For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை ரவுடிகளை ஒழிக்க 2 தனிப்படைகள்: களத்தில் என்கெளண்டர் வெள்ளைத்துரை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மாநகரில் ரவுடிகளை வேரோடு அழிக்க ஆணையர் லத்திகா சரண் மற்றும்கூடுதல் ஆணையர் ஜாங்கிட் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை நகரில் அட்டகாசம் செய்து வந்த பல பிரபல ரவுடிகள் கடந்த அதிமுகஆட்சியில் அடித்து துவம்சம் செய்யப்பட்டனர்.

அயோத்தியாகுப்பம் வீரமணி மெரீனா கடற்கரையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். சேரா, வெள்ளை ரவி உள்ளிட்ட பல ரவுடிகளும் காலிசெய்யப்பட்டனர்.

இந் நிலையில் தற்போதைய திமுக ஆட்சியிலும் ரவுடிகள் மீதான பிடி மேலும்இறுக்கப்பட்டுள்ளது. ரவுடிகளை முற்றிலும் அழித்தொழிக்க இரண்டு தனிப்படைகள்அமைக்கப்பட்டுள்ளன.

ஆணையர் லத்திகா சரண் தலைமையில் ஒரு படையும், கூடுதல் ஆணையர் ஜாங்கிட்தலைமையில் இன்னொரு படையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இரு படைகளிலும் என்கவுண்டர்களை நடத்துவதிலும், குறி பார்த்து சுடுவதில்தேர்ச்சி பெற்ற அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர்.

சென்னையில் வெள்ளைதுரை:

இந் நிலையில் என்கெளண்டர் ஸ்பெஷலிஸ்ட் என காவல்துறை வட்டாரத்தில்செல்லமாக அழைக்கப்படும் டி.எஸ்.பி. வெள்ளைத்துரை சென்னைக்குமாற்றப்பட்டுள்ளார்.

சப்-இன்ஸ்பெக்டராக இருந்த வெள்ளைத்துரை குறி பார்த்து துப்பாக்கியால் சுடுவதில்நிபுணர். இவரை வைத்து பல ரவுடிகளை தீர்த்துக் கட்டியுள்ளது காவல்துறை.

சென்னையை உலுக்கி வந்த பிரபல தாதா அயோத்தியா குப்பம் வீரமணியைகடற்கரை மணலில் பட்டப் பகலில் போட்டுத் தள்ளி விட்டு துணிச்சலாக அங்கிருந்துதப்பி வந்தவர் வெள்ளைத்துரை.

இதேபோல மேலும் சில ரவுடிகளையும் வெள்ளைத்துரையின் துப்பாக்கி பதம்பார்த்துள்ளது. மிகச் சிறந்த காவல்துறை அதிகாரி என்று உயர் அதிகாரிகளால்பாராட்டப்பட்ட வெள்ளைத்துரைதான் சந்தனக் கடத்தல் வீரப்பனின் கதையையும்முடித்தவர்.

அதிரடிப்படையில் இடம்பெற்றிருந்த இவர்தான் வீரப்பனை சரமாரியாக சுட்டுத்தள்ளியவர். அதிரடிப்படையின் செயலைப் பாராட்டி அனைவருக்கும் பதவி உயர்வுகொடுக்கப்பட்டது.

இதில் டி.எஸ்.பி. ஆக பதவி உயர்த்தப்பட்டார் வெள்ளைத்துரை. இதன் பின்னர்திண்டுக்கல்லுக்கு மாற்றப்பட்ட வெள்ளைத்துரை மது விலக்கு அமலாக்கப் பிரிவில்பணியாற்றி வந்தார். இவரது தீவிர வேட்டையால் கள்ளச்சாராயம் திண்டுக்கல்பகுதியில் சுத்தமாக ஒழிந்தது.

கடந்த 1999ம் ஆண்டு திருச்சியில் பிச்சமுத்து, கோகிஜென் ஆகிய இரு பிரபலரவுடிகளை சுட்டு வீழ்த்தியவர்.

இந் நிலையில் வெள்ளைத்துரை சென்னைக்கு மாற்றப்பட்டு மத்திய குற்றப் பிரிவுஉதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜாங்கிட் தலைமையில்அமைக்கப்பட்டுள்ள குழுவிலும் வெள்ளைதுரை இடம் பெற்றுள்ளார்.

வெள்ளைத்துரை சென்னைக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதன் பின்னணியில் எந்தத்தலைக்குக் குறி வைக்கப்பட்டிருக்கிறதோ என்ற அச்சம் ரவுடிகள், சமூக விரோதிகள்மத்தியில் எழுந்துள்ளது.

சென்னை நகரில் ரவுடிகளை கண்காணித்து வளைத்துப் பிடிக்கும் பணிவெள்ளைதுரையிடம் தரப்பட்டுள்ளதால் ரவுடிகள் பீதியில் மூழ்கியுள்ளனர்.

கடந்த இரு வாரங்களில் மட்டும் 1,400க்கும் மேற்பட்ட ரவுடிகள் சென்னையில்பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு ரவுடியை போலீஸார் சுட்டுத்தள்ளியுள்ளனர். இதனால் பல ரவுடிகள் திருந்தி வாழ்வதாக எழுதிக் கொடுத்துள்ளனர்.

ரவுடிகள் சரணடைந்தால் அவர்கள் திருந்தி வாழ வாய்ப்பு தருவது, தொடர்ந்துசேட்டை செய்தால் சுட்டு வீழ்த்துவது என்று போலீஸார் முடிவு செய்துள்ளதாகக்கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X