For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

8 லட்சம் கோழிகள் புதைப்பு-3 கோடி முட்டை தேக்கம்- தடுப்பு மருந்து இருப்பு இல்லை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:


மகாராஷ்டிரத்தில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ள நிலையில், தமிழகத்தில் இதற்கான தடுப்பு மருந்துகளோ,நோயைக் கட்டுப்படுத்தும் மருந்துகளோ இருப்பில் இல்லை.

கோழிகளை இந்த நோய் தாக்காமல் தடுக்க லோபிலஸ் எச்5என்7 என்ற மருந்து பயன்படுத்தப்பட வேண்டும். இதுவெளிநாடுகளில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

இதை இருப்பு வைக்க மாநில அரசுகளுக்கு தடை உள்ளதாகத் தெரிகிறது. இதனால் தமிழகம் உள்பட எந்தமாநிலத்திலும் இந்த மருந்து இருப்பில் இல்லை என்று தமிழக கால்நடைத்துறை இயக்குனர் டாக்டர் பழனிவேலுதெரிவித்துள்ளார்.

வேடந்தாங்கலில் முன்னெச்சரிக்கை:

வருவதையடுத்து வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திலும், கரிக்கிலி சரணாலயத்திலும் பல முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இங்கு வரும் வெளிநாட்டுப் பறவைகள் தீவிரமாககண்காணிக்கப்படுகின்றன.

இப்போது இந்த சரணாலயங்களில் சுமார் 55,000 பறவைகள் உள்ளன. வெளிநாட்டுப் பறவைகள் மூலம் பறவைக்காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவினர் இங்கு முகாமிட்டு பறவைகளில் ஏதாவது மாற்றங்கள் தெரிகிறதா என்றுகண்காணித்து வருகின்றனர்.

கோழிகள், முட்டைகள் தேக்கம்:

இந் நிலையில் நாடு முழுவதும் பறவைக் காய்ச்சல் பீதியால் கோடிக்கணக்கான கோழிகளும், முட்டைகளும் வாங்கஆளில்லாமல் தேங்க ஆரம்பித்துள்ளன. இதில் கோழி, முட்டை தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஆந்திரா,தமிழகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

நாமக்கல்லில் 3 கோடி முட்டைகள் வீண்?

கோழி, முட்டை தயாரிப்பில் தமிழகத்தின் முக்கிய நகரான நாமக்கல்லில் சுமார் 3 கோடி முட்டைகள்தேங்கியுள்ளன. அதே போல 60 லட்சம் கோழிகளும் வாங்க ஆளில்லாம் தேங்கியுள்ளன.

கோழிகளை இப்போதைக்கு அனுப்ப வேண்டாம் என மொத்த வியாபாரிகள் கூறிவிட்டதால், கோழி, முட்டைஉற்பத்தியாளர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். இந்த முட்டைகள் அனைத்தும் உடனடியாகஅனுப்பப்படாவிட்டால் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாமக்கல்லில் மட்டும் 10,000 கோழிப் பண்ணைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பீதி வேண்டாம்:

இந் நிலையில் தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பரவ வாய்ப்பு மிக மிகக் குறைவு என்றும், வெப்ப மண்டலப்பகுதியான இங்கு கோழிகளுக்கு அந் நோய் அவ்வளவு எளிதாகப் பரவாது என்றும், இதனால் பீதியடையத்தேவையில்லை என்றும் தமிழக கால்நடைத்துறை இயக்குனர் டாக்டர் பழனிவேலு கூறியுள்ளார்.

இதையே பெரும்பாலான கால்நடை மருத்துவர்களும் கூறுகின்றனர்.


இதற்கிடையே, மகாராஷ்டிரத்தில் இருந்து கோழி, முட்டை, கோழித் தீவனம் ஆகியவற்றைக் கொண்டு வர தமிழகஅரசு தடை விதித்துள்ளது.

கிலோ விலை ரூ. 20 மட்டுமே:

இந் நிலையில் பீதி காரணமாக கோழிக்கறியின் விலை படு வீழ்ச்சி அடைந்துள்ளது.இன்று கிலோ ரூ. 20 வரைக்கும் விலை இறங்கி விட்டது.

மீண்டும் கேரளாவுக்கு தமிழக கோழிகள்

இந் நிலையில் பறவைக் காய்ச்சல் காரணமாக தமிழக கோழிகளுக்கு தடை விதித்திருந்த கேரள அரசு அந்தத் தடையை தளர்த்தியுள்ளது.

கேரள அரசு தடையால் நாமக்கல் மண்டலத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் 30 லட்சம் கோழிகள், 50 லட்சம் முட்டைகள் தேக்கமடைந்தன.

இதுகுறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து மாநில கால்நடைத்துறை செயலாளர் பழனிவேலு, கேரள மாநில அதிகாரிகளுடன் தொலைபேசி மூலம் பேச்சு நடத்தினார்.

இதன் எதிரொலியாக, தமிழக கால்நடைத்துறை அதிகாரிகள், நோயற்ற கோழி என்ற சான்றிதழ் தரும் கோழிகளை மட்டும் கேரளாவுக்குள் அனுமதிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதையடுத்து இன்று காலை முதல் பரிசோதிக்கப்பட்ட கோழிகள், அதிகாரிகளின் சான்றிதழுடன் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

8 லட்சம் கோழிகள் புதைப்பு:

இதற்கிடையே மகாராஷ்டிரத்தில் பண்ணைகளில் வளர்க்கப்பட்ட 8 லட்சம் கோழிகள் மயக்க மருந்து கொடுத்து கொல்லப்பட்டு, மிகப் பெரிய குழிகள் தோண்டப்பட்டு புதைக்கப்பட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X