• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குற்றம்- ஒரு கட்டப் பஞ்சாயத்து கொடுமை

By Staff
|

கரூர்:

ஏரியில் இறங்கி மீன் பிடித்த குற்றத்திற்காக பள்ளி மாணவன் உள்பட 12 பேரை ஊர் மக்கள் அனைவரின் காலிலும் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்தது கட்டப் பஞ்சாயத்துக் கூட்டம்.

கரூர் மாவட்டம் பாதிரிப்பட்டி கிராமத்தில் இச் சம்பவம் நடந்தது.

ஒரு அடிவாங்கிய பித்தளை செம்பு, ஒரு ஆலமரம், அந்தப் பகுதியின் உயர்ந்த ஜாதிப் பெரிசுகள், வெத்தலை வாய்கள்.. இதுதான் ஊர்ப் பஞ்சாயத்து.

ஒடுக்கப்பட்ட ஜாதியினர் ஏதாவது தவறு செய்துவிட்டால் ஊரை விட்டு ஒதுக்குவது என கண்ணாபின்னாவென தீர்ப்பு தருவது,தனது ஜாதிக்காரனாக இருந்தால் 50 ரூபாயை கோவிக்கு கட்டு என அபராதம் விதிப்பது.. இது தான் காலங்காலமாக நடந்து வரும்கிராமத்து (கட்டப்) பஞ்சாயத்து தீர்ப்புகளின் உண்மை நிலவரம்.

சில வருடங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டத்தில் தொலைபேசித் துறையில் வேலை பார்த்து வரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த பெண் அதிகாரியையும் அவரது குடும்பத்தினரையும், மயங்கி விழும் வரை ஊர் மக்கள் அனைவரின் கால்களிலும் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்தது ஒரு பஞ்சாயத்து.

அந்தத் தீர்ப்பைச் சொன்ன உயர் ஜாதியினரை தமிழக்தை விட்டே வெளியேற்றுவோம் என எச்சரித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

இந் நிலையில் கரூர் மாவட்டம் தோகமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பாதிரிப்பட்டி என்ற கிராமத்தில் அதேபோன்ற ஒரு கட்டப்பஞ்சாயத்து நடந்துள்ளது.

பாதிரிப்பட்டியில் பெரிய ஏரி உள்ளது. சமீபத்திய மழை காரணமாக ஏரியில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால் மீன்களும்எக்கச்சக்கம் உள்ளன. ஏரியில் உள்ள மீன்களை குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்த சிலர் தூண்டில் போட்டு பிடித்துள்ளனர். இதைஉயர் சாதியினர் எனக் கூறிக் கொள்ளும் இன்னொரு சமூகத்தினர் எதிர்த்துள்ளனர்.

உடனடியாக ஊர்ப் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. ஏரியில் மீன் பிடித்த குற்றத்திற்காக முனியாண்டி, மணிவேல், தனபால்,சின்னத்துரை, நீலமேகம், செல்வம், கருப்பண்ணன், செல்வராஜ், மாரியப்பன், சின்னத்துரை, சதீஷ் மற்றும் 6வது வகுப்பு படிக்கும்அண்ணாதுரை என்ற மாணவர் ஆகிய 12 பேரை பஞ்சாயத்து முன்பு நிறுத்தினர்.

முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் ரெங்கன் (இவரது அண்ணன் திமுக ஒன்றியச் செயலாளராக இருக்கிறார்) என்பவரதுதலைமையில் 15 பேர் கொண்ட ஊர்க்குழு விசாரணையைத் தொடங்கியது.

விசாரணைக்குப் பின்னர் மீன் பிடித்த 12 பேரும் ஊர் மக்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று 15 நீதிபதிகளும்தீர்ப்பளித்தனர். வேறு வழியில்லாத 12 பேரும் பஞ்சாயத்தார் காலிலும், ஊர் மக்கள் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்டனர்.

அத்தோடு அவர்களுக்கு ரூ. 2,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதைக் கட்ட 13ம் தேதி வரை நீதிபதிகள் அவகாசம்கொடுத்துள்ளனர்.

இதை விடக் கொடுமை, அபராதத் தொகையைக் கட்டாவிட்டால், சம்பந்தப்பட்ட 12 பேரின் வீட்டுப் பெண்களை ஊர் மத்தியில்நிறுத்தி அவமானப்படுத்தவும், சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் உள்ள பொருட்களை பறிமுதல் செய்யும் இந்த நீதிபதிகள்முடிவு செய்தனர்.

இதைக் கேட்டதும் 12 பேரும் பொங்கி எழுந்தனர். இதை இப்படியே விடக் கூடாது என்று முடிவு செய்த அவர்கள் வருவாய்கோட்டாட்சியரிடம் புகார் கூறினர். இதைத் தொடர்ந்து அவரது உத்தரவுப்படி தாசில்தார் முருகேசன் பாதிரிப்பட்டி கிராமத்திற்குவந்து விசாரணை நடத்தினார்.

மீன் பிடிப்பு தொடர்பாக நடந்த கட்டப் பஞ்சாயத்துக் கூட்டம் குறித்து ஊரில் தண்டோரா போட்ட பாதிரிப்பட்டி பஞ்சாயத்துஉதவியாளர் பிச்சை உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். (அவகை பணி நீககம் செய்து என்ன பயன்?)

ஊர் மக்கள் காலில் விழ வைத்த மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவமானத்திற்குஆளாகி புகார் கொடுத்த 12 பேரின் குடும்பங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உயர் ஜாதியினர் என்று சொல்லிக் கொள்ளும் பஞ்சாயத்து ஆசாமிகள் 12 பேர் சார்ந்த ஜாதியினரைத் தாக்கக் கூடும் என்ற நிலைஉள்ளதால் பாதிரிப்பட்டி கிராமத்திலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X