For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விபச்சாரிகளுடன் தொடர்பு: சபரிமலை தந்திரி நீக்கம்!

By Staff
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவில் தந்திரி கண்டரரு மோகனரு விபச்சாரிகளுடன் தொடர்புவைத்திருந்ததால் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Mohanaru
ஐயப்பன் கோவில் கருவறைக்குள் நடிகை ஜெயமாலா நுழைந்தது தொடர்பாக உன்னிகிருஷ்ண பணிக்கர் கிளப்பிய சர்ச்சைக்கு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தீர்வுஏற்பட்டு வருகிறது.

அதற்காக தென் கேரளா முழுவதும் பரிகார பூஜைகளை கோவில் நிர்வாகம்தொடங்கியுள்ளது. இந் நிலையில் சபரிமலை கோவில் தந்திரி கண்டரரு மோகனருபுதிய சிக்கலில் மாட்டியுள்ளார்.

கொச்சியில் லிங்க் லட்சுமண் பிளாட்ஸ் என்ற அடுக்கு மாடிக் குடியிருப்பில் சாந்தா,ஷோபா என்ற இரு பெண்கள் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பாலியல்தொழிலில் ஈடுபட்டதற்காக இவர்கள் கைதாகியும் உள்ளனர். ஆனாலும் தொடர்ந்துதங்கள் தொழிலை செய்து வருகின்றனர்.

இவர்களுடன் மோகனருவுக்கு தொடர்பு இருந்துள்ளது. இந்த பிளாட்டுக்குச் சென்றுபெண்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார் மோகனரு.

இந் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் வழக்கம் போல் மோகனருஇந்தப் பெண்களின் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அப்போது ஒரு கும்பல் அந்தவீட்டுக்குள் புகுந்துள்ளது. படுக்கை அறையில் பெண்ணுடன் மோகனருஅலங்கோலமாகக் கிடக்க, அதை படம் பிடித்துவிட்டது அந்தக் கும்பல்.

இதையடுத்து அவர்களிடம் கேமராவைத் தந்துவிடுமாறு மோகனருகெஞ்சியிருக்கிறார். அவர்கள் தர மறுக்கவே ரூ. 1 கோடி வரை பேரம் பேசியுள்ளார்.ஆனாலும் அந்தக் கும்பல் அதிக பணம் கேட்டதாகத் தெரிகிறது.

மேலும் மோகனரு போட்டிருந்த நகைகளை பறித்துக் கொண்டு அந்தக் கும்பல்போய்விட்டது.

கையும் களவுமாக மாட்டிய மோகனரு கொச்சி மற்றும் செங்கன்னூர் போலீஸில் ஒருபுகார் கொடுத்தார்.

அதில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சில மர்ம மனிதர்கள் என்னை வீடு புகுந்துதாக்கியதுடன், காரில் வலஞ்சம்பலம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக்குடியிருப்புக் கடத்திச் சென்ற மோசமான பெண்களுடன் சேர்த்து அமர வைத்துபுகைப்படம் எடுத்தனர்.

என்னிடமிருந்த 18 பவுன் தங்கச் செயின், 15 பவுன் பிரேஸ்லெட், 5 மோதிரங்கள்,செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டனர்.

இதை வெளியே சொல்லாமல் இருக்க பணம் தர வேண்டும் என்று மிரட்டினார்கள்.நான் ரூ. 30 லட்சம் தர ஒப்புக் கொண்டதால் என்னை விடுவித்தனர் என்றுகூறியிருந்தார்.

இந்தப் புகாரை கொச்சி போலீஸார் விசாரித்தனர். அப்போது கண்டரரு சொன்னதுஅத்தனையும் பொய் எனத் தெரிய வந்தது. இதுகுறித்து டிஐஜி பத்மகுமார்கூறுகையில்,

கொச்சியில் விபச்சாரிகள் இருக்கும் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அடிக்கடிபோகும் பழக்கம் உடையவர் கண்டரரு. இதுவரை 20க்கும் மேற்பட்ட முறை அவர்சென்றுள்ளதை கண்டுபிடித்துள்ளோம். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்களுக்கு,அதை மறைக்க தலா ரூ. 20,000 வரை பணத்தைக் கொடுத்துள்ளார் கண்டரரு.

அவர் கொடுத்த புகாரின் பேரில் நாங்கள் அங்கே போய் விசாரித்தபோது,அடுக்குமாடிக் குடியிருப்பின் காவலாளி உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார்.கண்டரரு பலமுறை இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வந்துள்ளதாகவும், விபச்சாரப்பெண்களின் வீட்டுக்குப் போய் வந்ததாகவும் கூறினார்.

மேலும் கண்டரருவின் கார் நம்பரையும் கொடுத்தார். கண்டரருவுடன் புகைப்படத்தில்இருக்கும் பெண் விபச்சாரம் செய்ததற்காக ஏற்கனவே தண்டனை பெற்றவர் என்றார்பத்மகுமார்.

கண்டரரு மோகனரு மீதான இந்தப் புகார் கேரளாவில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஐயப்பன் கோவில் பக்தர்கள் பெரும் அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.

கண்டரரு மீதான புகாரைத் தொடர்ந்து அவரை உடனடியாக தந்திரி பொறுப்பிலிருந்துநீக்கி திருவாங்கூர் தேவசம் போர்டு உத்தரவிட்டது. அவர் கோவிலுக்குள் வரவும்தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதிய தந்திரியாக மோகனருவின் தந்தை கண்டரரு மகேஸ்வரரை நியமித்துள்ளது.அவர் உடனடியாக பொறுப்பேற்க மறுத்துள்ளார். மோகனரு மீதான விவகாரத்தில்முடிவு தெரிந்த பின்னரே தந்திரியாக பொறுப்பேற்பேன் என்று கூறிவிட்டார்.

இதற்கிடையே தன்னை தந்திரி பொறுப்பிலிருந்து நீக்கியது செல்லாது என்று மோகனருகூறியுள்ளார். கொச்சி காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்ட அவரிடம் போலீஸார்வாக்குமூலம் பெற்றனர்.

அப்போது அவர் கூறுகையில், எனக்கு எதிராக சதி நடக்கிறது. பாரம்பரியமாக வகித்துவரும் பதவி தந்திரி பதவி. அந்த உரிமையைப் பறிக்க தேவசம் போர்டால் முடியாதுஎன்றார்.

ஜெயமாலா விவகாரத்தில் உன்னி கிருஷ்ண பணிக்கருடன் தந்திரி மோகனருகடுமையாக மோதியது குறிப்பிடத்தக்கது. பணிக்கரும் ஜெயமாலாவும் சேர்ந்துகோவில் பூசாரிகள், நிர்வாகத்துக்கு எதிராக நாடாகமாடுவதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந் நிலையில் விபச்சார சிக்கலில் மாட்டியுள்ளார் மோகனரு. பொய் புகார் கொடுத்தமோகனரு கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

இதற்கிடையே இன்று புதிதாக காலை எர்ணாகுளம் டவுன் காவல் நிலையத்துக்குச்சென்ற தந்திரி மோகனரு புதிதாக ஒரு புகார் கொடுத்தார். அதில், என்னை யாரும்கடத்திச் செல்லவில்லை. ஞாயிற்றுக்கிழமை இரவு நானாகத் தான் வேலைக்காரப்பெண்ணை அழைத்து வருவதற்காக வலஞ்சம்பலத்தில் உள்ள அந்த அடுக்குமாடிக்குடியிருப்புக்குச் சென்றேன்.

அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் நான் சென்றபோது, ஒரு கும்பல் உள்ளே நுழைந்துஅங்கிருந்த பெண்களுடன் சேர்த்து என்னை படம் எடுத்தது. இதன் பின்னணியில்பெரிய சதி உள்ளது என்று கூறியுள்ளார் மோகனரு.

தான் கொடுத்த புகாரையே மாற்றி புதிதாக இவ்வாறு கூறியுள்ளார் மோகனரு.

ஆனால், மோகனரு குறிப்பிடும் அந்த வேலைக்காரப் பெண் சில மாதங்களுக்கு முன்விபச்சார வழக்கில் கைதாகி உள்ளே போய் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் சாந்தாவிடம் போலீசார் விசாரித்தபோது, தந்திரிக்கும் தனக்கும் மற்றபெண்களுக்கும் பல வருடமாக தொடர்பு இருப்பதை போட்டு உடைத்துவிட்டார்.

யாரோ விரித்த வலையில் மோகனரு வசமாக மாட்டிக் கொண்டுள்ளது மட்டும்தெளிவாகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X