For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹஜ் பயண கட்டணம் உயராது- மத்திய அரசு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

ஹஜ் புனித யாத்திரை பயணத்திற்கான கட்டணத்தை இந்த ஆண்டு உயர்த்துவதில்லை என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில்முடிவு செய்யப்பட்டது.

பிரதமர் மன்மோகன் சிங் தலையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் ஹஜ் பயணக் கட்டணத்தை உயர்த்துவதில்லை என்றுமுடிவெடுக்கப்பட்டதாக செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி தெரிவித்தார்.

அவர் கூறுகையில்,

இந்திய ஹஜ் கமிட்டி சார்பில் புனித யாத்திரை மேற்கொள்பவர்களில் 60,000 பேர் மும்பை, டெல்லி, அகமதாபாத் மற்றும்ஹைதராபாத்தில் இருந்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் மூலமாக சென்று வருகின்றனர். இதில் ஒரு பயணிக்கு 745 டாலர் வரைசவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் கட்டணம் வசூலிக்கிறது.

இதே போல் சென்னை, லக்னோ, பெங்களூரில் இருந்து பயணம் செய்பவர்களிடம் 819 டாலர் வரை கட்டணம் வசூலிக்கிறது.

கொல்கத்தா, கோழிக்கோடு, நாக்பூர், ஓளரங்கபாத், பாட்னா, கெளகாத்தி, ஜெய்பூர், ஸ்ரீநகரில் இருந்து ஏர் இந்தியா மற்றும்இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் மீதமுள்ள பயணிகள் செல்கின்றனர்.

அவர்களுக்கான விமான கட்டணம் சென்ற ஆண்டைப் போல் ரூ. 12,000 ஆகவே இருக்கும். மீதமுள்ள வரித் தொகையை இந்தியஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியாவிற்கு அரசு வழங்கும். மேலும் இந்த மாதத்தின் முதல் வாரத்திலிருந்து இந்தியாவிலிருந்துசவுதிக்கு ஹஜ் பயணம் தொடங்கிவிடும் என்றார்.

ஹஜ் செல்லும் 2 வயது சிறுவன்:

இதற்கிடையே, இந்த ஆண்டு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மனார் மொயின் கான் என்ற 2 வயது சிறுவன் ஹஜ் பயணம் செய்கிறான்.

இதே போல் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 110 வயதான மியா சரபராஜ், மற்றும் 106 வயதான ஜீபா பேகம் என்ற பெண் பயணியும் ஹஜ்புனித பயணம் மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை சுமார் 1 லட்சம் இந்தியர்கள் ஹஜ் பயணம் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X