For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடற்கரையில் மீண்டும் கண்ணகி!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மெரீனா கடற்கரையிலிருந்து கடந்த ஆட்சியில் அகற்றப்பட்ட கண்ணகிசிலை முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை இரவு நடந்த நிகழ்ச்சியில் மீண்டும் அதேஇடத்தில் திறந்து வைத்தார்.

சென்னை மெரீனா கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த கண்ணகி சிலையை கடந்தஅதிமுக ஆட்சியில் சொத்தைக் காரணங்களைக் கூறி அகற்றி விட்டனர்.

திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கண்ணகி சிலை அதே இடத்தில் நிறுவப்படும்என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தற்போது திமுக ஆட்சியில் மீண்டும் கண்ணகி சிலை அதே இடத்தில்நிறுவப்பட்டுள்ளது. இச்சிலையைமுதல்வர் கருணாநிதி சனிக்கிழமை இரவு நடந்தநிகழ்ச்சியில் திறந்து வைத்தார்.

இந்த கோலாகல நிகழ்ச்சியில், அமைச்சர்கள், தமிழறிஞர்கள், கவிஞர்கள்,இலக்கியவாதிகள் உள்ளிட்ட பல்வேறு துறையினரும் கலந்து கொண்டனர்.

புதுப்பிக்கப்பட்டு, புதுப் பொலிவுடன் திகழும் கண்ணகி சிலையை மூடியிருந்தமஞ்சள் துணியை பொத்தானை அழுத்தி கருணாநிதி நிறந்தார். கம்பீரமான கண்ணகிசிலை வெளியே தெரிந்தபோது கூட்டத்தில் கலந்து கொண்டஆயிரக்கணக்கானவர்களும் கரவொலி எழுப்பினர்.

சிலையைத் திறந்து வைத்து கருணாநிதி பேசுகையில், காவிய நாயகி என்றும் கலாச்சாரபொக்கிஷம் என்றும் போற்றப்பட்ட ஒரு பெண், நீதி கேட்ட ஒரு பெண்மணி,பாண்டிய மன்னனையே குற்றம் புரிந்தவன் நீ என்று சுட்டிக் காட்டிய வீரப் பெண்மணிகண்ணகி.

தமிழ் சதாயத்துக்கு எல்லாம் வழிகாட்டியாக இருந்து வீரம் கொண்ட பெண்மணியாகஇருந்து நமது உள்ளம் எல்லாம் கவர்ந்த உணர்ச்சிப் பிழம்பான அந்த கண்ணகியின்சிலை அகற்றப்பட்டது.

அதன் பிறகு தொடர் கிளர்ச்சிகள், தொடர் வேண்டுகோள்கள், பல்வேறு அமைப்புகள்சார்பில், யார் யார் உடலில் எல்லாம் தமிழ் ரத்தம் ஓடியதோ அவர்கள் எல்லோரும்இந்த ஐந்து ஆண்டு காலம் குரல் கொடுத்தார்கள். தமிழ்நாட்டு மக்கள் நமக்கு அளித்தஆதரவைக் கொண்டு இன்று அரியாசானம் பெற்றுள்ளோம்.

இந்த நேரத்தில் உயர்ந்த ஏடுகளில் ஒன்றாக நான் கருதிக் கொண்டிருக்கிற, ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் கண்ணகி சிலை குறித்து எழுதியிருக்கிறார்கள். நான்யாரையும் தூண்டி விடுவதற்காக இதைச் சொல்லவில்லை.

தூங்கிக் கொண்டிருக்கிற உணர்ச்சிகளை லேசாகத் தட்டி எழுப்புவதற்காகத்தான்இதைச் சொல்கிறேன். தட்டி எழுப்பினாலும் தமிழன் விழிக்க முடியாமல் கிடக்கிறானேஎன்ற வேதனையில் சொல்கிறேன்.

என்ன கண்ணகி சிலை என்று கேலிக்குரியதாக்கி, தூங்கிக் கொண்டிருக்கிறகுழந்தையின் கையில், இருக்கின்ற கரடி பொம்மைக்கும், இந்த கண்ணகி சிலைக்கும்என்ன வித்தியாசம் என்று அந்த பத்திரிக்கை தனது கட்டுரையை முடித்திருக்கிறது.

தமிழா நீ இன்னும் உயிரோடுதான் இருக்கிறாயா என்று கேட்கத்தான் தோன்றுகிறது.இந்த கேள்வி நான் கேட்கிற காரணத்தால் எனது செங்கோல் பறிக்கப்பட்டாலும்பரவாயில்லை.

தமிழன் மானத்தோடு வாழ்ந்தான், மானத்தோடே சாகட்டும், சாக வேண்டும். தமிழன்மானத்தை இழப்பான் என்கின்ற தைரியம் இருக்கின்ற காரணத்தால் கண்ணகிசிலையை கரடி பொம்மை என்று எழுதியுள்ளனர்.

சிலைதானே என்று அலட்சியப்படுத்துவதோ, தேவையில்லாமல் தமிழனின்உணர்ச்சியை தட்டிப் பார்க்கின்ற இந்த விளையாட்டுத் தனம் வேண்டாம் என்பதைஎனது வேண்டுகோளாகத்தான் வைக்கிறேன் என்றார் கருணாநிதி.

நிகழ்ச்சியில் அன்பழகன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவிஞர் வைரமுத்து,அவ்வை நடராஜன் உள்ளிட்டோர் பேசினர். சீர்காழி சிவசிதம்பரம், கண்ணகி குறித்துகருணாநிதி எழுதிய பாடலை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாடினார்.

பாமக தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, ஆர்.எம்.வீரப்பன்,காதர் மொஹைதீன் உள்ளிட்ட கூட்டணிக்

கட்சியினரும் கலந்து கொண்டனர். மதிமுக மகளிர் அணி செயலாளர் விஜயதாயன்பனும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X