For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி எங்கிருந்து நிலம் தருவார்: ஜெ கேள்வி

By Staff
Google Oneindia Tamil News

கிள்ளியூர்:

உழவர் பாதுகாப்புத் திட்டத்தைப் போல மீனவர் பாதுகாப்புத் திட்டத்தை அதிமுகஅரசு கொண்டு வரும் என்று தல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் பிரசாரம் செய்த முதல்வர் ஜெயலலிதா கன்னியாகுமரிமாவட்டத்தில் தற்போது முகாமிட்டுள்ளார். ராதாபுரம், நாகர்கோவில், கன்னியாகுமரிதொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட ஜெயலலிதா கிள்ளியூர் தொகுதியில் தனதுபிரசாரத்தை முடித்தார்.

கிள்ளியூரில் அதிக வேட்பாளர் டாக்டர் குமாரதாஸுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துஅவர் பேசுகையில், மீனவர் நலனுக்காக எனது அரசு தொடர்ந்து பல்வேறுநடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் சென்று தமிழக மீனவர்கள் உயிரிழப்பதையும்,அடிபடுவதையும் தவிர்க்க கச்சத்தீவை நிரந்தரக் குத்தகைக்கு எடுக்க வேண்டும் என்றுபிரதமரை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

உழவர் பாதுகாப்புத் திட்டம் அனைத்துத் தரப்பினரின் பாராட்டுக்களையும்பெற்றுள்ளது. எனவே அதை பின்பற்றி மீனவர் நலனுக்காக மீனவர் பாதுகாப்புத்திட்டத்தை எனது அரசு கொண்டு வரும் என்றார் ஜெயலலிதா.

முன்னதாக நெல்லையில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் நயினார் நாகேந்திரனைஆதரித்துப் பிரசாரம் செய்து பேசுகையில்,

தமிழகம் முழுவதும் உள்ள ஏழை விவசாயிகளுக்கு தலா 2 ஏக்கர் நிலம் தரப்போவதாக கருணாநிதி கூறியுள்ளார். அப்படிப் பார்த்தால் 55 லட்சம் ஏக்கர் நிலத்தைஅவர் தந்தாக வேண்டும்.

உண்மையில் தமிழக அரசிடம் வெறும் மூன்றரை லட்சம் ஏக்கர் தரிசு நிலம்தான்உள்ளது. 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்கள் தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலங்கள்ஆகும்.

எனவே போகாத ஊருக்கு வழி சொல்வதைப் போல 55 லட்சம் ஏக்ககர் தரிசுநிலங்களை ஏழைகளுக்கு வழங்கப் போவதாக கூறி வருகிறார் கருணாநிதி.

எனது அரசு கொண்டு வந்த ஒருங்கிணைந்த தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தைசரியாகப் புரிந்து கொள்ளாமல், தெரிந்து கொள்ளாமல் கருணாநிதி இவ்வாறுகூறியுள்ளார்.

4 முறை முதல் அமைச்சராக இருந்த கருணாநிதிக்கு அரசிடம் உள்ள தரிசு நிலம்எவ்வளவு என்பது கூடத் தெரியவில்லை என்பது வேடிக்கைதான்.

அரசிடம் உள்ள பயிரிடக் கூடிய தரிசு நிலம் அனைத்தும் எம்.ஜி.ஆர். காலத்திலும்,எனது முந்தையை ஆட்சிக் காலத்திலும் ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டு விட்டது.

எனவே 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் அரசிடம் இருப்பது போலவும், அதை இவர்கள்ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு தூக்கி கொடுக்கப் போவது போலவும் கருணாநிதிபேசுவது அபத்தமானது, மக்களை ஏமாற்றும் கண் துடைப்பு வேலையாகும்.

அரசிடம் போதிய தரிசு நிலங்கள் இல்லாத காரணத்தினால்தான் எனது அரசுஒருங்கிணைந்த தரிசு நில மேம்பாட்டுத் திட்டம் என்ற ஒப்பற்ற திட்டத்தைக் கொண்டுவந்தது. அதன்படி பயிரிடப்படாமல் கிடக்கும் தனியார் தரிசு நிலங்களை வாங்க ஏழைஆதி திராவிட மகளிருக்கு அரசு உதவும்.

நில மதிப்பில் 50 சதவீதம் மானியமாகவும், 50 சதவீதம் வங்கிக் கடனாகவும்வழங்கப்படும். இத்திட்டம் குறித்து நான் பலமுறை விளக்கியும் கருணாநிதிக்குப்புரியவில்லையா அல்லது புரியாதது போல பாவனை செய்து பேசுகிறாரா என்றுஎனக்குப் புரியவில்லை என்றார் ஜெயலலிதா.

TAMILNADU NEWS INDIA NEWS
[an error occurred while processing this directive]
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X