For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தவறை மறைக்க திமுக மீது ஜெ பழி: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஒழுங்காக நிவாரண உதவிகள் தர முடியாத தனது அரசின் தவறை மறைக்கத் தான் புரளி பரப்பியதாக திமுகவினர் மீது வழக்குப்போட்டு வருகிறார் முதல்வர் ஜெயலலிதா என திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வெள்ள நிவாரணம் பெறச் சென்ற 42 பேர் நெரிசலில் சிக்கி இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக,பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தியான செய்தியைப் பரப்பியதாக கூறி கே.கே.நகர் திமுகமாநகராட்சிக் கவுன்சிலரும் வட்டச் செயலாளருமான தனசேகரனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து கருணாநிதி தலைமையில் வட சென்னை மற்றும் தென் சென்னை மாவட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்களின்அவரச ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது.

கூட்டத்தில் கவுன்சிலர் தனசேகரன், பொய்யான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் வகையிலும், திமுக மீது அவதூறு ஏற்படுத்தும்வகையிலும் அதிமுக அரசு இந்த பொய் வழக்கை போட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் மற்றும் காவல்துறையினரின் போக்கைக் கண்டித்தும் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.

காவல்துறை மற்றும் ஆட்சியாளர்களைக் கண்டித்து வருகிற 25ம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சி கண்டனக் கூட்டத்தைநடத்துவது எனவும், இதன் தொடர்ச்சியாக 27ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக சார்பில்உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவது எனவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி,

இந்த அரசால் ஒழுங்காக நிவாரண உதவி கூட தர முடியவில்லை. அதில் ஏகப்பட்ட குளறுபடி செய்து வருகிறார்கள். அதனால்ஏற்பட்ட நெரிசலில் அப்பாவி மக்கள் பலியாகிவிட்ட நிலையில், தனது அரசின் தவறை மறைக்க எதிர்க் கட்சிகள் மீது வழக்குப்போடுகிறார் ஜெயலலிதா.

அப்படியே வழக்குப் போடுவதாக இருந்தாலும் அதிமுகவின் 130வது வட்டச் செயலாளர் பாஸ்கரன் மீது தான் போட வேண்டும்.அவர் தான் சம்பவம் நடந்த தினத்துக்கு முதல் நாள் ஒலிப்பெருக்கி மூலம் நாளை அதிகாலையிலேயே நிவாரண உதவிவழங்கப்படும் என அறிவிப்பு செய்திருக்கிறார்.

ஆனால், இந்த உயிர்ப் பலிகளை அரசியலாக்கியதன் மூலம் அதிமுக அரசின் பொறுப்பின்மையும், நாகரீகமின்மையும்வெளியாகிவிட்டது.

திமுகவினர் குறித்து சென்னை போலீஸ் கமிஷ்னர் நட்ராஜ் கேவலமான முறையில் பேசியிருக்கிறார். இது குறித்து பிரதமர் அல்லதுஉள்துறை அமைச்சரிடம் கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் புகார் தருவார்கள் என்றார்.

வைகோ கண்டனம்:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், எதிர்க்கட்சிகள் மீது ஆளுங்கட்சி கோபமாக இருப்பதையே இது காட்டுகிறது. கருப்புஞாயிற்றின் பின்னணியில் முதல்வர் ஜெயலலிதாவை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் கோரியுள்ளதால்,கோபத்தைக் காட்ட திமுக கவுன்சிலரைக் கைது செய்துள்ளனர். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்நிறைவேற்றியுள்ளது.

6,000 பேருக்கு ஒரே இடத்தில் நிவாரணம் வழங்க முடிவு செய்த அதிகாரிகளையும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போதிய அளவுபோலீசாரை நிறுத்தாமல் மாமூல் போலீசாரை நிறுத்திய காவல்துறை அதிகாரிகளையும் விட்டுவிட்டு புரளி கிளப்பியதாக எதிர்க்கட்சி மீது பாய்ந்துள்ளது அரசு.

மேலும் முதலில் வந்தால் நிவாரணம், லேட்டாக வந்தால் போச்சு, ஒன்றும் கிடைக்காது என்ற அளவில் உதவிகள் முறையாகவழங்கப்படாததே மக்கள் முண்டியடிக்கக் காரணம் என்பதை அரசு தனக்கு வசதியாக மறந்துவிட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X