For Daily Alerts
மழை: காஞ்சியில் காலரா- இதுவரை பலி 6
காஞ்சிபுரம்:
தொடர்ந்து பெய்து வந்த மழையால் காஞ்சிபுரத்தின் பல்வேறு பகுதிகளில் தொற்று நோய்கள் பரவி வருகின்றன. குறிப்பாகபெரிய காஞ்சிபுரம், ஒலிமுகம்மது பேட்டை பகுதியில் குடிநீர் அசுத்தமடைந்துள்ளது. இதைக் குடித்த பலர் காலரா மற்றும்வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
30க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஸ்டெல்லா என்ற பெண் ஓரிரு நாட்களுக்குமுன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந் நிலையில் மேலும் 5 பேர் தற்போது இறந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து ஒலிமுகம்மதுகான் பேட்டை மற்றும் சுற்றிலும் உள்ள பகுதிகளில் மருத்துவக் குழுக்கள் விரைந்து, நோய்பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
| ||||
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |