சிக்கிக் கொண்டுபாதியிலேயே நிற்கின்றன. சில பஸ்கள் வெள்ளத்தில் மூழ்கி நிற்கின்றன. மீதமுள்ள பஸ்களில் பெரும்பாலனவை ஓட்டப்படாமல்டெப்போக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சேலத்தில் கோவில் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்கள்
இதனால் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய பயணிகள் பஸ் டெப்போக்களில் காத்துக் கிடக்கின்றனர். சிலர் பயணத்தை ரத்துசெய்து விட்டு வீட்டுக்கு திரும்பிச் சென்றனர். பெங்களூர், சேலம், புதுச்சேரி அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.

சென்னையிலிருந்து ஜெயங்கொண்டம், விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், அரியலூர் ஆகிய ஊர்களுக்கு பஸ்கள்ஓடவில்லை. ஆனால் விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, திண்டிவனம், கடலூர் ஆகிய ஊர்களுக்கு கிழக்கு கடற்கரைசாலைவழியாக பஸ்கள் செல்கின்றன.

மழையால் பஸ் நிலையங்களில் அதிக கூட்டம் காணப்படவில்லை. கடந்த 4 நாட்களாக பெய்து வரும் மழையால் 15மாவட்டங்களின் இயல்பு வாழ்க்கை தடம்புரண்டு விட்டது. குறிப்பாக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர்,பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, சிவகங்கை மாவட்டங்களில் மக்கள் அஞ்சி நடுங்கும் அளவுக்கு வரலாறு காணாதமழை பெய்துள்ளது.

இந்த தொடர் மழையால் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் தண்ணீர் செழிப்பை மீண்டும் பெற்றுள்ளது. மழை தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஏரி-குளங்கள் உடைந்தன. சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஏரி குளங்களில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளன.

புதுக்கோட்டையில் திருவப்பூர் அருகே அந்தரத்தில் தொங்கும் ரயில் பாலம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 400 குளங்கள், திருவள்ளூர் மாவட்டத்தில் 200 குளங்கள், விழுப்புரத்தில் 100 குளங்கள், கடலூர்மாவட்டத்தில் 275 குளங்கள் உடையும் அபாயகரமான சூழ்நிலை உள்ளன.

இது தவிர ஏரி, குளம் உடைப்பு வெள்ளப் பெருக்கால் பஸ், ரயில் போக்குவரத்து முடங்கியது. சுமார் 1 லட்சம் பயணிகள் எங்கும்போக இயலாமல் ஆங்காங்கே நிற்கின்றனர். செல்போன் மூலம் அவர்கள் தாங்கள் சிக்கி இருக்கும் இடத்தை உறவினர்களுக்குதெரிவித்தனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் மட்டும் 400 கிராமத்தை சேர்ந்த மக்கள் தவிப்புக்குள்ளானார்கள். கடலூர் மாவட்ட மக்கள் படகுகள் மூலம்மீட்கப்பட்டு வருகின்றனர். 50 படகுகள் மூலம் கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். வெள்ளம்சூழ்ந்த 300 கிராமங்களில் இந்த மீட்புப்பணி வேகமாக நடந்து வருகிறது.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க நேற்றே மீட்பு பணிகளும், சீரமைப்பு பணிகளும் தொடங்கப்பட்டன. பல இடங்களில் மக்கள்கயிறு கட்டி இழுத்து காப்பாற்றப்பட்டனர். சில கிராமங்களுக்கு மீட்புப் பணியினர் இன்னும் செல்ல இயலவில்லை.

இதே போல் கடலூரில் பெண்ணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. கடலூரில் காட்டாற்றுவெள்ளம் கெடிலம் மற்றும் பெண்ணையாற்றில் கலக்கிறது. இதனால் இரு ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆற்றங்கரையோர நகருக்குள் வெள்ளம் புகுந்தது. கே.கே.நகர், துரைசாமி நகர் ஆகிய பகுதிகளில் ஏராளமானவீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இது போல் கெடிலம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் புருஷோத்தமன் நகரில் வெள்ளம் புகுந்தது.இதனால் பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்றனர்.

வெள்ளம் ஊருக்குள் புகுந்ததை அறிந்த அரசு அதிகாரிகள் விரைந்து சென்று பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

திருநாரையூர், கீழவன்னியூர், மேலவன்னியூர், எடையார், தோப்பாடி போன்ற கிராமங்கள் முழ்கி விட்டன. இந்த கிராமத்தை சுற்றிஏறத்தாழ 3 லட்சம் பேர் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறார்கள். இவர்களை படகுகள் மூலம் மீட்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.

மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. கடலோர காவல்படை வீரர்கள் 102 பேர் ஒருகப்பலில் பரங்கிப்பேட்டை வந்து சேர்ந்துள்ளனர். ஹெலிகாப்டர் மூலமும் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

500 ராணுவ வீரர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை வீரர்கள் 70 பேர் ஆகியோர் சேர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை இங்கு 2 லட்சம் பேரை மீட்டுள்ளனர். இன்னும் இங்கு ஒரு லட்சம் பேர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.

மீட்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகளை அமைச்சர் சி.வி.சண்முகம், கலெக்டர் ககன் தீப் சிங்பேடி ஆகியோர் செய்துவருகிறார்கள்.

தொடர்ந்து வெள்ளம் வந்து கொண்டிருப்பதால் பல கிராமங்கள் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த மழையால் சாத்தனூர் அணை அதன் முழு கொள்ளவை எட்டியது. மீண்டும்புயல் உருவாகி தற்போது பெய்து வரும் தொடர் மழையால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியது.

அணையில் மொத்த நீர்மட்டம் 119 அடி என்றாலும், அணையின் பாதுகாப்பு கருதி 117 அடி வரை நிரை தேக்கி வைத்து விட்டுஉபரி நீரை பொதுப்பணித்துறையினர் வெளியேற்றி வந்தனர். பலத்த மழை காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு6,022 கனஅடியாக உள்ளதால், அணையிலிருந்து 4,726 கன அடி நீரை வெளியேற்றி வருகின்றனர்.

தற்போது அணையின் நீர்மட்டம் 118.20 அடியாக உள்ளது. இதனால் சாத்தனூர் அணையின் கரையோரப் பகுதி கிராமமக்களைபாதுகாப்பான இடத்திற்கு செல்லும் படி அதிகாரிகள் வலியுறுத்தி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விமானங்களில் பயணிகள் கூட்டம்:

மதுரையிலிருந்து சென்னை செல்லும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால் விமானத்தில் செல்ல பயணிகள் கூட்டம்நிரம்பி வழிந்தது.

அவசரமாக சென்னை செல்ல வேண்டிய பயணிகள் விமானத்தில் செல்ல விமான நிலையத்திற்கு வந்தனர். இதனால் விமானநிலைத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதியது.

ஜெட் ஏர்வேஸ், இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் டெக்கன் விமானங்கள் அனைத்தும் முழு அளவில் பயணிகளை ஏற்றிக் கொண்டுபறந்தன.

ஆனாலும் பலர் விமானங்களிலும் டிக்கெட் கிடைக்காமல் வீட்டிற்கு திரும்பினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X