For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலக அமைதிக்காக கழுதைகளுக்குத் திருமணம்

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

உலக அமைதியை வேண்டி திருச்சி மாவட்டம் லால்குடி அருகே, இரண்டுகழுதைகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்ட விநோதம் நடந்துள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவலூர் என்ற கிராமம் உள்ளது. உலகஅமைதியை வலியுறுத்தி இந்தக் கிராமத்தில் நூதன கல்யாணம் நடந்துள்ளது.அங்குள்ள திருமூல நாத சுவாமி கோவிலில் ஒரு ஆண் கழுதைக்கும், பெண்கழுதைக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

மணப்பெண் கழுதையை அட்டகாசமாக அலங்கரித்து, பூச்சூடி, பொட்டு, பட்டுச்சேலை, ரவிக்கை கட்டி பெண்கள் சேர்ந்து கூட்டி வந்தனர். இதேபோல ஆண்கழுதைக்கும் அமர்க்களமாக அலங்காரம் செய்து, பட்டு வேட்டி கட்டி ஆண்கள் கூட்டிவந்தார்கள்.

கோவில் வளாகத்தில் போடப்பட்டிருந்த விசேஷ பந்தலின் கீழே இருகழுதைகளையும் அருகருகே நிறுத்தி வைத்தனர். பின்னர் புரோகிதர்கள் மந்திரங்கள்ஓத திருமணச் சடங்குகள் ஆரம்பித்தனர்.

அதன் பின்னர் கழுதைகளுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டன.

அதன் பின்னர் கெட்டி மேளம் முழுங்க மணமகன் கழுதையின் சார்பில் கிராமத்தைச்சேர்ந்த ஒருவர் மணப்பெண் கழுதைக்கு தாலி கட்டினார்.

3000க்கும் மேற்பட்டோர் இந்த திருமணத்தைக் காண கூடியிருந்தனர். அதன் பின்னர்திருமண விருந்தும் நடந்தது. இதுகுறித்து கிராமத்தினர் கூறுகையில், இந்தக்கல்யாணத்திற்குப் பெயர் கர்த்தவ்ய விவாகம்.

நாட்டில் அமைதி குறைந்தால், வன்முறை தலை விரித்தாடினால் இதுபோன்றகல்யாணங்களைச் செய்தால் அமைதி திரும்பும் என்பது ஐதீகம். அதன்படியே இந்தத்திருமணத்தை நடத்தினோம்.

அது மட்டுமல்லாது மழை பெய்யாமல் இருந்தாலும, விவசாயம் செழிப்பாகஇல்லாவிட்டாலும் கூட இத்தகைய திருமணங்கள் நடத்தப்படுவது வழக்கம் என்றனர்.

திருமணம் முடிந்த பின்னர் கணவன் கழுதையும், மனைவி கழுதையும் ஊர்வலமாககிராமத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் பின்னர் இரு கழுதைகளும்கோவிலுக்கு தானமாக அளிக்கப்பட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X