For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 ரூபாய் அரிசி தரமாக இல்லை-விஜய்காந்த்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் வழங்கும் வாக்குறுதிகள் ஓட்டுப் பதிவின்போதுகையில் வைக்கும் அடையாள மை போல மறைந்து போகக் கூடியவை என்றுகாங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் கூறியதால் திமுக உறுப்பினர்களிடையேசலசலப்பு ஏற்பட்டது.

சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் கலந்து கொண்டு தேமுதிகஉறுப்பினர் விஜயகாந்த் பேசுகையில், திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் திட்டம் எந்த அளவில் உள்ளது என்று கேள்விஎழுப்பினார்.

அதற்கு மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பதிலளிக்கையில், தமிழகத்தில்உள்ள தரிசு நிலங்களை கையகப்படுத்தி பண்படுத்தி அதை விவசாயிகளுக்கும்,ஏழைகளுக்கும் பிரித்துக் கொடுப்போம் என்று கூறியுள்ளோம். சொன்னபடிகொடுப்போம் என்றார்.

பின்னர் எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், தமிழகத்தில்தரிசு நிலங்கள் எவ்வளவு உள்ளன? இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்ஜெயலலிதா எழுப்பிய கேள்விகளுக்கு ஆட்சியாளர்களின் பதில் என்ன?

இந்தத் திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என்பதை விளக்க வேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், தேர்தல் நேரத்தில்அரசியல் கட்சிகள் கொடுக்கும் வாக்குறுதிகள் என்பது, தேர்தல் நேரத்தில் கைவிரல்களில் வைக்கும் மையைப் போல மறைந்து போகக் கூடியவை. இருப்பினும்எதிர்க்கட்சித் துணைத் தலைவர் எழுப்பிய கேள்வியை நான் வரவேற்கிறேன் என்றார்.

இதனால் திமுக உறுப்பினர்களிடையே சலசலப்பு எழுந்தது.

தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், பீட்டர் அல்போன்ஸ் மற்றும் அவரதுகூட்டணிக் கட்சிகளுக்கு வேண்டுமானால் தேர்தல் வாக்குறுதிகள் அடையாள மைபோல மறைந்து போகக் கூடியவையாக இருக்கலாம்.

ஆனால் அதிமுகவைப் பொருத்தவரை வாக்குறுதி கொடுத்தால் அதை நிச்சயமாகநிறைவேற்றுவோம். சொன்னதை சொன்னபடி செய்வோம் என்றார்.

அப்போது முதல்வர் கருணாநிநதி குறுக்கிட்டு, தரிசு நிலங்கள் குறித்த கணக்கெடுப்புநடந்து வருகிறது. அது முடிந்தவுடன் பண்படுத்தப்பட்ட தரிசு நிலங்கள் ஏழைகளுக்குதலா 2 ஏக்கர் என பிரித்து வழங்கப்படும் என்றார்.

முன்னதாக விஜய்காந்த் பேசுகையில்,

பட்ஜெட்டில் உள்ள நிறை குறைகளை எடுத்துச் சொல்ல வேண்டும். நிறைகளைசொல்ல மாமன்றத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். குறைகளை சொல்லஎதிர்க்கட்சியில் குறைந்த பேரே உள்ளனர்.

காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என கூறியதற்கு நன்றிதெரிவித்துக்கொள்கிறோன். கூட்டுறவு கடன்களை ரத்து செய்ததை வரவேற்கிறேன்.ஆனால் எதிர் பார்த்தது போல இந்த திட்டம் வெற்றி பெறாது என கருதுகிறேன்.

விவசாயிகளுக்கு கடன் முறையாக ரத்து செய்யப்படவில்லை. மீண்டும் கடன் பெறமுடியாத நிலை உள்ளது. விசாய கடன் வட்டியை 9 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாககுறைத்ததற்கு நன்றி.

2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி தரமானதாக இல்லை. பல இடங்களில் தரம் குறையாக 2ரூபாய்க்கு அரிசி கொடுப்பது பெரிதல்ல. தரமாக கொடுக்க வேண்டும். வீடு தோறும்ரேசன் பொருள்கள் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து வினியோகம் செய்தால் கடத்தல்,முறைகேடுகளை தடுக்கலாம்.

போலி ரேஷன் கார்டை ஒழிக்கலாம். தீவிரவாதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைஎடுத்தால் மட்டும் போதாது. தீவிரவாதம் உருவாக காரணமாக இருக்கும்வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க வேண்டும்.

விருத்தாசலத்தில் அரசு மகளிர் கலைக் கல்லூரி, வேளாண் கல்லூரி, மூடப்பட்டபீங்கான் தொழிற்சாலையை திறக்க வேண்டும். மத்திய அரசு மாநில அரசுக்குஒதுக்கும் நிதி நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதை போக்க என்ன நடவடிக்கைஎடுக்க போகிறீர்கள்? பணக்காரர்கள் மற்றும் வசதி படைத்தவர்களுக்கு வரியைவிதித்து வருவாயை பெருக்குவது அரசின் கடமை.

வரி இல்லாத பட்ஜெட் என்று கூறி வசதி படைத்தவர்களுக்கும், வசதிஇல்லாதவர்களுக்கும் ஒரே மாதிரியான நிலையை குறிப்பிட்டு இருப்பது முறைஅல்ல. இந்த பட்ஜெட் மூலம் வசதி படைத்தவர்களுக்கு இந்த அரசு உதவுகிறது.பணக்காரர்களுக்கு வரி விதிக்க தயங்குகிறது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X