For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செப்டம்பர் முதல் இலவச கலர் டிவி !

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வரும் செப்டம்பர் முதல் இலவச கலர் டிவி வழங்கும் திட்டம தொடங்கும் என முதல்வர் கருணாநிதிஅறிவித்துள்ளார். முதல் கட்டமாக சமத்துவபுரங்களில் வசிப்பவர்கள், நீலகிரியில்வசிக்கும் பழங்குடியினர், தென் சென்னை, வட சென்னையில் குடிசை மாற்று வாரியவீடுகளில் வசிப்பவர்களுக்கு டிவிக்கள் தரப்படவுள்ளன.

இத் திட்டம் தொடர்பாக கருணாநிதி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிஆலோசனைக் கூட்டம் நடந்தது.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய வாக்குறுதியான இலவச கலர்டிவி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த பூர்வாங்க நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல் கட்டமாக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள்அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் சேர அதிமுக, மதிமுக, தேமுதிக ஆகியவை மறுத்துவிட்டன.இதனால் பிற கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மட்டுமே குழுவில் இடம்பெற்றுள்ளனர். இக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று கருணாநிதிதலைமையில் தலைமைச் செயலகத்தில் நடந்தது.

இக்கூட்டத்தில் அமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் சார்பில் சுதர்சனம், பாமக சார்பில்ஜி.கே.மணி, முஸ்லீம் லீக் சார்பில் அப்துல் பாசித், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்சிவபுண்ணியம், புரட்சி பாரதம் கட்சியின் பூஜை ஜெகன்மூர்த்தி, விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கு.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்கள் தவிர எல்காட் நிறுவன நிர்வாக இயக்குனர் உமாசங்கர், தலைமைச்செயலாளர் திரிபாதி, நிதித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர்களும் பங்கேற்றனர்.

இக் கூட்டத்துக்குப் பின் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்,

செப்டம்பர் முதல் இலவச கலர் டிவி வினியோகம் தொடங்கும். முதல் கட்டமாக30,000 குடும்பங்களுக்கு டிவிக்கள் வழங்கப்படும். முதல் கட்டமாகசமத்துவபுரங்களில் வசிப்பவர்கள், நீலகிரியில் வசிக்கும் பழங்குடியினர், தென்சென்னை, வட சென்னையில் குடிசை மாற்று வாரிய வீடுகளில் வசிப்பவர்களுக்குடிவிக்கள் தரப்படும்.

இதற்காக 30,000 டிவிக்களுக்கு தேசிய அளவில் டெண்டர் கோரப்படும் என்றுகூறப்பட்டுள்ளது.

8,468 ஆசிரியர்கள் நியமனம்:

இதற்கிடையே பள்ளிகளுக்கு புதிதாக 8,468 ஆசிரியர்களை நியமிக்க கருணாநிதிஉத்தரவிட்டுள்ளார். அதேபோல ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிதாக 1,800செவிலியர்களை நியமிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், அரசுஉயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் 8,468 ஆசிரியப்பணியிடங்கள் காலியாக உள்ளன.

இவை கடந்த 5 ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை.

இவற்றில் தமிழாசிரியர்கள் உள்பட 625 பட்டதாரி ஆசிரியர்களையும், 371 முதுகலைஆசிரியர்களையும் பதவி உயர்வு மூலம் நியமனம் செய்யவும்,

எஞ்சிய 7,472 பணியிடங்களில் 370 முதுகலை ஆசிரியர்கள், 4,461 பட்டதாரிஆசிரியர்கள் ஆகியோரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாகவும்,

2,353 இடை நிலை ஆசிரியர்கள், 160 உடல் கல்வி ஆசிரியர்கள், 128கலையாசிரியர்களை மாவட்ட வேலை வாய்ப்பு நிறுவனங்களின் மூலமாகவும்நியமனம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த ஆசிரியர்களுக்கு காண்ட்ராக்ட் முறையில் ஊதியம் வழங்கப்படும் என்றும்தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதேபோல 600 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,800 செவிலியர்களைநியமிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X