For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் நாளை ஆட்டோ, டாக்சி, லாரிகள் ஓடாது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாளை தமிழகம் முழுவதும்ஆட்டோக்கள், டாக்சிகள், லாரி ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில்ஈடுபடவுள்ளதால் தமிழகத்தில் இயல்வு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும் எனத்தெரிகிறது.

பெட்ரோர், டீசல் விலையை கடந்த 2 ஆண்டுகளில் 6 முறை மத்திய அரசுஉயர்த்தியுள்ளது. இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதைக் கண்டித்து நாளை வேலை நிறுத்தம் செய்யப் போவதாக ஆட்டோஓட்டுனர்கள், லாரி உரிமையாளர்கள், டாக்சி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.சென்னையில் இரண்டு இடங்களில் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை ஆட்டோஉரிமையாளர்கள், ஓட்டுனர்கள் நடத்துகின்றனர்.

தேனாம்பேட்டை ஏ.ஜி. அலுவலகம் மற்றும் குறளகத்தில் இருந்தும் இந்த ஆர்ப்பாட்டஊர்வலம் நடைபெறுகிறது. இதில் ஆட்டோக்களுடன் ஓட்டுனர்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் சென்னையில் இயங்கி வரும் 3,000க்கும்மேற்பட்ட ஷேர் ஆட்டோக்களும் பங்கு பெறவுள்ளன.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கிட்டத்தட்ட 70,000 ஆட்டோக்கள் உள்ளனஎன்பதால் இந்த ஆட்டோக்களை நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்கள் நாளைபாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X