For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையை காப்பாற்ற ஏரிகள் திறக்கப்பட்டன: ஜெயலலிதா விளக்கம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கூவத்தில் ஏற்படவிருந்த வெள்ள சேதத்தை தவிர்க்கவே ஏரிகள் திறந்துவிடப்பட்டன என்று முதலமைச்சர் ஜெயலலிதாகூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2ம் தேதி மற்றும் 3ம் தேதி பெய்த பலத்த மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏற்பட்டவெள்ளச் சேதங்களை நான் ஆய்வு செய்தேன். இந்த ஆண்டு

ஏற்கனவே பெய்த கனமழையில் சென்னையை சுற்றி உள்ள ஏரிகள் நிரம்பி இருந்தன. இந்த சூழ்நிலையில் 2ம் தேதிமீனம்பாக்கத்தில் பதிவான 28 மி.மீ மழையால் சிக்கலான சூழ்நிலை உருவானது. நகரின் பெரும்பாலான பகுதிளில் சூழ்ந்தவெள்ளம் வெளியேற அனைத்து நடவடிக்கைகளும் சிறந்த முறையில் செயல்படத்தப்பட்டன.

செம்பரம்பாக்கம் ஏரியிம் தொடர்ச்சியாக வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. உச்சக் கட்டமாகஅது 15,000 கன அடியானது. அந்த ஏரி வேகமாக நிரம்பியதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அடையாறு ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள 45,000 பேர் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டனர். இன்றும் செம்பரம்பாக்கம்ஏரியில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கனமழை காரணமாக 12,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

பூண்டி ஏரியிலும் 3ம் தேதி 35,000 கன அடி தண்ணீர் வந்தது. ஏற்கனவே இந்த ஏரி நிரம்பி இருந்ததால் அதில் வரும் தண்ணீர்அப்படியே திறந்துவிடப்பட்டது. சென்னை நகரை காப்பாற்றவும் அனைத்து தண்ணீருமே கூவம் ஆற்றில் சேராமலும் தடுக்கவும்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கூவம் ஆற்றில் அதிகபட்சமாக 14,000 கன அடிக்கு மிகாமல் கட்டுபடுத்தப்பட்டது. கூவம் கரையோரத்தில் வெள்ளப்பெருக்குதவிர்க்கப்பட்டது. விருகம்பாக்கம் கால்வாய் நீர் வந்து கொண்டு இருப்பதாலும் கூவத்தில் தண்ணீர் பெருக்கெடுத்தது. கூவத்துக்குவரும் தண்ணீர் அளவு இன்று மாலை குறைய ஆரம்பித்ததும் நிலைமை சீரடைந்து விடும்.

சென்னை நகரில் இதுவரை 75,000 பேர் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில்தங்கவைக்கப்பட்டுள்ளனர். நேற்று 3.80 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்று 5 லட்சம் உணவுபொட்டலங்கள் வழுங்கப்பட்டுள்ளன.

மின்சாரம் தாக்கி மக்கள் பலியாகாமல் இருக்க வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் முன் எச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.வெள்ள பகுதிகளில் போக்குவரத்து பிரச்சினை ஏற்பட்டாலும் மாநகர போக்குவரத்து கழகம் அனைத்து பகுதிகளிலும் பஸ்போக்குவரத்தை வழக்கம் போல் இயக்கி வருகிறது. பால் வினியோகமும் பாதிப்பு இல்லாமல் நடந்தது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 2ம் தேதி மிக அதிகமாக மழை பெய்துள்ளது. இதனால் அனைத்து ஏரிகளும் நிரம்பிவிட்டன. 35ஏரிகள் உடைந்து விட்டன. 73 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழை நிவாரண பணிகள் முழு வீச்சில் நடக்கிறது.இதே போல் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் 50,000 மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கான52 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதியில் அமைச்சர் சோமசுந்தரம் நிவாரண பணிகளை கவனித்து வருகிறார் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X