For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதிக்கு ராஜாஜி விருது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், திமுக தலைவர் கருணாநிதிக்கு, ராஜாஜி விருது வழங்கப்பட்டது.

ராஜாஜி பவுண்டேஷன் சார்பில் கருணாநிதிக்கு ராஜாஜி விருது தர முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான விழா சென்னைராஜா அண்ணாமலைபுரம் இமேஜ் அரங்கில் சனிக்கிழமை மாலை நடந்தது. இதில் மத்திய அமைச்சர் ஜெயபால் ரெட்டி கலந்துகொண்டு ராஜாஜி விருதை கருணாநிதிக்கு அளித்தார்.

காங்கிரஸ் எம்.பி. ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், 1953ம்ஆண்டு நான் சிறைக்குச் செல்ல காரணமாக இருந்தது ராஜாஜி தான்.

இப்போது இந்த சிறப்பு விருது எனக்குக் கிடைக்க காரணமாக இருப்பதும் ராஜாஜிதான். அரசியலில் இப்படிப்பட்ட மாறுதல்எல்லாம் ஏற்படும். இதை அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளால் தான் புரிந்து கொள்ள முடியும்.

அரசியலில் வெற்றிகரமாக ஈடுபட படிப்பறிவு தேவையோ இல்லையோ, பட்டறிவும், அனுபவ அறிவும் கண்டிப்பாக தேவை.அப்படி இருந்ததால் தான் ராஜாஜியும், பெரியாரும் கடைசி வரை நண்பர்களாக வாழ்ந்து மறைந்தார்கள்.

அது தான் நட்பு, கொள்கை நட்பு வேறு, அதற்கு அப்பாற்பட்டு கிடைக்கிற நட்பு வேறு. அரசியலுக்கு அப்பாற்பட்டு சிறந்தநண்பர்களாக கடைசி வரை திகழ்ந்தவர்கள் பெரியாரும், ராஜாஜியும்.

அத்தகைய நட்பு இப்போது இல்லை. நான் அரசியலுக்கு வர பெரியாரும், அண்ணாவும் மட்டும் காரணமல்ல. ராஜாஜியும்முக்கியக் காரணம்.

அவர் 1937ம் ஆண்டு கட்டாயப் பாடமாக இந்தியைக் கொண்டு வந்தார். அதை எதிர்த்து 1938ம் ஆண்டு நான் மாணவனாகஇருந்த போதுபோராட்டம் நடத்தி அரசியலில் அடியெடுத்து வைத்தேன்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுவடைந்து, நேரு , இந்தி கட்டாயமாக்கப்படாது என்று உறுதி மொழி கொடுத்தார். அதைராஜாஜியும் ஒத்துக் கொண்டார்.

அதனால் தான் தமிழர்கள் இரண்டாம் தரமாக்கப்படுவதிலிருந்து தப்பினர். என்னை இந்தியாவின் சிற்பி என்று ஜெயபால் ரெட்டிகூறினார். நான் சிற்பி தான். ஆனால் சிற்பம் உருவாக்க கல்லும், உளியும் வேண்டும்.

உளியாக மக்கள் வேண்டும், கல்லாக காங்கிரஸார் வேண்டும். அப்போது தான் நான் சிறந்த சிற்பியாக திகழ முடியும் என்றார்கருணாநிதி. ராஜாஜியின் கொள்ளுப் பேரனும், ராஜாஜி பவுண்டேஷன் காப்பாளருமான சி.ஆர்.கேசவன் வரவேற்புரைநிகழ்த்தினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X