• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சபாநாயகர், கருணாநிதிக்கு ஜெவின் அறிவுரைகள்

By Staff
|

சென்னை:

சட்டசபையில் எங்களை தாக்கினால் அதை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று ஜெயலலிதாகூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

தலைமைச் செயலகம் கட்டுவதற்கு ராணிமேரி கல்லூரி இடத்தை முதலில் தேர்ந்தெடுத்ததற்கும், பிறகுகோட்டூர்புரத்தில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தை ஒட்டி இடத்தை தேர்ந்தெடுத்ததற்கும் நான் யாரை, எந்தஎதிர்க்கட்சி தலைவரை கலந்து கொண்டு முடிவு எடுத்தேன் என்று கேட்டிருக்கிறார் கருணாநிதி.

இதன் மூலம் தனது முழு அறியாமையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

சட்டமன்றத்தில் ராணிமேரி கல்லூரி வளாகத்தில் தலைமைச் செயலகம் கட்ட இருப்பது பற்றியும், அந்தசந்தர்ப்பத்தில் மேற்படி கல்லூரி எங்கு இயங்க வேண்டும், எப்படி இயங்க இருக்கிறது என்பதையும் நான்சட்டமன்றத்தில் தெளிவுப் படுத்தினேன். இப்படிக் கேள்வி கேட்கும் கருணாநிதி, அந்த சம்பவம்நடந்தபோது சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, சபைக்கு வராமலேயேஅதற்கான சலுகைகள் அத்தனையையும் அனுபவித்து வந்தார்.

புதிய தலைமைச் செயலக வளாகம் கட்டப்பட இருப்பது குறித்து அப்போது நான்சட்டசபையில் தெளிவாக விளக்கியுள்ளேன். இதுகுறித்து பல உறுப்பினர்கள்விவாதத்தில் கலந்து கொண்டு பேசியுள்ளனர்.

இதை சபைக்கு வராத கருணாநிதி பத்திரிகைகளைப் படித்தாவது தெரிந்துகொண்டிருக்கலாம்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் கோட்டூர் புரத்தில் தலைமைச் செயலகம் கட்டலாம் என்று அரசுதீர்மானத்தையும் பலமுறை நான் சட்டமன்றத்தில் தெரிவித்து இருக்கின்றேன். நான் முதல்வராக இருந்த போதுதலைமைச் செயலகம் புதிய இடத்தில் அமைப்பது குறித்துப் பல முறை அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்துமுடிவு எடுக்கப்பட்டு, பின்பு சட்டமன்றத்திலேயே வெளிப்படையாக விவாதிக்கப்பட்டது.

ஆனால், மத்திய அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி கருணாநிதி முட்டுக் கட்டைபோட்டதால்தான் அந்தத் திட்டத்தை நறைவேற்ற முடியாமல் போனது.

அதே போல சசிகலா சட்டசபைக்கு வந்தது, துணை சபாநாயகர் இருக்கையில் அமர்ந்ததுகுறித்து பல ஆண்டுகள் கழித்து ஒரு கேள்வி எழுப்பி இருக்கிறார் கருணாநிதி.

இதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர் தற்சமயம் அவரது கட்சியில் இருக்கும் சேடப்பட்டி முத்தையாதான்.அப்போதைய சட்டமன்றப் பேரவைத் தலைவராக இருந்தவர் அவர்தான. அன்றைய தினம் சட்ட சபைக்குள் வந்துஅமர்வதை சசிகலாவும் விரும்பவில்லை.

எனக்கும், அதில் உடன்பாடு இல்லை. ஆனால், வேடந்தாங்கலில் தஞ்சம் புகுந்த பறவை போலதிமுகவில் அடைக்கலம் புகுந்துள்ள சேடப்பட்டி முத்தையாதான், சசிகலாவை பொதுநிகழ்ச்சிகளுக்கு வரலாம் என்று கூறி வலியுறுத்தி அழைத்து வந்தவர்.

அவர்தான் துணை சபாநாயகர் இருக்கையிலும் அமர வைத்தவர். மற்றபடிசட்டசபைக்கு வர வேண்டும் என்று நானோ அல்லது சசிகலாவோ விரும்பியதில்லை.

சட்டப் பேரவையில் இருக்கைகள் இடமாற்றம் என்பது ஒரு சாதாரண விஷயம் என்று கருணாநிதி சொல்லிஇருக்கிறார். அதாவது சட்டமன்ற சம்பிரதாயங்கள், சட்டமன்ற மரபுகள், நடைமுறை பழக்க வழக்கங்கள் இவைஎல்லாம் அவருக்கு மிகச்சாதாரணமாகத் தெரிகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் அறை சிறியதாக இருப்பதாகவும், பெரிய அறை வேண்டும்என்று நான் கோரிக்கை விடுத்துள்ளதாக கருணாநிதி கூறியுள்ளார். எந்தக் கட்டத்திலும்அப்படி ஒரு கோரிக்கையை நான் வைத்ததில்லை.

எனக்கே தெரியாமல் எனது கட்சியின் கொறடா வைத்துள்ள அந்தக் கோரிக்கையைநான் வாபஸ் பெற்றுக் கொள்கிறேன். மைனாரிட்டி திமுக அரசிடம் நான் ஒரு போதும்எந்த சலுகையையும் கேட்கப் போவதில்லை.

சட்டசபையில் இருக்கைகளை மாற்றுவது பேரவைத் தலைவரின் தனி அதிகாரம் என்றுசபாநாயகர் ஆவுடையப்பன் கூறியிருப்பது வினோதமாக உள்ளது. அவர் நிலைப்பாட்டைகண்டு நான் பரிதாபப்படுகின்றேன். சபாநாயகருக்கென்று தனிப்பட்ட அதிகாரம் எதுவும்இல்லை என்று உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளில்கூறப்பட்டுள்ளது.

தனது அதிகாரத்தைப் பற்றி வரைமுறைகளையும், இது சம்பந்தமான நீதிமன்ற தீர்ப்புகளையும், சட்டமன்றகூட்டத்தொடர் இம்மாதம் 22ம் தேதி ஆரம்பிப்பதற்கு முன்பாக அவர் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.

சட்டப் பேரவைத் தலைவர், பத்திரிகையாளர்கள் மத்தியில் கைகலப்பு ஏற்படாமல் தவிர்க்க இருக்கைகள்இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இப்படிச் சொன்னவர், சில வரலாற்று உண்மைகளைமறந்திருக்கிறார் அல்லது மறைத்திருக்கிறார்.

கருணாநிதி முதல்வராக இருந்த போது சட்டமன்றத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மீது செருப்பு வீச்சுவதும்,நான் தொடர்பான செய்திகள்பு 1989ல் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது என் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்நடத்தியதும் திமுகவினர்தான்.

அப்போதும் கருணாநிதியின் ஆட்சிதான். ஆக திமுகவிற்கு எதிர்த் தரப்பில் உள்ள நாங்கள் தான் பாதுகாக்கப்படவேண்டியவர்கள். இதுதான் வரலாற்று உண்மை. எந்தவிதத் தாக்குதலுக்கும் நானோ அல்லது கழக சட்டமன்றஉறுப்பினர்களோ கவலைப்படவில்லை.

எனவே எங்களுக்கு மூலை முடுக்கு இடங்கள் தேவையில்லை. எதையும் நேரிடையாகவே எதிர்கொள்ளும்தைரியம் எங்களுக்கு உள்ளது என்பதையும் சட்டமன்றப் பேரவைத் தலைவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவைகளை எல்லாம் கருணாநிதி மற்றும் ஆவுடையப்பன் ஆகிய இருவரும் இனியாவது புரிந்து கொண்டுசட்டமன்ற மரபுகளையும், நெறிமுறைகளையும் கடைபிடிப்பது நல்லது என அவர் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X