சாலை விபத்து: முன்னாள் அமைச்சர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
செங்கல்பட்டு:
முன்னாள் அதிமுக அமைச்சரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவுமான சண்முகநாதன் சாலை விபத்தில் பலத்தகாயமடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சண்முகநாதன். இவர் முன்னாள் அமைச்சர் ஆவார்.சண்முகநாதன், டாடா சுமோ காரில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்.அவரது கார் செங்கல்பட்டு அருகே பழவேலி பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த போது அதிகாலை 5 மணியளவில்,காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் போட்டு நின்றுள்ளது.
இதனால் நிலை குலைந்த டாடா சுமோ டிரைவர் நவராஜ் தடுமாறினார். இதில் கார், லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில்டிரைவர் நவராஜ், சண்முகநாதன் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்திருந்த இன்னொரு டிரைவர் ஹரிராம் ஆகிய மூன்று பேரும்படுகாயம் அடைந்தனர்.
சாலை வழியாக சென்ற சிலர் 3 பேரையும் பார்த்து உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.லாரி டிரைவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications