For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு உதவிதொகை-11 லட்சம் பேருக்கு கிடைக்கும்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ள படித்த வேலை வாய்ப்பற்றஇளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 11 லட்டம் பேர்பயனடைவர்கள் என்று தெரியவந்துள்ளது.

வேலை வேலை வாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல்,வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு இந்த உதவித் தொகைவழங்கப்படவுள்ளது.

பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதந்தோறும் ரூ.150ம், மேல்நிலைவகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதந்தோறும் ரூ.200மும், இளநிலை, முதுநிலைப்பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.300ம் உதவித்தொகை வழங்கப்படும் என்றுபட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த உதவித் தொகை மூன்றாண்டுகளுக்கு வழங்கப்படும். மாநிலம் முழுவதும்கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி நிலவரப்படி வேலைவாய்ப்பு அலுவலங்களில் பதிவுசெய்து காத்திருப்போர் எண்ணிக்கை 40.19 லட்சம் பேர்.

இவர்களில் 11 லட்சம் பேர் அரசின் உதவித் தொகை பெற தகுதி பெற்றுள்ளனர்.இதுகுறித்து அரசு ஆணை வெளிட்டதும், பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்யப்பட்டுவிண்ணப்பங்கள் பெறப்படும் என்று வேலைவாய்ப்புத் துறை அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள், தற்போது படித்துக் கொண்டிருக்கும்மாணவர்கள் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற முடியாது.

ஏற்கெனவே கடந்த 1984 முதல் 1993 வரை படித்த வேலையில்லாதஇளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படு வந்தது. பள்ளி இறுதி வகுப்புமுடித்தவர்களுக்கு ரூ.50ம், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.75ம்,இளநிலை, முதுநிலைப் பட்டதாரிகளுக்கு ரூ.100ம் உதவித்தொகையாகவழங்கப்பட்டு வந்தது.

ஆனால், 1993ம் ஆண்டு இத்திட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

இந் நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் மீண்டும் நிதியுதவி அளிக்கப்படும்என அறிவிக்கப்பட்டு, இப்போது பட்ஜெட்டிலும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக, பிளஸ் டூ, பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் வேலைவாய்ப்புஅலுவலங்களில் பதிவு செய்வது கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த மே 29 முதல்ஜூன் 29 முடிய ஒரு மாதத்தில் மட்டும் பிளஸ் டூ மாணவர்களில் 1.87 லட்சம் பேரும்,பத்தாம் வகுப்பு மாணவர்களில் 3.23 லட்சம் மாணவர்களும் பதிவு செய்துள்ளனர்.

இது கடந்த ஆண்டை விட 30 சதவீதம் அதிகமாகும். இதில், யாரும் வேலைகிடைக்கும் என்று நம்பி வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருக்கவாய்ப்பில்லை. அரசின் உதவித் தொகை கிடைக்கும் என்பதற்காகவேபெரும்பாலானவர்கள் பதிவு செய்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X