For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கார்த்திக்கை மிரட்டும் அதிமுக? கட்சி உடைகிறது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அகில இந்திய பார்வர்ட் பிளாக் தலைவர் நடிகர் கார்த்திக்குக்கு அதிமுக தரப்பில்இருந்து பயங்கர மிரட்டல் வந்து கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சந்தானத்தை கட்சியில் சேர்க்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதாவால் கண்டிசன்போடப்பட்ட கார்த்திக் அதை மீறவே அவரை கூட்டணியில் சேர்க்காமல்வெட்டிவிட்டது அதிமுக.

இந் நிலையில் முக்குலத்தோர் இளைஞர்கள் மத்தியில் தனக்கு உள்ள செல்வாக்கைஇந்தத் தேர்தலில் நிரூபிக்கும் முடிவில் இருக்கிறார் கார்த்திக்.

இதனால் தான் ஜெயலலிதாவை எதிர்த்து ஆண்டிப்பட்டியில் போட்டியிடவும் தயார்என்று அறிவித்தார்.

ஆனால், அந்த அறிவிப்பை சில நாட்களிலேயே வாபஸ் பெற்றார் கார்த்திக். ஒருதலைவரை எதிர்த்துப் போட்டியிடும் அநாகரீகச் செயலுக்கு நான் ஒருபோதும் துணைபோக மாட்டேன் என்று அறிவித்தார்.

இதன் பின்னணியில் அதிமுகவின் பயங்கர மிரட்டல் உள்ளதாகக் கூறப்படுகிறது.

கார்த்திக்கைச் சந்தித்த அதிமுகவின் மூத்த தலைகள் சில, இந்தத் தேர்தலில்அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒதுங்கியிருக்கவேண்டும். இல்லையென்றால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்துவிட்டுச்சென்றதாகத் தெரிகிறது.

மேலும் தனது கட்சியின் அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் கார்த்திக் ஆலோசனைநடத்திக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சசியின் கணவர் நடராஜனின் நண்பரானமதுரை ஆதீனம் (இவரும் முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தவரே) கார்த்திக்கை 2மணி நேரம் தனியே சந்தித்துப் பேசியதாகவும் தெரிகிறது.

அதிமுகவில் 3 சீட் தருவார்கள். அதை வாங்கிக் கொண்டு பேசாமல் கூட்டணி சேர்ந்துகொள்ளுங்கள்.. இல்லாவிட்டால் ஒதுங்கி இருங்கள் என்று அன்பாக கூறிவிட்டுச்சென்றதாகத் தெரிகிறது.

இதனால் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டி என்ற நிலையில் இருந்து கார்த்திக் பின் வாங்கியதாகக்கூறப்படுகிறது. மேலும் அதிமுக தரப்பில் இருந்து கார்த்திக்குக்கு தொடர்ந்து மிரட்டல்களும் நெருக்குதல்களும்வந்தவண்ணம் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன.

அதிமுகவின் வாக்கு வங்கியான முக்குலத்தோர் வாக்குகளை கார்த்திக் பிரித்தால் அது திமுகவுக்கு சாதமாகிவிடும்என உளவுத்துறையும் ஆளும் தரப்புக்கு தகவல் தந்துள்ளது.

தனக்கு மிரட்டல்கள் வருவது உண்மை தான் என்றும், ஆனால், யாருடைய மிரட்டலுக்கும் பயப்பட மாட்டேன்என்றும் கார்த்திக் கூறியுள்ளார்.

கட்சி உடையும் அபாயம்:

இந் நிலையில் கார்த்திக்கின் போக்கினால் அதிருப்தி அடைந்துள்ள பார்வர்ட் பிளாக் நிர்வாகிகள் சிலர், நிர்வாகக்குழுவை மதுரையில் கூட்டவுள்ளனர். இதனால் கட்சியில் பிளவு ஏற்படும் எனத் தெரிகிறது.

இதன் பின்னணியிலும் அதிமுகவும் சந்தானமும் இருப்பதாக கார்த்திக் தரப்பு சந்தேகிக்கிறது.

111 தொகுதிகளில் தனித்துப் போட்டி என்ற முடிவில் கார்த்திக் உள்ளார்.

இந்தப் பின்னணியில், கார்த்திக்குக்கு எதிராக கட்சியின் நிர்வாகிகள் சிலர் இப்போது போர்க்கொடிஉயர்த்தியுள்ளனர். மதுரையில் பார்வர்ட் பிளாக் கட்சி நிர்வாகிகள் முருகன், பத்மநாபன் உள்ளிட்டோர்இதுகுறித்துக் கூறுகையில்,

கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் கார்த்திக்கை தலைவராக்கினோம். பாரம்பரியாமாகஅதிமுகவுக்குத்தான் முக்குலத்தோர் சமூகத்தினர் வாக்களித்து வருகின்றனர்.

ஆனால் அதைக் கூட உணர முடியாமல், கார்த்திக் திமுகவுக்கு ஆதரவாகவே இருந்து வருகிறார். கூட்டணிதொடர்பாக அதிமுகவுடன் பேசியபோது, மூவேந்தர் ன்னேற்றக் கழகம் மற்றும் சந்தானத்திற்கு ஆளுக்கு ஒரு சீட்கொடுத்து விட்டோம்.

உங்களுக்கு 7 சீட் தருகிறோம் என்றார்கள். இதை கார்த்திக்கிடம் தெரிவிக்க 3 நாள் முயன்றும் அவரைப் பிடிக்கமுடியவில்லை. அவருடைய மனமெல்லாம் திமுகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்பதிலேயே இருந்தது.

திமுகவிடம் கட்சியை அடகு வைக்க முயல்கிறார் கார்த்திக். கட்சியினரின் உண்மையான உணர்வுகளைப்புறக்கணிக்கிறார்.

கார்த்திக்குக்கு எதிராக வரும் 6ம் தேதி மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தை மதுரையில் கூட்டியுள்ளோம்.

அதில், கார்த்திக் அறிவித்துள்ள வேட்பாளர்களில் பலரும் கலந்து கொள்வார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.

கூட்டணிப் பிரச்சினை காரணமாக பார்வர்ட் பிளாக் மீண்டும் உடையுமா என்பது 6ம் தேதி தெரிய வரும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X