For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அம்மா சும்மா சொல்கிறார்: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் 20 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இருப்பதாக கூறி விட்டு இப்போது நிலமேஇலலை என்று கூறுபவரெல்லாம் தமிழகத்தின் முதல்வர் பதவியில் இருக்கிறார் என்றுஜெயலலிதாவை திமுக தலைவர் கருணாநிதி கிண்டல் செய்துள்ளார்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில், 55 லட்சம் ஏழை விவசாயிகளுக்கு நிலம்வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதை கண்டித்து செய்தியாளர்களிடம்பேசிய ஜெயலலிதா, தமிழகத்தில் மொத்தமே மூன்றரை லட்சம் ஏக்கர் தரிசு நிலம்தான்இருக்கிறது. இதில் எப்படி 55 லட்சம் ஏழை விவசாயிகளுக்கு கருணாநிதி நிலம் தரமுடியும் என்று கேட்டிருந்தார்.

இந் நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி,

அம்மா சும்மா சொல்கிறார். கடந்த 2001-02ம் ஆண்டுக்கான தமிழக அரசின்பட்ஜெட்டில் தமிழகத்தில் 20 லட்சம் தரிசு நிலம் மேம்படுத்தப்படும் என்றுகூறப்பட்டுள்ளது. மேலும், ஜெயலலிதா அரசு அறிவித்த பண்ணைத் தோட்டதிட்டத்திற்கு 20 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் தரப்படும் என்றும் இதே ஜெயலலிதாதான்சொல்லியுள்ளார்.

20 லட்சம் ஏக்கர் நிலம் இருப்பதாக கூறி விட்டு இப்போது நிலமே இல்லை என்றுசொல்பவர் எல்லாம் தமிழகத்தின் முதல்வராக இருப்பது வேதனை. அப்போது இருந்தநிலம் என்னவானது? சாப்பிட்டுவிட்டார்களா? என்று கேட்டார் கருணாநிதி.

நம்புங்கள், கலர் டிவி தருவேன்:

முன்னதாக நேற்று மாலை சேப்பாக்கம் தொகுதியில் வீதி வீதியாக சென்று கருணாநிதிபிரசாரம் மேற்கொண்டார். தனி ஜீப்பில், விசேஷமாக வடிவமைக்கப்பட்டஇருக்கையில் அமர்ந்தவாறு, ஒருபுறம் ஸ்டாலின், மறுபுறம் தயாநிதி மாறன்உடனிருக்க கருணாநிதி சேப்பாக்கம் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் வலம் வந்துபிரசாரம் செய்தார்.

சிந்தாதிரிப்பேட்டயிைலிருந்து அவரது பிரசாரம் தொடங்கியது. கருணாநிதிபேசுகையில், மரியாதை நிமித்தம் உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கவந்துள்ளேன். உங்கள் ஆதரவைக் கேட்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சி, எங்கள் திமுகஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை ரத்து செய்து விட்டது. நல்லதிட்டங்களை எல்லாம் திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டது.

எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஒரே கையெழுத்தில் 2 லட்சம் அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதுமட்டுமா? சாலைப் பணியாளர்கள் 10,000 பேர் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டனர்.என்ன காரணத்தால் நீக்கப்பட்டோம் என்றே தெரியாமல் 10,000 பேரும்பிச்சைக்காரர்கள் போல சாலையில் போராடிக் கொண்டிருந்தனர்.

சேப்பாக்கம் தொகுதியில் பல சாதனைகளை செய்துள்ளேன். பல திட்டங்களைநிறைவேற்றியுள்ளேன். உங்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுத்துள்ளேன்.சிமென்ட் சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிக் கட்டடங்கள் என எனக்குஒதுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து செய்து கொடுத்துள்ளேன்.

ஆனால் இன்னும் செய்ய வேண்டியுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகாலம் திமுகஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதை தேர்தல் அறிக்கையில்தெரிவித்துள்ளோம்.

கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று கூறியுள்ளேன். கலர் டிவி தருவோம்என்று கூறியுள்ளோம். இதெல்லாம் முடியுமா என்று சிலர் கேட்கிறார்கள். முயன்றால்முடியும், மனதிலே உறுதியிருந்தால் நிச்சயம் முடியும்.

கலர் டிவி மட்டும் கொடுத்தால் போதுமா, கேபிள் இணைப்பு தர வேண்டாமா என்றுகேட்கிறார்கள். பசு மாடு கொடுத்தவனுக்கு அதைக் கட்டி வைக்க கயிறு கொடுக்கமுடியாதா? இவை எல்லாம் நடக்குமா என்று கேட்டு நடக்கக் கூடாது என்று சிலர்நினைக்கிறார்கள்.

கை ரிக்ஷாவை ஒழித்து சைக்கிள் ரிக்ஷாவை கொண்டு வந்தவன் இந்த கருணாநிதி.அப்போதும் கூட சிலர் இதெல்லாம் சாத்திமாகுமா என்றார்கள். செய்து காட்டினேன்.

ஏழைகளுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டிக் கொடுத்தவன் நான். சொன்னைதைச் செய்துகாட்டியவன் கருணாநிதி என்பது மக்களுக்குத் தெரியும்.

எனவே இப்போது சொல்லியுள்ளவற்றையும் நான் செய்து காட்டுவேன். எனதுபேச்சை நம்ப வேண்டும் என்றார் கருணாநிதி.

கருணாநிதியின் பேச்சைக் காண பெரும் திரளான மக்கள் கூடியிருந்ததால் மக்கள்வெள்ளமாக காணப்பட்டது. 30க்கும் மேற்பட்ட தெருக்களில் கருணாநிதி பிரசாரம்செய்தார். கருணாநிதி மனைவி தயாளு அம்மாளும் ஒரு ஜீப்பில் அமர்ந்தபடி வந்தார்.

கருணாநிதியின் மகள் செல்வி மற்றும் அவரது குடும்பத்தினர் தெருவில்தொண்டர்களோடு தொண்டர்களாக நடந்தபடி வாக்கு சேகரித்தனர். வீட்டு வாசல்களில்நின்ற பெண்களிடம் சென்று உரிமையோடு கையைப் பிடித்து, அப்பாவுக்கு மறக்காமஓட்டுப் போட்டுடுங்க என்று செல்வி கேட்டுக் கொண்டார்.

மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை:

இதற்கிடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள திமுக தேர்தல் பணி ஆய்வுக் குழுஉறுப்பினர்களுடன் கருணாநிதி இன்று ஆலோசனை நடத்தினார்.

திமுக தேர்தல் பணிகளை ஆய்வு செய்து பணிகளை முடுக்கி விடுவதற்கு வசதியாகஐந்து தேர்தல் பணி ஆய்வுக் குழுக்களை கருணாநிதி அமைத்தார். மத்தியஅமைச்சர்கள் தலைமையிலான இந்தக் குழுக்கள் அதிமுகவின் பண பலம், ஆள்பலத்தை சமாளிக்கும் வேலைகளுக்காக அமைக்கப்பட்டுள்ளன.

அதிமுகவுக்கு இணையாக பணத்தை இறக்கிவிட முடிவு செய்துள்ள திமுக இந்தக்குழுவில் கட்சியின் முன்னணித் தலைவர்களைப் போட்டுள்ளது. இக் குழுவின்உறுப்பினர்களுடன் கருணாநிதி இன்று காலை ஆலோசனை நடத்தினார்.

அதில் ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன்,டி.ஆர்.பாலு, ராஜா, பழனி மாணிக்கம், சுப்புலட்சுமி ஜெகதீசன், வேங்கடபதி மற்றும்உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X