• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கார்த்திக் தலைவரானார்- சந்தானத்துடன் டிஷ்யூம்

By Staff
|

சென்னை:

Karthik

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ் மாநில தலைவராக நடிகர் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அக் கட்சியின் மாநில மாநாட்டை நெல்லையில் வரும் பிப்ரவரி மாதம் பிரமாண்டமாக நடத்தப் போவதாககார்த்திக் அறிவித்துள்ளார்.

தமிழக அரசியல் களத்தில் சமீபத்தில் குதித்த நடிகர் கார்த்திக், புதுக் கட்சி தொடங்கப் போவதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்யாரும் எதிர்பாராத வகையில், பார்வர்ட் பிளாக் கட்சியில் சேரப் போவதாக கார்த்திக் திடீரென அறிவித்தார். இதுதொடர்பாகமேலிடத் தலைவர்களுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தது.

இறுதியில் கார்த்திக்கை கட்சியில் சேர்க்கவும், அவருக்கு மாநிலத் தலைவர் பதவியைத் தரவும் கட்சி முடிவு செய்தது. இதற்குதமிழக கட்சி நிர்வாகிகள் குறிப்பாக தற்போது பொதுச் செயலாளராக உள்ள சந்தானம் எம்.எல்.ஏ. கடுமையாக எதிர்ப்புதெரிவித்தார்.

இருப்பினும் கார்த்திக்கை வைத்து தமிழகத்தில் கட்சிக்கு மீண்டும் புத்துயிர் ஊட்ட முடிவு செய்த பார்வர்ட் பிளாக் மேலிடம்,கார்த்திக்கை மாநிலத் தலைவராக நியமிக்க முடிவு செய்து அதை அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தேபப் பிரதா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பார்வர்ட்பிளாக் கட்சித் தலைவராக நடிகர் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது தலைவராக உள்ள தனுஷ்கோடித் தேவர், கட்சியின் மத்திய பொலிட்பீரோ குழுவின் மூத்த உறுப்பினராக பதவிஉயர்த்தப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கட்சியை வளர்ப்பது குறித்தும், கட்சி வளர்ச்சி தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் கார்த்திக் முடிவெடுத்துசெயல்படுத்துவார். தமிழக சட்டசபைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பிப்ரவரி 10ம் தேதி கொல்கத்தாவில் நடக்கும் மத்தியகுழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் கார்த்திக். பார்வர்ட் பிளாக் கட்சியில்சேர முடிவு செய்தது குறித்து அவர் விளக்கமாகப் பேசினார்.

சுபாஷ் சந்திரபோஸால் உருவாக்கப்பட்டு, முத்துராமலிங்கத் தேவரால் தமிழகத்தில் வளர்க்கப்பட்ட கட்சி பார்வர்ட் பிளாக். இந்தக்கட்சியின் தலைவராக என்னை தேர்ந்தெடுத்துள்ளார்கள். மிகவும் உணர்ச்சிகரமாக உணர்கிறேன். காரணம், புதிதாக பிறந்தகுழந்தையை எழுந்து ஓட வைத்துள்ளார்கள்.

பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைமைப் பொறுப்பை நான் ஏற்க வேண்டும் என்று நானாக விரும்பவில்லை. மாறாக, (தேவர்)சமுதாயப் பெரியவர்கள், என்னை விட வயதில் மூத்தவர்கள்தான் என்னை இந்த இயக்கத்தை தலைமை தாங்க வேண்டும் என்றுவலியுறுத்தினர். அதை என்னால் தட்ட முடியவில்லை.

இதைப் பார்க்க எனது தந்தையும், சகோதரியும் இல்லை. அது ஒன்றுதான் எனக்கு வருத்தம். இந்தப் பதவியை தவறாகப்பயன்படுத்த மாட்டேன், மற்றவர்கள் பெருமைப்படும் அளவுக்கு நடந்து கொள்வேன்.

பார்வர்ட் பிளாக் எங்கள் வீடு, எங்கள் குடும்பம். தேவர் வளர்த்த கட்சி. இந்த வீட்டில் இருப்பதுதான் எனது பெருமை.அதனால்தான் பார்வர்ட் பிளாக்கில் சேர முடிவு செய்தேன். பிரிந்து கிடக்கும் பார்வர்ட் பிளாக் கட்சியின் அனைத்துப்பிரிவுகளையும் ஓரணியில் இணைக்க முயற்சிப்பேன்.

வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என கட்சியின் பொதுச் செயலாளரான எம்.எல்.ஏ. சந்தானம் அவராகவேஅறிவித்துள்ளார். அவருக்கு அந்த அதிகாரம் கிடையாது. மத்திய கமிட்டிதான் இதுகுறித்து முடிவெடுக்க முடியும்.

நான் தேர்தலில் நிற்பது குறித்தும் மத்திய கமிட்டிதான் முடிவு செய்யும். நான் உசிலம்பட்டியில் நிற்கப் போவதாக செய்திகள்வெளியாகியுள்ளன, நிற்கலாம்.

நெல்லையில் வரும் பிப்ரவரி மாதம் 15ம் தேதிக்குள் மாநில மாநாட்டை பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளேன். அதற்குமுன்பாக இன்னும் ஒருவாரத்தில் நான் தலைவராகப் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

பார்வர்ட் பிளாக் கட்சியில் யார் வேண்டுமானாலும் சேரலாம். குஷ்பு கூட சேரலாம். கட்சியின் கதவுகள் திறந்தே இருக்கின்றன.கொள்கை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வந்தால் யாரும் சேரலாம்.

தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன். அதை நான் நேசிக்கவில்லை, மாறாக சுவாசிக்கிறேன். ஆனால் சினிமாவில் அரசியல்இருக்காது. ஆரோக்கியமான வசனங்கள் மட்டுமே இடம் பெறும் என்றார் கார்த்திக்.

கார்த்திக்கும் புது அவதாரத்துடன் களத்தில் குதித்துள்ளதால், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.

கூடவே அதிமுக பின்னணியுடன் இயங்கி வரும் சந்தானத்துக்கும் கார்த்திக்குக்கும் இடையே மோதலும் தொடங்கிவிட்டது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X