For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெள்ளத்தில் மூழ்கிய வேளச்சேரி-மடிப்பாக்கம்: 3 லட்சம் பேர் மீட்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Adambakkam
நீரில் மூழ்கிய ஆதம்பாக்கம் பாலம்

தொடர் மழை காரணமாக ஏரிகள் உடைந்ததால், தென் சென்னை புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வேளச்சேரி,மடிப்பாக்கத்தில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் மயமாக காட்சி அளிக்கிறது.

வங்கக்கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல்,பொழிச்சலூர், அனகாபுத்தூர், திருநீர்மலை உள்பட பல பகுதிகளில் வீடுகள் மூழ்கின. தாம்பரம் அருகே நெடுங்குன்றம் ஏரி கரைஉடைந்து பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏரி தண்ணீர் முழுவதும் காட்டாற்று போல் வெளியேறியது. இதனால் நெடுங்குன்றம், மப்பேடு, பீர்க்கன்கரணை,இரும்புலியூர், வெங்கம்பாக்கம், ஆலப்பாக்கம் பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சேலையூர் ஏரி நிரம்பி வேளச்சேரிசாலையில் வெள்ளம் சென்றது. இதனால் வேளச்சேரி சாலையில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் ஓடியது. இதனால் அந்த சாலையில்போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

வெள்ளத்தால் வேளச்சேரி பகுதியில் உள்ள சுமார் 15,000 வீடுகளில் தண்ணீர் புகுந்தது. கீழ்தளத்தில் குடியிருந்தவர்கள்மாடிகளுக்கு சென்றனர். இந்த பகுதிகளில் போலீஸ் இணை கமிஷனர் சைலேந்திரபாபு தலைமையில், துணை கமிஷனர்பாலதண்டாயுதபாணி, உதவி கமிஷனர் ரசல் சாம்ராஜ் உள்பட ஏராளமான போலீசாரும், போலீஸ் மீட்பு படையினர் 30 பேரும்மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

Ambattur
வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அம்பத்தூர்

இவர்கள் படகுகள் மூலம் மக்களை மீட்டு வந்து தென் சென்னை வியாபாரிகள் சங்க தலைவர் விக்கிரமராஜா, மாநில இணைசெயலாளர் ஆனந்தராஜ் ஆகியோர் வேன் மூலம் பஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

மடிப்பாக்கம்:

இதே போல் மடிப்பாக்த்தில் இருந்து வேளச்சேரி செல்லும் கூட்டு சாலை பகுதியில் 5 கி.மீ தூரத்துக்கு சாலையிலேயே ஆறு போல்வெள்ளம் ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள புழுதிவாக்கம் ராம்நகர், பெரியார் நகர் உள்பட பல பகுதிகளில் உள்ளசுமார் 10,000 வீடுகள் நீரில் மூழ்கின. இங்கு கோட்ட தீயணைப்பு அதிகாரி விஜயபாஸ்கர் தலைமையில் தீயணைப்பு படையினர்80 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

பரங்கிமலை, திரிசூலம் மலைகளில் பெய்த மழை தண்ணீர் வழிந்து ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல்,மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, கோவிலம்பாக்கம், துரைப்பாக்கம், ஆகிய பகுதிகளில் நுழைந்தது. இதனால் இந்தப் பகுதியில்உள்ள வீடுகள் நீரில் மூழ்கின.

மடிப்பாக்கம், மணப்பாக்கம் ஆகிய பகுதிகளில் ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். படகுகள் மூலம்பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பத்திரமான இடங்களில் சேர்த்தனர். மருத்துவ உதவிகளையும் ராணுவத்தினர் வழங்கினார்கள்.

நேற்று மட்டும் சுமார் 3 லட்டசத்துக்கும் மேற்பட்டவர்களை மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் பலர் தங்கள் உறவினர்களின்வீடுகளுக்கு சென்றனர்.

கூவம் ஆறு:

விருகம்பாக்கம் சின்மயா நகர் பகுதியில் கூவம் ஆறு கரைபுரண்டு ஓடுவதால் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்தபகுதியில் உள்ள அனெக்ஸ், போஸ்ட் ஆடிட் காலனி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சூளை மேடுபாலம் அருகில் உள்ள சாலைநகர், சாரி தெரு, அப்பாராவ் தோட்டம், பிள்ளையார் கோவில் தெரு, சேத்துப்பட்டு குட்டை அருகேஉள்ள தாஸ்புரம், பூபதிபுரம் போன்ற பகுதிகளிலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

தரமணி:

வடபழனி 100 அடி ரோடு, எம்.எம்.டி.ஏ. காலனி, சூளைமேடு வீரபாண்டிய நகர், கமலா நேரு நகர் ஆகிய பகுதிகளிலும் தண்ணீர்வெள்ளம் போல் ஓடியது. இந்த பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்தது. ஐஐடி வளாகத்தில் உள்ளகுளம் நிறைந்து வழிந்தது. இதனால் தரமணி பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

சைதாப்பேட்டை:

சென்னை மற்றும் புறநகரில் பெய்த கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளம் அடையாறு ஆற்றில் பாய்ந்து வருகிறது. அதோடுபுழல், செம்பரம்பாக்கம் உள்பட 4 ஏரிகளில் திறந்து விடப்பட்ட உபரி தண்ணீரும் அடையாறு ஆற்றில் தான்திருப்பிவிடப்பட்டுள்ளது.

மேற்கு சைதாப்பேட்டையில் உள்ள விநாயகபுரம் அடையாறு ஆற்றின் கரையில் உள்ளது. இந்த பகுதிக்குள் வெள்ளம் நேற்றுகாலை புகத் தொடங்கியது. இதனால் பல வீடுகளின் தரை தளம் மூழ்கி விட்டது. அங்கு இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டுமொட்டை மாடிக்கு ஓடினார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று 100 பேர் சிக்கிக் கொண்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினரும் போலீசாரும் விநாயகபுரத்துக்கு விரைந்தனர். தீயணைப்பு படையினர்தண்ணீருக்குள் இறங்கி ஒவ்வொருவராக பாதுகாப்பாக அழைத்து வந்தனர்.

அண்ணாநகர் மேற்கு:

அண்ணாநகர் மேற்கு கோல்டன் ஜுப்ளி அபார்ட்மெண்ட்டில் தரை தளத்தில் அனைத்து வீடுகளிலும் வெள்ளம் புகுந்தது. சுமார்1,500 வீடுகளில் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் மேல் தளத்தில் குடியிருப்பவர்களும் கீழே இறங்க முடியாமல்தவிக்கிறார்கள். குடி தண்ணீர் தொட்டிகளில் மழை நீர் புகுந்ததால் குடி தண்ணீரையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X