For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹிஸ்புல்லா தாக்குதலில் 13 இஸ்ரேல் வீரர்கள் பலி

By Staff
Google Oneindia Tamil News

பெய்ரூட்:

இஸ்ரேல் படைகள் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 13 இஸ்ரேல்வீரர்கள் கொல்லப்பட்டனர். 25க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

20 ஆண்டுகளில் ஒரே நாளில் இவ்வளவு இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டது இதுவேமுதன்முறை என்பதால் இஸ்ரேலுக்கு இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியைக்கொடுத்துள்ளது.

லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் 15 நாட்களைத் தாண்டியுள்ளநிலையிலும் இஸ்ரேலின் வேகமும், வெறியும் குறைவது போலத் தெரியவில்லை.தொடர்ந்து தனது தாக்குதலை உக்கிரப்படுத்தி வருகிறது இஸ்ரேல்.

அதே நேரத்தில் இஸ்ரேலுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில், ஹிஸ்புல்லாபடையினர் மிகத் தீவிரமாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.

தெற்கு லெபனானில் நுழைந்துள்ள இஸ்ரேல் படையினருக்கு மிகப் பெரிய அழிவுகாத்திருக்கிறது என ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நசருல்லாதொலைக்காட்சியில் அறித்த அடுத்த சில மணி நேரத்தில் 13 இஸ்ரேல் வீரர்கள்கொல்லப்பட்டனர். 25க்கும் மேற்பட்டோர் இந்தத் தாக்குதலில் காயமடைந்தனர்.இதனால் இஸ்ரேலியப் படைகள் தற்காலிகமாக பின் வாங்கின.

இஸ்ரேல் ராணுவத்தினர் மீது ஹிஸ்புல்லா படையினர் கொரில்லா தாக்குதலைநடத்துவதோடு இஸ்ரேல் நாட்டின் வட பகுதிகள் மீது நூற்றுக்கணக்கானராக்கெட்டுகளை ஏவித் தாக்கி வருகின்றனர்.

ஹிஸ்புல்லா படையினரின் தாக்குதலால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் தனது தாக்குதலைதீவிரப்படுத்தியுள்ளது. இன்று காலை முதல் இஸ்ரேலின் தாக்குதல்தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வான் வழியாகவும், தரை வழியாகவும் ஹிஸ்புல்லாபடையினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் விமானப் படையினரின் தொடர் தாக்குதல்களில் பெய்ரூட் வடக்குப்பகுதியில் உள்ள தகவல் தொடர்பு கோபுரங்கள், வானொலி ஆகியவைதகர்க்கப்பட்டன. மருத்துவ மற்றும் உணவுப் பொருட்களை கொண்டு சென்ற 3லாரிகளையும் இஸ்ரேல் படைகள் தாக்கி துவம்சம் செய்தன. இதில் 2 லாரிகளின்டிரைவர்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த 16 நாட்களாக நடந்து வரும் சண்டையில் 433 லெபனானியர்களும், 58இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். லெபான் தரப்பில் இறந்தவர்களில்பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிரியா, ஈரானுக்கு எச்சரிக்கை:

இதற்கிடையே, லெபனான்-இஸ்ரேல் சண்டையில், சிரியாவும், ஈரானும்தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் விளைவுகள்விபரீதமாக இருக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஹிஸ்புல்லா படைகளுக்கு ஈரானும் சிரியாவும் ஆயுதங்களைத் தந்து வருவதாகஇஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் சிரியாவைத் தாக்க வேண்டும் எனஇஸ்ரேலில் குரல்கள் எழுந்துள்ளன.

ஆனால், லெனானைத் தாண்டி இஸ்ரேல் படைகள் முன்னேறினால் கடும் விளைவுகள்ஏற்படும் என சிரியா எச்சரித்துள்ளது. சிரியாவைத் தாக்கினால் ஈரான் உள்ளிட்ட பிறநாடுகளும் தனக்கு எதிராக களமிறங்கும் என்ற அச்சம் இஸ்ரேலுக்கு உள்ளது.இதனால் இப்போதைக்கு சிரியா மீது எந்தத் தாக்குதலும் நடத்தப் போவதில்லை எனஇஸ்ரேல் அறிவித்துவிட்டது.

அமெரிக்க வெளியுறவுஅமைச்சர் காண்டலீசா ரைஸ் கூறுகையில், இந்தப் பிரச்சினைஇஸ்ரேலுக்கும், லெபனானுக்கும் இடையிலானது. இதை இவர்களே தீர்த்துக் கொள்ளவேண்டும். ஆனால் ஹிஸ்புல்லா படையினருக்கு சிரியா ஆயுதங்களை சப்ளைசெய்கிறது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதேபோல ஈரானும் லெபனானுக்குஉதவுகிறது.

இதை இரு நாடுகளும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால்இரு நாடுகளும் சர்வதேச சமுதாயத்திலிருந்து மேலும் தனிமைப்படுத்தப்படும்.போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் தீவிர முயற்சிமேற்கொண்டுள்ள நிலையில் சிரியா, ஈரானின் செயல்கள் கண்டனத்துக்குரியவை.

ஹிஸ்புல்லா படையினர் உடனடியாக தெற்கு லெபனான் எல்லைப் பகுதியிலிருந்துவெளியேற வேண்டும், ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்ற இஸ்ரேலின்கோரிக்கையில் எந்த தவறும் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை என்றார்ரைஸ்.

அமெரிக்காவுக்கு சிரியா எச்சரிக்கை: இந் நிலையில், மத்திய கிழக்கு நாடுகள்குறித்த தனது கொள்கையை அமெரிக்கா மாற்றிக் கொள்ளாவிட்டால், இந்தப்பிராந்தியமே எரிவதை தவிர்க்க முடியாது என இங்கிலாந்துக்கான சிரியா நாட்டுத்தூதர் சமி கியாமி எச்சரித்துள்ளார்.

பிபிசி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், சிரியா தலைநநிகர்டமாஸ்கஸுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரைஸ் வர வேண்டும்.இங்குள்ள தலைவர்களுடன் பேச வேண்டும்.

சிரியாவை ஒதுக்கிவிட்டு அல்லது சிரியாவுக்கு எதிரான நிலையை எடுத்துக் கொண்டுஇந்தப் பிரச்சனையை அமெரிக்காவால் தீர்க்க முடியாது என்றார்.

இதற்கிடையே, ஈரான் நாட்டு தேசிய பாதுகாப்பு சபை செயலாளர் அலி லரிஜானிசிரியா தலைநகர் டமாஸ்கஸ் வந்துள்ளார். அந் நாட்டுத் தலைவர்களுடன் அவர்முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

விலகி நிற்குமாறு சிரியா, ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதற்கு நேர்மாறாக, ஐ.நிா. பொதுச் செயலாளர் கோபி அன்னான், மத்திய கிழக்குப் பிரச்சினையில்சிரியாவையும், ஈரானையும் புறக்கணிக்க முடியாது. இரு நாடுகளையும் அமைதிப்பேச்சுக்களில் சேர்த்துக் கொண்டால் தான் லெபனால்-இஸ்ரேல் பிரச்சனைக்கு தீர்வுகாம முடியும் என்று கூறியுள்ளார்.

பாலஸ்தீனம் குமுறல்:

இதற்கிடையே, இஸ்ரேலின் அதிரடி தாக்குதல்களில் பாலஸ்தீனம் முழுமையாகஅழிந்து போய்க் கிடப்பதாக பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாஸ் குமுறல்வெளியிட்டுள்ளார்.

லெனான் மீது ஒரு பக்கம் தாக்குதல் நடத்திக் கொண்டே பாலஸ்தீனம் மீதும் இஸ்ரேல்தனது வழக்கமான தாக்குதலை நடத்தி வருகிறது.

இந் நிலையில் அப்பாஸ் கூறுகையில், லெபனானும், பாலஸ்தீனம் முழுமையாகஅழிந்து போய்க் கிடக்கின்றன. போரை நிறுத்த ஐரோப்பிய யூனியன் நாடுகளும்,அரபு நாடுகளும் எடுத்து வரும் யற்சிகளுக்குப் பலன் கிடைப்பது போலத்தெரியவில்லை என்றார்.

வேண்டுமென்றே தாக்கிய இஸ்ரேல்-ஐ.நா:

இதற்கிடையே, லெபனானில் ஐ.நா. கண்காணிப்புக் குழுவினர் முகாமிட்டிருந்தஇடத்தில் குண்டு வீச்சு நடத்த வேண்டாம் என இஸ்ரேலை ஐ.நா. அதிகாரிகள் 10முறை தொலைபேசியில் எச்சரித்தும் கூட அதைக் கண்டுகொள்ளாமல் இஸ்ரேல் தரைவழியாகவும், வான் வழியாகவும் தொடர்ந்து நடத்திய தாக்குதலின் விளைவாகவே 4ஐ.நா. பார்வையாளர்கள் உயிரிழக்க நேரிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து அயர்லாந்து நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒருதகவலில், ஐ.நா. முகாம் உள்ள இடத்திற்கு அருகே குண்டு வீச்சு நடப்பதாகவும்,இதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அயர்லாந்து மூத்த ராணுவ அதிகாரி இஸ்ரேலை10 முறை எச்சரித்துள்ளார். ஆனால் அதை இஸ்ரேல் கண்டுகொள்ளாமல் தாக்குதல்நடத்தி ஐ.நா. பார்வையாளர்களை கொன்றுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இத் தாக்குதலில் கனடா, பின்லாந்து, ஆஸ்திரியா மற்றும் சீனாவைச் சேர்ந்த நான்குஐ.நா. பார்வையாளர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்குக் கடும் கண்டனம்தெவித்துள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னானும் இஸ்ரேலின்நடவடிக்கையை கண்டித்துள்ளார்.

வேண்டும் என்றே திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் போல இது தெரிகிறது என்றார்அன்னான்.

ஆனால் வேண்டும் என்றே இந்தத் தாக்குதலை நடத்தவில்லை என்று இஸ்ரேல்பிரதமர் எஹூத் ஒல்மர்ட் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது.இதற்காக இஸ்ரேல் சார்பில் வருத்தம் தெரிவிக்கிறேன். இதை திட்டமிட்டு இஸ்ரேல்செய்யவில்லை என்று கோபி அன்னானிடம் தொலைபேசி மூலம் தெரவித்துள்ளார்ஒல்மர்ட்.

இஸ்ரேலுக்கு பெரும் ஆதரவாக இருக்கும் அமெரிக்காவும், அன்னான் கருத்துக்குக்கண்டனம் தெரிவித்துள்ளது. கடும் சண்டை நடக்கும்போது இவ்வாறு நேர்வதுசாதாரண விஷயம். இதை உள்நோக்கத்துடன் பார்க்கக் கூடாது என்று அமெரிக்காகூறியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X