For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழில் பெயர்கள்-பதிவு செய்ய கட்டணம் குறைப்பு தமிழில் பெயர்கள்-பதிவுக் கட்டணம் குறைப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழில் பெயர் மாற்றம் செய்வதை பதிவு செய்ய இனிமேல் 50 ரூபாய் கட்டணம்கட்டினால் போதும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு விடுதலைச்சிறுத்தைகள் உறுப்பினர் செல்வம் பேசுகையில்,

கடந்த காலத்தில் பலர் தங்களுடைய சமஸ்கிருத, இந்துப் பெயர்களை தூய தமிழில்மாற்றி வைத்துக்கொண்டனர். ஆனால், இந்தப் பெயர்களை அரசு கெஜட்டில் பதிவுசெய்ய கட்டணத்தை இரு மடங்காக அதிகாரிகள் உயர்த்தி விட்டனர்.

எனவே தூய தமிழில் பெயர்களை வைத்ததுக் கொள்ளவும், அதை பதிவு செய்யவும்கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர் கருணாநிதி, முதலில் எவ்வளவு கட்டணம் இருந்தது?அது இரு மடங்காக எவ்வளவு ஆனது என்று கேட்டார்.

அதற்கு செல்வம், ரூ. 220லிருந்து ரூ. 440 ஆக உயர்த்தி விட்டார்கள். இதன்காரணமாக பெயர் மாற்றம் செய்தவர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்யமுடியவில்லை என்றார்.

இதற்கு பதிலளித்த கருணாநிதி, இது தமிழுக்குத் தரப்பட்ட தண்டனையாககருதுகிறேன். தமிழ்ப் பெயர்களை பதிவு செய்ய கட்டண விலக்கு தர உறுப்பினர்கோருகிறார்.

ஆனால் பெயர்களை பதிவு செய்ய கட்டணம் தர வேண்டும் என்ற வகையில், தமிழ்ப்பெயர்களை கெஜட்டில் பதிவு செய்ய இனிமேல் ரூ. 50 மட்டும் கட்டினால் போதும்என்று அறிவித்தார்.

இதற்கு நன்றி தெரிவித்த செல்வம் தொடர்ந்து பேசுகையில்,

உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக பயன்படுத்த ஆவண செயயவேண்டும். தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தரவேண்டும்.

மேயர், நகராட்சித் தலைவர்களை உறுப்பினர்களே தேர்ந்தெடுக்க வகை செய்யும்அவசரச் சட்டத்தைத் திரும்பப பெற வேண்டும். சிதம்பரம் நடராஜர் கோவிலில்திருவாசகம்,தேவாரம் பாட விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். தடையாகஉள்ள தீக்ஷிதர்களை கைது செய்ய வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X