For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவுக்கு உளவு சொன்ன அதிகாரி யார்?-பிரதமருக்கு ஜஸ்வந்த் சிங் கடிதம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது இந்திய அணு ஆயுதங்கள் குறித்துஅமெரிக்காவுக்கு உளவு சொன்ன பிரதமர் அலுவலக அதிகாரியின் பெயரைமுன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங், பிரதமர் மன்மோகன் சிங்குக்குகடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

பாரதீய ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் அCall to Honour என்ற ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

அதில் நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது பிரதமர் அலுவலகத்தில் இருந்தஅதிகாரி ஒருவர் இந்திய அணு ஆயுதங்கள் தொடர்பாக அமெரிக்காவுக்கு உளவுசொன்னதாக குறிப்பிட்டுள்ளார்.

இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதையடுத்து அந்த அதிகாரியின் பெயரை வெளியிடும் தைரியமும், நாகரீகமும்இருந்தால் ஜஸ்வந்த் சிங் அந்த அதிகாரி பெயரை வெளியிடட்டும் என்று பிரதமர்மன்மோகன் சிங் சவால் விட்டார்.

இதற்கு ஜஸ்வந்த் சிங் அந்த அதிகாரி பெயரை பகிரங்கமாக வெளியிடமாட்டேன்.பிரதமருக்கு மட்டும் தெரிவிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறினார். அதன்படிஜஸ்வந்த் சிங் பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் அந்த அதிகாரியின் பெயர் மற்றும் விபரங்களை குறிப்பிட்டு உள்ளதாகத்தெரிகிறது.

பாஜக ஆட்சியில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஆப்கானிஸ்தானுக்குக் கடத்திச்செல்லப்பட்டபோது, பயணிகளை மீட்க, 3 பயங்கர தீவிரவாதிகளை தலிபான்களிடம்தானே நேரில் ஆப்கானிஸ்தான் சென்று ஒப்படைத்தார் ஜஸ்வந்த் சிங்.

அப்போது ரூ. 900 கோடி பணமும் ஆயுதங்களும் தீவிரவாதிகளுக்குத் தரப்பட்டதாககாங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இதை ஜஸ்வந்த் சிங் மறுத்துள்ளார்.

மேலும் குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மதக் கலவரத்தை தடுக்கத்தவறியதையும் பாபர் மசூதி இடிக்கப்பட்டதையும் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளஜஸ்வந்த் சிங், அவை இரண்டும் பாஜகவின் வரலாற்றில் இரு கரும் புள்ளிகள் என்றுகூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X