For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி: 16 ஆண்டு விசாரணை முடிந்தது-தீர்ப்பு ஒத்திவைப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கில் இனியும் விசாரணை தேவையில்லைஎன்று கூறி, இறுதித் தீர்ப்பு ஒத்திவைப்பதாக நடுவர் மன்றம் அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடகத்திற்கிடையே காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்டபிரச்சினையைத் தொடர்ந்து கடந்த 1990ம் ஆண்டு ஜூன் மாதம் முன்னாள் பிரதமர்வி.பி.சிங் ஆட்சி காலத்தில் காவிரி நதி நீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான நடுவர்மன்றம் தொடங்கப்பட்டது.

இதையடுத்து 1991ம் ஆண்டு ஜூன் மாதம் நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பினைவழங்கியது. அதன்படி ஆண்டுதோறும் கர்நாடகம் தமிழகத்திற்கு 205 டிஎம்சி நீரைவழங்க வேண்டும், கர்நாடகத்தின் காவிரிப் பாசனப் பகுதி நிலங்களின் அளவு 11.2லட்சம் ஏக்கருக்கு மேல் அதிகரிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது.

இந்தத் இடைக்காலத் தீர்ப்பை கர்நாடகம் மதித்தே கிடையாது. இருந்தாலும்கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக நடுவர் மன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

இந்த விசாரணை எப்போது முடியும், எப்போது இறுதித் தீர்ப்பு வெளியாகும் என்றுதமிழக காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் எதிர்பார்ததிருந்த நிலையில, சிலமாதங்களுக்கு முன் புதிய ஆய்வு ஒன்றுக்கு நடுவர் மன்றத்தின் இரு உறுப்பினர்களும்உத்தரவிட்டனர்.

இதற்கு நடுவர் மன்றத்தின் தலைவரும், தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களும்எதிர்ப்பு தெரிவித்தன. வழக்கின் தீர்ப்பை இது மேலும் தாமதப்படுத்தும் என்றுதமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதையடுத்து அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இந்த நடுவர் மன்றத்தின்ஆயுட்காலம் வருகிற ஆகஸ்ட் 6ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

இந் நிலையில் மேலும் 6 மாதங்களுக்கு ஆயுளை நீட்டிக்க நடுவர் மன்றம் கோரிக்கைவிடுத்தது.

இச் சூழ்நிலையில் நடுவர் மன்றத்தில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோதுதலைவர் என்.பி.சிங், உறுப்பினர்கள் ராவ், சுதிர் நாராயணன் ஆகியோர் ஒருஉத்தரவைப் பிறப்பித்தனர்.

அதில், அனைத்துத் தரப்பும் தங்களது வாதங்களை முடித்து விட்டன. மேலும்விசாரணை தேவையில்லை. இறுதித் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது என்றுதெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக, காவிரிப் பாசன மாநிலங்களின் நிலத்தடி நீர் இருப்பு மற்றும்தேவைப்படும் நீரின் அளவு குறித்து இரண்டு ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின்முடிவுகளை நான்கு மாநிலங்களுக்கும் பகிரங்கமாக வெளியிட வேண்டும் எனநடுவர் மன்றத்தின் இரு உறுப்பினர்களும் உத்தரவிட முடிவு செய்தனர்.

இதற்கு நான்கு மாநிலங்களும் ஆட்சேபனை தெரிவித்தன. இதற்கு மேலும் விவாதம்நடத்த நிாங்கள் தயாராக இல்லை. விரைவில் இறுதித் தீர்ப்பை எதிர்பார்க்கிறோம்என்று ஒரே குரலில் தெரிவித்து விட்டனர்.

மேலும், நடுவர் மன்றத் தலைவரும் இது தேவையில்லாதது என்று தெரிவித்தார்.இனியும் தீர்ப்பை தாமதப்படுத்தினால் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் ஏற்படக் கூடியஅரசியல் விளைவுகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று இருஉறுப்பினர்களுக்கும் விளக்கினார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நேற்று நடுவர் மன்றம் கூடியபோது, இருஉறுப்பினர்களும் தங்களது முந்தையை முடிவைக் கைவிட்டு விட்டு இறுதித் தீர்ப்புவெளியிடப்படும் என்ற உத்தரவில் கையெழுத்திட்டனர்.

இருப்பினும் நடுவர் மன்றத்தின் ஆயுட்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்என்பதால் அதற்குள் தீர்ப்பு வெளியாகாது என்றே தெரிகிறது. எனவே தீர்ப்புவெளிவர குறைந்தபட்சம் இன்னும் 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள உலகின் மிகப் பழமையான வழக்கு என்றபெருமை காவிரிப் பிரச்சினைக்கு உண்டு. கடந்த 1803ம் ஆண்டு முதல்இப்பிரச்சினை தமிழக, கர்நாடக மாநில விவசாயிகளை அலைக்கழித்து வருகிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சென்னை மாகாணத்திற்கும், மைசூர் மாகாணத்திற்கும்இடையே காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக1892ம் ஆண்டும், 1924ம்ஆண்டும் இரு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் பின்னர் ஒப்பந்தம்புதுப்பிக்கப்படவில்லை.

புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X