For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் 2 லட்சம் வீடுகளுக்குள் தண்ணீர்- 10 லட்சம் பேர் பாதிப்பு: முகாம்களில் 1.75 லட்சம் பேர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Madipakkam
மடிப்பாக்கம்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் கன மழை, வெள்ளத்தால் சுமார் 2 லட்சம் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால்10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1.75 லட்சம் பேர் 140 சமூக நலக் கூடங்கள், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முகாம்களில் தங்க இடமில்லாதவர்கள் கடந்த இரு நாட்களாக சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்து வருகின்றனர். பலர் தங்கஇடமில்லாத நிலையில் பசி, பட்டினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலருக்கு மாற்றுத் துணி கூட இல்லை.

Saidapet
சைதாப்பேட்டை

சென்னையில் மீட்புப் பணியில் ராணுவம் முழு வீச்சில் இறக்கி விடப்பட்டுள்ளது. சென்னை நகரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில்படகுகள் மூலம் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

ஆனால், புற நகர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை உதவி, நிவாரணப் பொருட்கள் இன்னும் சென்றடையவில்லை.

Vellacherry
வேளச்சேரி

இதனால் அவர்களது நிலைமை மிக மோசமாக உள்ளது. இரவில் தங்க இடமில்லாமல் மொட்டை மாடிகளிலும், அருகாமைப்பகுதிகளில் வீட்டு வாசல்களிலும் படுத்து பலர் இரவைக் கழித்து வருகின்றனர்.

ஆனாலும் நேற்று முதல் மழை பெய்வது நின்றுவிட்டதால், வெள்ளம் சற்று வடியத் தொடங்கியுள்ளது. இருப்பினும் வரும் 6ம் தேதிவரை (நாளை) வட தமிழகத்தில் விட்டு விட்டு மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

புறநகர் பகுதிகளில் வெள்ளம்:

சென்னை புறநகர்ப் பகுதிகளில் ஏரிகள் உடைந்து அடையாறில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் அந்த தண்ணீரும் ஊருக்குள்புகுந்து மிரட்டியது.

Vellacherry
வேளச்சேரி

வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், பல்லாவரம், தாம்பரம், மணப்பாக்கம், சேலையூர் பகுதிகளில் கழுத்தளவுக்குவெள்ளம் தேங்கியது.

மதுரவாயல்:

மதுரவாயல் ஏரியில் இருந்து விருகம்பாக்கம் கால்வாய்க்கு நீர்வரத்து அதிகரித்ததால் 100 அடி சாலை, எம்எம்டிஏ காலனி,அய்யப்பன் நகர் உள்ளிட்ட நகர்கள் வெள்ளக்காடானது.

அடையாறு வெள்ளத்தால் ஈக்காடு தாங்கல், அம்பாள் நகர், கலைமகள் நகர், லேபர் காலனி போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளில்வெள்ளம் சூழ்ந்தது. இந்த பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் முதல் தளம் வெள்ளத்தில் மூழ்கியது.

Ambattur
அம்பத்தூர்

உடைந்த ஏரிகளில் இருந்து வரும் வெள்ளம் தொடர்ந்து அதிகரிப்பதால் தென் சென்னை மக்கள் அவதிப்படுகிறார்கள். 3 லட்சம்மக்கள் வெள்ளத்தில் பரிதவிக்கிறார்கள். இங்கு மீட்புப் பணியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 300 போலீசார்படகுகள் மூலம் வெள்ளத்தில் தவிக்கும் மக்களை கரையேற்றி வருகிறார்கள்.

மீனவர்களும் மீட்பு பணிக்கு வந்துள்ளனர். 25 படகுகளில் மக்களை வெளியேற்றி வருகிறார்கள், தீயணைப்பு படை வீரர்கள் 100பேர் 12 படகுகளை பயன்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மடிப்பாக்கம், ராம்நகர், விஜய நகரம் பகுதிகள் முற்றிலும்வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

நெடுங்குன்றம்:

நெடுங்குன்றம் ஏரி உடைந்து மப்பேடு, பீர்க்கன் கரணை, இரும்புலியூர், வெங்கம்பாக்கம், ஆலப்பாக்கம் பகுதிகளுக்குள்வெள்ளம் புகுந்துள்ளது. வீடுகளுக்குள் இடுப்பளவு தண்ணீர் நிற்பதால் மக்கள் பொருட்களை அள்ளிக் கொண்டுவெளியேறுகிறார்கள்.

மடிப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி செல்லும் கூட்டு சாலை ஆறாக மாறி உள்ளது. புழுதிவாக்கம், பெரியார் நகர் உள்ளிட்டபகுதிகளில் 10,000 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. இங்கு தீயணைப்பு படையினர் 6 படகுகள், 4 கட்டு மரங்கள் பயன்படுத்தி மீட்புபணியில் ஈடுபட்டனர்.

Kilpauk
கீழ்ப்பாக்கம்

பரங்கிமலை, திரிசூலம் மலைகளில் பெய்த மழை தண்ணீர் வழிந்து ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல்,மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, கோவிலம்பாக்கம், துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளை வெள்ளக் காடாக்கியுள்ளது. இங்குள்ளமக்கள் மீட்கப்பட்டு திருமண மண்டபம், சமூக நல கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு 40,00 வீடுகள் தண்ணீர்மூழ்கியுள்ளன.

அடையாறு வெள்ளத்தால் சைதாப்பேட்டையில் 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அடையாறு வெள்ளத்தில் சிக்கிய 5 பேர்ஹெலிகாப்டரில் மீட்கப்பட்டனர். வடசென்னை புளியந்தோப்பு, வியாசர்பாடி பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை. ஆர்.கே.நகர் தொகுதியில் பாரதி நகர், மீனாம்பாள் நகர், காரணீஸ்வரர் நகர், வினோபா நகர், எம்ஜிஆர் நகர், எழில் நகர், நேரு நகர்உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

ஆந்திராவில் இருந்து வரும் தண்ணீர்:

இதே போன்று ஆந்திராவிலும் கடந்த நில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் அங்கும் ஆறு குளங்கள் உடைந்துவெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் ஆந்திராவில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீர் தமிழகத்தை நோக்கிதிருப்பிவிடப்பட்டுள்ளது.

இதனால் சென்னை புறநகர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. திருவள்ளூர் போன்ற பகுதிகளில் எங்கு பார்த்தாலும் தண்ணீராகஉள்ளது. பலத்த மழையால் சென்னை பகுதி மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் ஆந்திராவில் இருந்து தண்ணீர்வருவதால் புறநகர் பகுதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X