For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லோருக்கும் கிடையாது 1 ரூபாய் எஸ்.டி.டி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 1 ரூபாய்க்கு எஸ்.டி.டி என்ற திட்டம் அனைத்துத் தொலைபேசி வாடிக்கையாளர்ளுக்கும்கிடையாது. அதற்கென்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டத்தை தேர்வு செய்வோருக்கு மட்டுமே இந்த ஒரு ரூபாய் எஸ்டிடிபொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எஸ்டிடி பூத்களில் இந்த வசதியை பயன்படுத்த முடியாதாம்.

மார்ச் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் நிமிடத்திற்கு 1 ரூபாய் கட்டணத்தில் எஸ்.டி.டி. பேசும் வசதியை மத்திய அரசின்பி.எஸ்.என்.எல். நிறுவனம் அமல்படுத்துகிறது. இத்திட்டத்திற்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

இருந்தாலும் பி.எஸ்.என்.எல். தொலைபேசி மற்றும் செல்போன் வைத்துள்ள அத்தனை பேருக்கும் இந்த வசதி கிடைத்து விடாது.புதிய வசதியைப் பெறுவதற்கு சில திட்டங்களை பி.எஸ்.என்.எல். திட்டம் அறிமுகப்படுத்துகிறது. அந்தத் திட்டங்களை தேர்வுசெய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே புதிய வசதி கிடைக்கும்.

பி.எஸ்.என்.எல். செல்போன் வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தைப் பெற வேண்டுமானால், ரூ. 299 என்ற புதிய வாடகைத்திட்டத்தில் சேர வேண்டும். இதில் இலவச டாக் டைம் கிடையாது, அனைத்து அழைப்புகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும்.

அதேபோல ப்ரீ பெய்டு திட்டத்தில் ரூ. 799 மதிப்புள்ள ரீசார்ஜ் கூப்பனை மாதம்தோறும் வாங்கி ரீசார்ஜ் செய்தே ஆக வேண்டும்.அதில் டாக் டைம் ரூ. 550 மட்டுமே. இந்த கூப்பன் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

அதே நேரத்தில், சாதாரண தொலைபேசியில், ரூ. 299 மாத வாடகைத் திட்டத்தில் சேருவோருக்கு மட்டுமே நிமிடத்திற்கு 1ரூபாய்எஸ்.டி.டி. வசதி கிடைக்கும். ஆனால் இந்தத் திட்டத்தில் இலவச அழைப்புகள் கிடையாது. ஆனால் தற்போது எகானமிதிட்டத்தின் கீழ் ரூ. 300 மாத வாடகைக்கு 200 இலவச அழைப்புகள் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதேபோல எஸ்.டி.டி. பூத் எனப்படும் பொதுத் தொலைபேசி மையங்களில் இந்தத் திட்டம் கிடையாது. அங்கிருந்து பேசினால்வழக்கமான கட்டணத்தைத்தான் செலுத்த வேண்டும். வீடுகள், அலுவலகங்களுக்கு மட்டுமே ஒரு ரூபாய்க்கு எஸ்டிடி என்றதிட்டம் பொறுந்தும்.

எனவே, புதிய எஸ்.டி.டி. கட்டண வசதியைப் பெற விரும்புவோர் அதற்குரிய திட்டங்களுக்கு மாறிக் கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் பழைய கட்டணத்தைத்தான் செலுத்த வேண்டியிருக்கும்.

புதிய சலுகையை அறிவித்துள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனம், அதன் உள் விவரங்களை (நாம் மேலே குறிப்பிட்டவை)முழுமையான அளவில் மக்களிடம் கொண்டு செல்லாதது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக பார்க்கும்போது இந்தத் திட்டம் அருமையான திட்டமாகத் தோன்றினாலும், உள் விவரங்களைப் பார்க்கும்போதுவழக்கமான கட்டணத்தையே நாம் செலுத்த வேண்டியிருக்கும் என்பது புரியும்.

அதாவது எஸ்.டி.டி. கட்டணத்தைக் குறைத்து விட்டு, இலவச அழைப்புகளை முழுமையாக ரத்து செய்துள்ளது பி.எஸ்.என்.எல்.இதன் மூலம் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பலன் இருக்கும் என கூற முடியாது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X