For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக கூட்டணி: ஸ்ரீதர் வாண்டையாருக்கு 1 சீட்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அதிமுக கூட்டணியில் ஸ்ரீதர் வாண்டையார் தலைமையிலான மூவேந்தர் முன்னேற்றக்கழகம் இணைந்தது. அக்கட்சிக்கு ஒரு சீட் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், அதிமுக கூட்டணியில் இதுவரை மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள்,இந்திய தேசிய லீக், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை இணைந்துள்ளன.இதில் மதிமுகவுக்கு 35 சீட், விடுதலைச் சிறுத்தைகளுக்கு 9 சீட், இந்திய தேசிய லீக்கட்சிக்கு 1 சீட், முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் நீண்டகாலமாகவே அதிமுகவை ஆதரித்து வரும் முக்குலத்தோர்சமூகத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் வாண்டையார் தலைமையிலான மூவேந்தர் முன்னேற்றக்கழகம் தற்போது அதிமுக அணியில் இணைந்துள்ளது. கட்சித் தலைவர் ஸ்ரீதர்வாண்டையார் தலைமயிலான கட்சிக் குழு இன்று ஜெயலலிதாவை சந்தித்தது.

அப்போது அக்கட்சிக்கு ஒரு சீட் வழங்குவதற்கான உடன்பாடு ஏற்பட்டது. இதில்வாண்டையாரும்,ஜெயலலிதாவும் கையெழுத்திட்டனர். மூவேந்தர் முன்னேற்றக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள தொகுதியில், இரட்டை இலை சின்னத்தில் ஸ்ரீதர்வாண்டையார் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.

திருமா: வை.பா. எரிச்சல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் 9 தொகுதிகள்கொடுத்துள்ளது தேவையற்றது, அது ரொம்ப அதிகம் என்று அம்பேத்கர் மக்கள்இயக்கத் தலைவர் வை.பாலசுந்தரம் கூறியுள்ளார்.

பழம்பெரும் தலித் தலைவர்களில் ஒருவர் வை.பாலசுந்தரம். எம்.ஜி.ஆர். காலத்தில்அவருக்கு அதிமுக முக்கியத்துவம் கொடுத்து வந்தது. அவருக்குப் பின் வை.பா.வின்க்கியத்தும் குறைந்து போனது.

திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி என புதிய ஏராளமான தலித் தலைவர்கள்உருவாகிவிட வை.பா. செல்வாக்கு இழந்த தலைவராகி விட்டார்.

இருப்பினும் அம்பேத்கர் மக்கள் இயக்கம் என்ற தனது அமைப்பைவை.பா.தொடர்ந்து நடத்தி வருகிறார். சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்துவிழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் வை.பா. பேசுகையில்,

எங்களுக்கு மரியாதை கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி வைப்போம்.இல்லாவிட்டால் தனித் தன்மையுடன் தனித்துப் போட்டியிடுவோம்.

தலித் மக்களின் நலனுக்காக அனைத்துத் தலித் தலைவர்களையும் ஒருங்கிணைக்கமுயற்சி மேற்கொண்டுள்ளேன். ஆனால் அதற்குள் திருமாவளவன் அவசரப்பட்டுஅதிமுக அணியில் சேர்ந்து விட்டார்.

அவரது கட்சிக்கு 9 சீட்கள் தரப்பட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது, இது ரொம்பஅதிகம்.

கடந்த 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் கருணாநிதியை ஆதரித்தோம். அத்தேர்தலில்கருணாநிதி வெற்றி பெற்று முதல்வரானார். இதேபோல 2001ல் ஜெயலலிதாவைஆதரித்தோம். அவரும் முதல்வர் ஆனார். எனவே எங்களது ஆதரவு உள்ளவர்களேஅடுத்த முதல்வராக முடியும் என்றார் வை.பா.

அலையும் புதிய நீதிக் கட்சி:

இதற்கிடையே சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப்போட்டியிட, புதிய நீதிக் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது.

ஏ.சி.சண்முகம் தலைமையிலான புதிய நீதிக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம்சென்னையில் நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் சண்முகம் பேசுகையில்,

பொதுக்குழுவில் பேசிய பலரும், அதிமுவுடன் கூட்டணி அமைத்துப்போட்டியிடலாம் என ஆலோசனை கூறினர்.

தமிழகத்தில் 70 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக நாங்கள்உள்ளோம். 20 தொகுதிகளில் தலா 20,000 ஓட்டுக்களும், 30 தொகுதிகளில் தலா30,000 வாக்குகளும் எங்களுக்கு உள்ளன.

கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று 5 தொகுதிகளில்போட்டியிட்டோம். சுயேச்சையான சின்னம் மற்றும் கூட்டணியில் ஏற்பட்டசிக்கல்களால் தோல்வியைத் தழுவினோம்.

எனவே வருகிற தேர்தலில், மரியாதைக்குரிய தொகுதிகளைத் தரும் கட்சியுடன்கூட்டணி அமைத்து, அந்தக் கட்சியின் சின்னத்திலேயே போட்டியிடத் தயாராகஇருக்கிறோம்.

அதிமுக அரசால் எனது கல்லூரி இடிக்கப்பட்டது என்று கூற முடியாது. எங்கள் பக்கம்சில தவறுகள் உள்ளன. அது கோர்ட்டில் உள்ளதால் விரிவாக பேச விரும்பவில்லைஎன்றார் சண்முகம்.

சண்முகத்திற்குச் சொந்தமான சென்னை மதுரவாயல் எம்.ஜி.ஆர். நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான கட்டடங்கள், கூவம் ஆற்றை ஆக்கிரமித்துக்கட்டப்பட்டுள்ளன. இந்தக் கட்டடங்களை இடித்துத் தள்ள தமிழக அரசு அதிரடிநடவடிக்கை எடுத்தது.

சண்முகம் மீதும் வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து அவர் தலைமறைவாகிவிட்டு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற பின்னரே வெளியில் தலைகாட்டினார்என்பது நினைவிருக்கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X