For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேபிள் டிவி நிறுவனங்களை கையகப்படுத்தும் சட்டம் நிறைவேற்றம்: அவையில் திமுக அமளி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சன் டிவியின் சுமங்கலி கேபிள் விஷன் உள்ளிட்ட கேபிள் டிவி நெட்வோர்க் நிறுவனங்களை அரசே எடுத்துக் கொள்ளும் சட்டமசோதா இன்று சட்டசபையில் எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பு, வெளிநடப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.

சன் டிவி குழுமத்தைச் சேர்ந்த சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனம் மற்றும் ஹாத்வே கேபிள் நிறுவனத்தை கையகப்படுத்த தமிழகஅரசு அதிரடியாக ஒரு சட்டம் கொண்டு வந்தது.

பின்னர் இந்தப் பட்டியலில் சென்னை பாபா கேபிள் விஷன், சேலம் பாலிமர் கேபிள், கோவை தமிழ்த்தாய் கேபிள் விஷன், மதுரைஅஜய் கேபிள் டிவி, மதுரை பீப்பிள்ஸ் கேபிள் நெட்வொர்க், நெல்லை கரன் டிவி ஆகியவையும் சேர்க்கப்பட்டன.

தமிழகத்தைப் பொருத்தவரை எஸ்.சி.வி எனப்படும் சுமங்கலி கேபிள் விஷன் தான் 80 சதவீத வீடுகளுக்கு சேட்டிலைட் டிவிஇணைப்பு தந்துள்ளது. இதனால் இந்தச் சட்டமே சன் டிவியை குறி வைத்துக் கொண்டு வரப்பட்டுள்ளதாக எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இந் நிலையில் சட்டமன்றக் கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று இது தொடர்பான சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது.

அப்போது பேசிய முதல்வர் ஜெயலலிதா,

திமுகவை பழி வாங்கும் விதத்தில் இந்த மசோதாவை எங்கள் அரசு கொண்டு வரப்படவில்லை. மக்களுக்கு விரோதமாகசெயல்படும் கேபிள் டிவி நிறுவனங்களை அரசு கையகப்படுத்தவே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. தனிப்பட்ட யாருக்கும்எதிராக கொண்டு வரப்படவில்லை.

முதல் கட்டமாக சென்னை மற்றும் 6 நகராட்சிப் பகுதிகளில் தான் இந்தச் சட்டம் அமலாக்கப்படும். பின்னர் படிப்படியாக இதுமாநிலத்தின் பிற பகுதிகளிலும் அமலாக்கப்படும். அதே நேரத்தில் தெருவோர கேபிள் டிவி இணைப்பாளர்கள் இச் சட்டத்தின் கீழ்கொண்டு வரப்பட மாட்டார்கள்.

மக்களுக்கு எதிராக செயல்படும் யாரையும் நாங்கள் சும்மா விட மாட்டோம் என்றார்.

அப்போது பேசிய திமுக எம்எல்ஏவான ஆற்காடு வீராசாமி, கேபிள் டிவி நிறுவனங்களை அரசு எடுத்துக் கொள்வதை நாங்கள்எதிர்க்கவில்லை. ஆனால், குறிப்பாக சில நிறுவனங்களை மட்டும் குறி வைத்து கையகப்படுத்துவது ஏன்? சேலத்தில் அதிமுகபுள்ளியால் நடத்தப்படும் கேபிள் நிறுவனத்தை ஏன் கையகப்படுத்தவில்லை? என்று கேட்டார்.

அப்போது அதிமுகவினர் எழுந்து ஆற்காடு வீராசாமியை நோக்கி கூச்சலிட்டனர். பதிலுக்கு திமுகவினரும் சத்தமிட்டனர்.

இந் நிலையில் இடைமறித்த சபாநாயகர் காளிமுத்து, ஆற்காடு வீராசாமி மேலும் பேச அனுமதி மறுக்கப்படுகிறது என்றார்.

இதற்கு திமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். வீராசாமியை பேச அனுமதிக்க வேண்டும் என கூச்சலிட்டனர்.ஆனால், அதை சபாநாயகர் ஏற்க மறுக்கவே திமுகவினர் அரசைக் கண்டித்து கூச்சலிட்டபடி அவையில் இருந்து வெளிநடப்புசெய்தனர்.

திமுகவைத் தொடர்ந்து பாமக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.

இதைத் தொடர்ந்து கேபிள் டிவி சட்டத் திருத்தம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தின் மூலம் ஜெயலலிதா குறிப்பிட்ட நகராட்சிப் பகுதிகளில் சுமங்கலி கேபிள் விஷன் அலுவலங்களும்,சொத்துக்களும், ஹாத்வே அலுவகமும் அரசால் கையகப்படுத்தப்படும். இந்த நிறுவனங்களின் கருவிகள், ஆப்டிகல் பைபர்நெட்வோர்க் உள்ளிட்டவற்றை அரசு எடுத்துக் கொள்ளும்.

நிறுவனத்தின் பெயர் உரிமையும் அரசின் கட்டுப்பாட்டில் வரும். இதை எதிர்த்து வழக்கு தொடரவோ, சொத்துக்களைஒப்படைக்க மாட்டோம் என்று மறுக்கவோ முடியாது. மீறினால் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

கையகப்படுத்தப்படும் இந்த நிறுவனங்களுக்கு ஒரு தொகை நஷ்ட ஈடாக வழங்கப்படும். இதன் பின்னர் இந்த நிறுவனங்களைஒரு பொறுப்பாளரை நியமித்து அரசே நடத்தும்.

மேலும், அரசின் கட்டுப்பாட்டில் வரும் இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வேலையை ராஜினாமா செய்துவிடலாம்என்றும், இவர்களில் சிறந்த ஊழியர்களுக்கு மட்டுமே மீண்டும் பணி வழங்கப்படும். வயது, தகுதி, நேர்மை ஆகியவற்றைகணக்கில் கொண்டு மட்டுமே மீண்டும் அவர்களுக்கு பணி தரப்படும் என்றும் முன்னதாக தமிழக அரசு கூறியுள்ளதும்குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் ஒப்புதல் கிடைக்குமா?

தமிழக அரசின் இந்த அதிரடி சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தரக் கூடாது என ஆளுர் சுர்ஜித் சிங் பர்னாலாவை சந்தித்து திமுகதலைவர் கருணாநிதி வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கடந்த 2001ம் ஆண்டு கேபிள் டிவிக்களை முறைப்படுத்துவதற்காக தமிழக அரசு கொண்டு வந்த ஒரு சட்டத்தைகுடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டதை ஆளுநரிடம் திமுக சுட்டிக் காட்டியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X