For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவை அலற வைக்கும் அக்னி!

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன் :

அமெரிக்காவில் நிலவும் வரலாறு காணாத வெப்பத்திற்கு இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளனர். பலமாகாணங்களில் மின்சார வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதால் கடும் வெப்பத்தில் சிக்கி அமெரிக்கா அல்லாடிவருகிறது.

அமெரிக்காவில் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. கலிபோர்னியா,மிசெளரி, நியூயார்க் ஆகிய மாநலங்களில் மின்சார வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகே உளள உட்லேண்ட் ஹில்ஸ் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு 48 டிகிரிசெல்சியஸ் (பாரன்ஹீட்டில் இது 119 டிகிரி) வெயில் பதிவாகியுள்ளது.

கடும் வெயிலுக்கு இதுவரை 53 பேர் இறந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வயோதிகர்கள் ஆவர்.ஆயிரக்கணக்கான கால்நடைகளும் கொளுத்தும் வெயிலுக்கு மடிந்து வருகின்றன.

இந்த வெயிலுக்கு அமெரிக்காவின் பிரபலமான இணையதளமான மைஸ்பேஸும் தப்பவில்லை. கடும்வெயிலால் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள இந்த இணையதளத்தின் சர்வர் செயலிழந்து விட்டது. கிட்டத்தட்ட 7 மணிநேரத்திற்குப் பிறகே அது சரியானது.

லாஸ் ஏஞ்சலஸ் நகரில் தான் இதுவரை இல்லாத அளவுக்கு வெயில் அதிகமாக உள்ளது.

மிசெளரியில் மின்சாரம் இல்லாமல் 1,59,000 பேர் கடுமையான பாதிப்புக்கு ஆளாகினர். இங்கு திடீரென மழைவருவதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. ஆனால் மழை வராமல் பெரிய இடி தாக்கியதில் மின் கட்டமைப்புகள்சீர்குலைந்து சுத்தமாக மின்சார சப்ளை பாதிக்கப்பட்டுவிட்டது.

நியூயார்க்கில் கடந்த 9 நாட்களாக பாரோ ஆப் குவீன்ஸ் பகுதியில் மின்சாரம் இல்லை. இதனால் அப்பகுதியைச்சேர்ந்த 6,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் கடுப்படைந்துள்ளனர்.

கலிபோர்னியாவில் மொத்தம் 17 பேர் வெயிலுக்கு இறந்துள்ளனர். ஸ்டாக்டன் நகரில் 79 வயது பெண்மணிவெயிலைத் தாங்க டியாமல் இறந்தார். கலிபோர்னியாவில் சராசரி வெப்ப நிலையே 38 டிகிரியாக உள்ளது.

இதனால் இங்கு ஏ.சி. இயந்திரங்களை நிறுத்தாமல் ஓட விட்டுக் கொண்டுள்ளனர். இதனால் மின்சாரத்துக்குதட்டுப்பாடு ஏற்பட்டுளளது.

மின்சாரத் தட்டுப்பாட்டையடுத்து 2வது நிலை எச்சரிக்கையை அமெரிக்க மின்சார துறையினர் விடுத்துள்ளனர்.நிலைமை இப்படியே நீடித்தால் 3வது நிலை எச்சரிக்கை விடப்படும். அதாவது கலிபோர்னியா மாநிலம்முழுவதும் மின்வெட்டை அமல்படுத்த நேரிடும். அதுதான் 3வது நிலை எச்சரிக்கை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கலிபோர்னியாவில் 50,000 வீடுகளுக்கு மின்சாரம் இல்லை. இதில்சான்பிரான்ஸிஸ்கோவும் தப்பவில்லை. கலிபோர்னியாவில் கடந்த 2001ம் ஆண்டு மிகப் பெரும் மின்சாரத்தட்டுப்பாடு ஏற்பட்டு, அவசர நிலை பிரகடனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது நினைவிருக்கலாம்.

மின் வினியோகம் இந்த அளவுக்கு மோசமாகஇருப்பதற்கு இன்னொரு முக்கியக்காரணம், அரதப் பழசானகட்டமைப்புடன் இம்மாநில மின் இணைப்புகள் இருப்பதுதான். 1930ம் ஆண்டுகளில போடப்பட்ட அதேகட்டமைப்பு வசதியுடன்தான் இங்குள்ள மின் இணைப்புகள் இருக்கிறதாம். இத்துறையில் அரசு சார்பில் அதிகஅளவிலான முதலீடுகள் இல்லை என்று கூறப்படுகிறது.

நியூயார்க் நகரின் ஒரு பகுதியில் கடந்த 9 நாட்களாக மின்சாரம் இல்லை. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள்கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் மக்கள்தெருவில் வந்து படுக்கும் நிலை உருவாகியுள்ளது.

அவர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தினர் குளிர்ந்த நீர், ஐஸ் கட்டிகள், உணவு உள்ளிட்டவற்றை வழங்கிவருகின்றனர்.

இந்த நகரைச் சேர்ந்த பீட்டர் ஹிதேசி என்பவர் கூறுகையில், இது நியூயார்க். நாங்கள் கட்டும் வரிகளுக்குஎங்களுக்குக் கிடைக்கிற வசதிகள் இதுதானா என்று நினைத்தால் அதிர்ச்சியாக உள்ளது என்கிறார்.

வல்லரசு என்று கூறிக் கொள்ளும் அமெரிக்காவால் ஒரு வெயிலை சமாளிக்க முடியவில்லை என்பதுஆச்சரியமாகத்தான் உள்ளது.

நம் ஊரில் 100 டிகிரி வெயில் அடித்தாலும், சைக்கிளில் அரக்க பரக்க ஓடி, வியர்க்க விறுவிறுக்க அப்படியே டீக்கடையில் ஸ்டாண்டைப் போட்டு, கொதிக்கும் டீயைக் குடித்துவிட்டு, டீ என்ன சில்லுன்னு இருக்கு என்றுதிட்டிவிட்டு கிளம்புவோமே...

சொர்க்கமே என்றாலும்...

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X