• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மதிமுக, வி.சி. தொகுதிகள் நாளை அறிவிப்பு?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்டகட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புசெவ்வாய்க்கிழமை வெளியாகும் என கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவுக்கு 35 தொகுதிகளும், விடுதலைச்சிறுத்தைகளுக்கு 9 தொகுதிகளும், இந்திய தேசிய லீக் , ஐ.என்.டி.யூ.சிதொழிற்சங்கத்திற்கு தலா 2 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி,வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதியும்ஒதுக்கப்பட்டுள்ளன.

இவர்களுக்கான தொகுதிகளை அடையாளம் காணும் பணியில் அதிமுக தேர்தல்குழுவும், சம்பந்தப்பட்ட கட்சிகளின் குழுக்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

மதிமுகவுடன் இன்று 3வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் மதிமுக சார்பில்எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன், திருப்பூர் துரைசாமி ஆகியோரும்,அதிமுக தரப்பில் ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார், செங்கோட்யையன் ஆகியோரும்கலந்து கொண்டனர்.

மற்ற கட்சிகளுடனும் இறுதிச் சுற்று பேச்சுவார்த்தையும் இன்றே நடைபெறுகிறது.இன்று இரவுக்குள் அனைத்துக் கட்சிகளுக்கும் ஒதுக்கப்படும் தொகுதிகள் இறுதிசெய்யப்பட்டு விடும் எனத் தெரிகிறது.

நல்ல நாள் பார்க்கும் முதல்வர் ஜெயலலிதா நாளை பெளர்ணமி, என்பதால் நாளையேஇறுதிப் பட்டியல் அறிவிக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 35 தொகுதிகளில் அவர்கள் கேட்டஇடங்கள் 17 மட்டுமே தரப்பட்டுள்ளதாகவும், மிச்சமுள்ள 18 தொகுதிகளும்அதிமுகவாக பார்த்து முடிவு செய்தவை என்றும் கூறப்படுகிறது.

இதனால் மதிமுக தரப்பு படு அப்செட்டில் உள்ளது.

அதே போல விடுதலைச் சிறுத்தைகள் விஷயத்திலும் அவர்கள் விரும்பியதுகிடைக்காது என்றே தெரிகிறது. பாமகவுடன் மோதுவதைத் தவிர்க்க விரும்பியதிருமாவளவன், அவர்கள் நிற்கும் தொகுதிகை அவாய்ட் செய்துவிட்டு லிஸ்டைத்தந்தார்.

அத்தோடு இந்தத் தொகுதிகளைத் தான் நாங்கள் கேட்டிருக்கிறோம் என்றுபட்டியலையும் வெளியிட்டார். நம் கைக்கு மட்டுமே வந்திருக்க வேண்டிய இந்தப்பட்டியலை யாரைக் கேட்டு திருமா பத்திரிக்கைகளுக்கு வெளியிட்டார் என்றுபோயஸ் கார்டன் கடுப்பில் உள்ளது.

இதனால் திருமா கேட்ட தொகுதிகள் கிடைக்காது என்று கூறப்படுகிறது.

அதே போல விஜய டி.ராஜேந்தர் தனது கட்சிக்கு லால்குடி, சென்னையில் ஒருதொகுதி உள்பட உடையார் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் 3 இடங்களைக்கேட்டுள்ளார். அதைக் கேட்டு அதிமுக தேர்தல் குழுத் தலைவர் ஓ.பி. சிரித்துவிட்டு,உங்களுக்கு ஒரு சீட் தான் என்றாராம்.

இதையடுத்து டி.ஆர். தனது வசனத்தை எடுத்துவிட கடுப்பான ஓ.பி அம்மாகிட்டபேசிக்குங்க என்று அனுப்பி வைத்துவிட்டார். அடுத்த நாள் டி.ஆரைக்கூப்பிட்டுவிட்ட முதல்வர் ஜெயலலிதா, உங்களுக்கு ஒரு சீட் தர்றது பத்திக் கூடஇன்னும் முடிவெடுக்கலை.

முடிவு பண்ணினதும் கூப்பிட்டுவிடுவோம். நீங்கள் பிரச்சாரத்துல கவனம் செலுத்துங்கஎன்று மூக்கை அறுத்து அனுப்பி வைத்துள்ளார்.

மூவேந்தர் முன்னேற்றக் கழகம் நடத்தி வரும் ஸ்ரீதர் வாண்டையாரும் எங்களுக்கு 5தொகுதிக்கு மேலே வேணும் என்று கேட்க, அவரை போயஸ் கார்டனுக்குவரவழைத்தார்களாம்.

ஒரே ஒரு சீட் தான்.. இந்த இடத்துல ஜோரா ஒரு கையெழுத்து போடுங்க என்றுசொல்லி கையெழுத்து வாங்கிய பின்னர் தான் முதல்வர் ஜெயலலிதாவைப்பார்க்கவே அவருக்கு அனுமதி கிடைத்திருக்கிறது.

இதைவிடக் கொடுமையான பிழைப்பு திண்டிவனம் ராமமூர்த்தியுடையது. திமுகவுலகாங்கிரசுக்கு 48 குடுத்துருக்காங்க.. நீங்க நமக்கு ஒரு ஐம்பத போட்டுத் தாங்க என்றுகுண்டு போட தெறித்து ஓடியிருக்கிறார்கள் அதிமுக தரப்பில்.

அட மதிமுகவுக்கு 35 குடுத்தீங்கல்ல எனக்கு 36யையாவது குடுங்க சந்தோஷமாபோறேன் என்றாராம்.

இல்லீங்க உங்களுக்கு மொத்தமே மூணு சீட் தான் என்று ஓ.பன்னீர் தரப்பு எடுத்துச்சொல்ல கோபத்தோடு போனவர் திரும்பி வரவேயில்லை.

அவரை ஜெயலலிதாவும் கூப்பிடவில்லை. சுப்பிரமணியம் சுவாமி மாதிரி நடுவுலவுட்டுறுவாங்க என்று பயந்து போன திண்டிவனம் சமீபத்தில் ஜெயலலிதாஹெலிகாப்டர் சோதனை ஓட்டத்துக்காக தலைமைச் செயலகம் அருகே உள்ளகடற்படை ஹெலிபேடுக்கு வர, அதை அறிந்து அங்கு போய் நின்றிருக்கிறார்.

ஆனால், அவரை பார்த்தும் பார்க்காதது மாதிரி போய்விட்டாராம் ஜெயலலிதா.வெந்து, நொந்து, கொந்தளித்துப் போயுள்ளார் திண்டீஸ்.

இவர்கள் எல்லாம் சீட்டு கேட்டு அலைய, இன்னும் பல கட்சிகள், எங்களுக்குசீட்டெல்லாம் வேணாம், நாங்க உங்களுக்காக பிரச்சாரம் பண்றோம். காசு குடுங்கஎன்று வந்து நிற்கிறார்களாம்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X