For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

35 கேட்கும் பாமக: 30க்கு திமுக ரெடி!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 35 தொகுதிகளை ஒதுக்கியது போலதங்களுக்கும் 35 இடங்கள் தர வேண்டும் என்று திமுகவிடம் பாமக வற்புறுத்திவருவதாகத் தெரிகிறது. ஆனால் 30 இடங்கள் மட்டுமே தர திமுக தலைவர்கருணாநிநதி தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் பெரும் இட நெருக்கடி நிலவுகிறது. கூட்டணியிலிருந்து மதிமுகவிலகி விட்டதால் கூடுதல் சீட் கேட்டு அத்தனை கட்சிகளும் கருணாநிதியை அனத்தஆரம்பித்துள்ளன.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்கட்சிகளுடன் இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தையை கருணாநிதி முடித்துள்ளார்.

இந்தப் பேச்சுக்களின்போது தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு விட்டதாகத் தெரிகிறது.இருப்பினும் மற்ற கட்சிகளுடன் பேசி முடித்து விட்டு தொகுதிப் பங்கீட்டைஅறிவிக்கவுள்ளனர்.

இந் நிலையில் 35 தொகுதிகளைக் கேட்டு திமுகவை பாமக, நிர்ப்பந்தம் செய்வதாகத்தெரிய வந்துள்ளது. கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக,27 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 20 இடங்களில் வெற்றி பெற்றது.

இந்த முறை திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, கடந்த முறையை விடகூடுதல் இடங்கள் கேட்டு திமுகவை ஆரம்பத்தில் இருந்தே நெருக்கி வருகிறது.

தற்போது மதிமுக விலகி விட்டதால், மேலும் சில இடங்களைப் போட்டுத் தருமாறுபாமக கோரியுள்ளது.

மதிமுகவுக்கு 35 தொகுதிகளை அதிமுக தந்துள்ளதால், அதற்கு இணையாகதங்களுக்கும் 35 தொகுதிகளைத் தர வேண்டும் என திமுகவிடம் ராமதாஸ்கண்டிப்பான கோரிக்கையை வைத்துள்ளதாகத் தெரிகிறது.

ஆனால் அதிகபட்சம் 30 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என திமுக தரப்பில்பாமகவுக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் ஒரிரு இடங்களைக்கூடுதலாகத் தந்து டீலை முடிக்க கருணாநிதி முடிவு செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு 45 இடங்கள் வரை தரப்படலாம் என பேச்சு அடிபடுகிறது. இருகம்யூனிஸ்ட் கட்சிகளும் இரட்டை இலக்கத் தொகுதிகளைப் பெற்று விடுவதும்உறுதியாகிவிட்டது.

இந்த வார இறுதிக்குள் தொகுதிப் பங்கீட்டை கருணாநிதி அறிவித்துவிடுவார் எனதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

கருணாநிதி- சேதுராமன் சந்திப்பு:

இந் நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை மூவேந்தர் முன்னேற்றக் கழகதலைவர் டாக்டர் சேதுராமன் இன்று சந்தித்தார். அக்கட்சிக்கு (அதாவது டாக்டர்சேதுராமனுக்கு) ஒரு தொகுதி வழங்கப்படும் எனத் தெரிகிறது.

இதுவரை எல்லா தேர்தல்களிலும் கருணாநிதியின் இதயத்திலேயே இடம் பிடித்துவந்தவர் இந்த டாக்டர்.

டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் நிறுவியுள்ள தமிழ் பாதுகாப்புஅமைப்பில் டாக்டர் சேதுராமனும் இடம் பெற்றுள்ளார்.

கருணாநிதியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சேதுராமன்,

சட்டசபைத் தேர்தலில் எங்களது கட்சி சார்பில் போட்டியிட தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என்று கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தேன். தருவதாகஉறுதியளித்துள்ளார் என்றார்.

தொகுதிகள் என்று சேதுராமன் பன்மையில் கூறினாலும் ஒரு தொகுதி மட்டுமேஅக்கட்சிக்கு ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. அதில் சேதுராமனே போட்டியிடுவார்.

உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என திமுக நிபந்தனைவிதித்துள்ளதாகவும் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X