For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை சென்னை-நாகை இடையே கரையை கடக்கிறது புயல்!: பெரும் பீதியில் தமிழகம்!!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தை நெருங்கி வரும் பனூஸ் புயல்

6ம் தேதி 7ம் தேதி
8ம் தேதி காலை8ம் தேதி மாலை9ம் தேதி காலை
வங்கக கடலில் உருவாகியுள்ள ஃபனூஸ் புயல் சென்னைக்கும், நாகப்பட்டனத்திற்கும் இடையே நாளை பிற்பகலில் (சனிகிழமை)கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு உருவான 3 புயல் சின்னங்களும் தமிழகத்தில் கரையைக் கடக்கவில்லை. அவை தமிழக கடலோர பகுதிகளைதாக்காமல் ஆந்திராவுக்கு சென்று விட்டன அல்லது வலுவிழந்து போய் விட்டன. இருப்பினும் புயல் சின்னங்கள் ஏற்படுத்தியபாதிப்பால் பெய்த கன மழையால் தமிழகமே வெள்ளக்காடாகியது.

இந் நிலையில் தற்போது உருவாகியுள்ள ஃபனூஸ் புயல், தமிழக கடலோரப் பகுதியை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது.இந்தப் புயல் தமிழகத்தில் கரையைக் கடக்கவுள்ளது. இருப்பினும் எந்தப் பகுதியில் அது கரையைக் கடக்கும் என்பது தெரியாமல்இருந்து வந்தது.

தென்னிந்தியா முழுவதும் மழை:

இந் நிலையில் புயல் நாளை நாகப்பட்டிணம், சென்னை இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் இன்றுஅறிவித்துள்ளது. பெரும் மேகக் கூட்டத்துடன் இந்தப் புயல் நெருங்குவதால் தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் எனநான்கு மாநிலங்களையும் இந்த மேகக் கூட்டம் வியாபித்து மழையைக் கொட்டும் என்று தெரிகிறது.

இதுதொடர்பாக வானிலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஃபனூஸ் புயல்தற்போது நாகைக்கு கிழக்கு, தென் கிழக்கே 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

தற்போது இது வட மேற்கு திசை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. நாளை பிற்பகலில் நாகைக்கும், சென்னைக்கும் இடையேபுயல் கரையைக் கடக்கும் எனத் தெரிகிறது. எனவே இன்று இரவு முதல் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன்,கன மழையும் பெய்யும்.

மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். புயல் கரையைக் கடக்கவுள்ளதால், தமிழக கடலோரப் பகுதிகளிலும், புதுவையிலும்அடுத்த 48 மணி நேரத்திற்கு மிக கனத்த மழை பெய்யும் என்றார் ரமணன்.

உஷார் நிலை:

புயல் வருவதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கடலூர், நாகப்பட்டனம், புதுக்கோட்டை உள்ளிட்டகடலோர பகுதிகளில் மாவட்ட நிர்வாகங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கடலூரில் புயல் பாதிப்பு அதிகம்இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் அந்த மாவட்ட நிர்வாகம் அதிகபட்ச உஷார் நிலையில் உள்ளது.

உணவு தானியம், உணவு:

உணவு தானிய இருப்பு, மண்ணெண்ணெய் இருப்பு, குடிநீர் ஏற்பாடு ஆகியவற்றை உறுதி செய்யுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது. அவசரத்துக்குத் தேவைப்படும் படகுகளைத் தயார் நிலையில் வைக்குமாறும் ஆணையிடப்பட்டுள்ளது.

மேலும் ஏரி, குளங்கள், கண்மாய்கள் ஆகியவற்றின் நீர் இருப்பைத் தொடர்ந்து கண்காணித்து தேவைப்படும் நேரத்தில்தண்ணீரைத் திறந்துவிடுமாறும், தண்ணீர் வெளியேறுவதற்கான வாய்க்கால்களில் அடைப்புகளை நீக்கவும்உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பான இடங்களில் மக்கள்:

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றவும், அவர்களை பள்ளி, கல்லூரிகள், திருமண மண்டபங்கள்ஆகியவற்றில் தங்க வைக்கவும் இப்போதே முன்னேற்பாடுகளைச் செய்து வைக்குமாறும் ஆணையிடப்பட்டுள்ளது. இந்தமக்களுக்கு லட்சக்கணக்கில் உணவுப் பொட்டலங்களைத் தயார் செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மீட்புப் பணிகளுக்கு ஹெலிகாப்டர்கள், படகுகளைத் தயார் நிலையில் வைத்திருமாறு ராணுவத்திற்கும் தமிழக அரசுகோரிக்கை விடுத்துள்ளது.

புயல் சேதம் குறித்த தகவல்களைப் பரிமாறிக் கொள்ள கட்டுப்பாட்டு அறைகளை உருவாக்கவும் மாவட்ட கலெக்டர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சூறாவளி:

மீனவர்கள் கடலுக்குள் போக வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிக் கூடங்களுக்குவிடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னையிலும் மாநகராட்சி நிர்வாகம் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

புயல் வலுவான நிலையில் நகர்ந்து வருவதால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் குறிப்பாக கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம்மற்றும் புதுவையில் மழை பெய்து வருகிறது. சென்னை நகரில் பலத்த காற்று வீசி வருகிறது. ஆங்காங்கே லேசான மழையும்உள்ளது.

பகலிலேயே இருண்ட சென்னை:

வானம் மேகமூட்டமாக உள்ளது, இருட்டாக காணப்படுவதால் நண்பகல் 12 மணியளவில் கூட சென்னை நகர் மாலை 6மணியைப் போல காணப்படுகிறது.

இன்று காலை முதல் கடலூர், நாகை மாவட்டங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்தஆண்டு சுனாமியால் சின்னாபின்னமாகிப் போன தேவனாம்பட்டனம் பகுதியில் கடல் கொந்தளிப்பு அதிகம் உள்ளது.

ஊருக்குள் கடல் நீர் புகுந்து வருவதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றவண்ணம் உள்ளனர். மாவட்டம் முழுவதும்முழு உஷார் நலையில் வைக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ககந்தீப் சிங் பேடி புயல் அபாய நிலையைமிகவும் தீவிரமாக கண்காணித்து அதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.

எந்த சூழ்நலையையும் சமாளிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தை தயாராக வைத்துள்ளார் ஆட்சித் தலைவர் டாக்டர்ராதாகிருஷ்ணன்.

புயல் எச்சரிக்கைக் கொடி:

இந்த இரு மாவட்டங்களிலும் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை. இதுதவிர சென்னை, புதுவை, எண்ணூ

இதேபோல ராமேஸ்வரம், பாம்பன் ஆகிய பகுதிகளிலும் புயல் அபாய எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. அங்கும்மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.

ராமேஸ்வரம் முதல் சென்னை வரையிலான கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழையும் பெய்யத் தொடங்கியுள்ளது.

கடந்த மூன்று கன மழைகள் மூலம் கிடைத்த பாடங்களை அடிப்படையாகக் கொண்டு வட மாவட்ட நிர்வாகங்கள் தற்போதையபுயலை சமாளிக்க முழு வீச்சில் தயாராக இருக்கின்றன. பொதுமக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

சென்னை ஏரிகளில் கூடுதல் தண்ணீர் திறப்பு:

சமீபத்தில் பெய்த மழையால் ஏரிகள் நிரம்பி வழிந்ததில், ஏரிகளிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த வெள்ள நீர்வடிந்து இயல்பு நிலை திரும்புவதற்குள், இன்று மீண்டும் புதிய காற்றழுத்த மண்டலத்தால் சென்னையில் மழை பெய்யதொடங்கியுள்ளது.

இதனால் சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் கூடுதல் தண்ணீர்திறக்கப்படுவதால் அடையாறு கரையோர பகுதி மற்றும் அதன் அருகில் உள்ள புறநகர் பகுதிகளுக்கு மீண்டும் வெள்ள அபாயஎச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதே போல பூண்டி ஏரி, சோழவரம் ஏரி, புழலேரி ஆகிய ஏரிகளிலும் கூடுதல் தண்ணீர்திறக்கப்படுவதால் அந்த கரையோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X