For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ.வுக்கு அன்பழகன் விட்ட சவால்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக அரசு மைனாரிட்டி அரசு அல்ல. அப்படி இந்த அரசை மைனாரிட்டி அரசு என்றுஜெயலலிதா கருதுவாரேயானால், சட்டசபையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக்கொண்டு வர அவர் தயாரா? என்று நிதியமைச்சர் அன்பழகன் ஜெயலலிதாவுக்குசவால் விட்டார்.

இன்று சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க் கட்சித் தலைவரான ஜெயலலிதா பேசுகையில்,

மைனாரிட்டி திமுக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் ஏதாவது நல்ல விஷயம் இருக்கிறதா என்றுஅரும்பாடுபட்டு தேடினேன். நல்லது இருந்தால் அவர்களை பாராட்டலாம் என்று முயற்சி செய்தேன். ஆனால்,அதில் பாராட்டும்படி ஏதுமே இல்லை என்பதே கசப்பான உண்மை.

இந்த பட்ஜெட் தமிழக மக்களுக்கு துரோகம் செய்துவிட்டது. நன்மை தருவது போல மாயமான தோற்றத்தைஉருவாக்கியிருக்கிறார்கள். இது தமிழகத்துக்கு விரோதமான பட்ஜெட். தீபாவளி காலத்தில் வாண வேடிக்கைமாதிரி தான் பட்ஜெட் உள்ளது. வாண வேடிக்கையின்போது மத்தாப்புக்கள் ஒளிரும். தூரத்தில் இருந்து பார்க்கஅழகாக இருக்கும். ஆனால், அது சிறிது நேரத்தில் சாம்பலாகவே மண்ணில் விழும்.

போலி ஆவணம் மூலம் தயாரிக்கப்பட்டது போல இந்த பட்ஜெட் உள்ளது. கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்தில்நிதி நெருக்கடி ஏற்பட்டது. அது போலவே மீண்டும் ஏற்படப் போகிறது. ஜனவரியில் தாக்கல் செய்த இடைக்காலபட்ஜெட்டில் ரூ. 207 கோடி பற்றாக்குறை இருந்தது. இப்போது அது ரூ. 1,229 கோடியாக உயர்ந்துவிட்டதுஎன்றார் ஜெயலலிதா.

அப்போது அமைச்சர் பொன்முடி எழுந்து பேச முயன்றார். இதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்புத்தெரிவித்தனர். அவர்களை சபாநாயகர் ஆவுடையப்பன் எச்சரித்து அமர வைத்தார்.

அமைச்சர் பொன்முடி: எதிர்க் கட்சித் தலைவர் சர்ச் பார்க் கான்வெண்டில் படித்தவர். ஆனால், அவருக்குஅடிப்படை கணக்கு கூட தெரியவில்லை என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. (அதிமுகவினர் பயங்கர கூச்சல்எழுப்பினர்) சட்டசபையில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் சத்தம் போடுவது, கூச்சல் போடுவது, மிரட்டுவது போன்றசெயல்களில் ஈடுபவது சரியல்ல. (அதிமுகவினர் ஒட்டுமொத்தமாக எழுந்து கூச்சலிட்டனர்)

ஜெயலலிதா: நான் கணக்கில் வீக் இல்லை. நான் மெட்ரிக் தேர்வில் கணக்குப் பாடத்தில் 200க்கு 200வாங்கியவள். வெறும் 103 எம்எல்ஏக்கள் கொண்ட மைனாரிட்டி திமுக அரசை மைனாரிட்டி என்று சொல்லாமல்வேறு என்ன சொல்வது? (அதிமுகவினர் மேஜைகளைத் தட்டி ஆராவாரம்)

அமைச்சர் அன்பழகன்: மைனாரிட்டி அரசு என்றால் அதை நிரூபிக்க நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துஇந்த அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

அந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேறினால் இந்த அரசு மைனாரிட்டி அரசுஎன்பது உண்மையாகும். இல்லாவிட்டால் இது பெரும்பான்மை பலம் கொண்டஅரசுதான் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் ஒத்துக் கொள்வாரா? என்று சவால்விட்டார் அன்பழகன்.

சபாநாயகர்: (ஜெயலலிதாவைப் பார்த்து) அடுத்த சப்ஜெக்டுக்குப் போங்கள்.

ஜெ: அவர்கள் (திமுக) சொல்வதை நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். 118 எம்எல்ஏக்கள் கூட இல்லாதநிலையில் தால் திமுக நடத்தும் ஆட்சி மைனாரிட்டி ஆட்சி தானே. (அதிமுக உறுப்பினர்கள்மேஜையைத் தட்டி ஆராவாரம்)

அப்போது இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ சிவபுண்ணியம் பேச எழுந்தார். இதற்குஅதிமுகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவரை பேச விடக் கூடாது என்றனர்.

சிவபுண்ணியம்: நீங்கள் (அதிமுகவினர்) மைனாரிட்டியாக இருப்பதால் தான்முன்னால் (எதிர்க் கட்சி வரிசையில்) இருக்கிறீர்கள். கூட்டணிக் கட்சிகளின் முழுஆதரவுடன் ஆட்சியமைக்க திமுக பொறுப்பேற்றுக் கொண்டது. இதனால் இந்த அரசைமைனாரிட்டி அரசு என்று சொல்ல முடியாது. (திமுக உறுப்பினர்கள் மேஜைகளைத்தட்டி ஆராவாரம்)

அன்பழகன்: மைனாரிட்டியாக இருந்து கொண்டு அதிமுக இப்படிப் பேசக் கூடாது.

ஜெ: 63 இடங்களில் நாங்கள் வென்றுள்ளோம். அதனால் பிரதான எதிர்க் கட்சியாகஇருக்கிறோம். உங்களுக்கு 96 எம்எல்ஏக்கள் தான் இருக்கிறார்கள் என்று சொன்னால்ஏன் கோபம் வருகிறது.

பொன்முடி: கடந்த காலத்தில் நாங்கள் எதிர்க் கட்சியாக இருந்தபோது, அவையில்குறுக்கீடு செய்யக் கூடாது என்று எங்களுக்கு சொன்னீர்கள். அதே முன் உதாரணத்தின்அடிப்படையில் தான் இப்போது உங்களுக்கு சொல்கிறோம்.

அதிமுகவினர் கோபத்தோடு பொன்முடியை நோக்கி கைகளை நீட்டிப் பேசினர்.

பொன்முடி: கைகளை நீட்டி பேசுவது சரியல்ல. எனக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதில்சொல்லட்டும். 163 எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்றுள்ள இந்த அரசுபெரும்பான்மை அரசு தான். அரசியல் சட்டம் தெரியாதவர்கள் அதை தெரிந்துகொள்ள வேண்டும்.

ஜெ: எனது ஆட்சியில் எதிர்க் கட்சித் தலைவராக இருந்த அன்பழகனுக்கு உரியமரியாதை தந்து பேச அனுமதித்தோம். ஆனால், இன்று என்னை பேச விடாமல்மிரட்டுகிறார்கள். யாருக்கும் எதற்கும் என்னால் பதில் சொல்ல முடியும்.

பொன்முடி: பேசக் கூடிய வார்த்தைகள் உணர்ச்சிகளை உருவாக்காமல் இருந்தால்நாங்களும் இந்த அவைக்கு பெருமை சேர்ப்போம்.

அன்பழகன்: பட்ஜெட்டில் 100 சதவீத பற்றாக்குறை இருப்பதாக எதிர்க் கட்சித்தலைவர் கூறுகிறார். சமூக நலனை பாதுகாக்க இந்த பற்றாக்குறை பெரிய விஷயம்அல்ல. கடந்த ஆட்சியில் நாங்கள் ரூ. 28,000 கடனை விட்டுச் சென்றோம். நீங்கள்போகும்போது ரூ. 56,000 கடன்களை வைத்துவிட்டுச் சென்றீர்கள். அந்தக் கடனைதான் இப்போது நாங்கள் எதிர்கொள்கிறோம்.

ஜெ: நான் என் சிந்தனையில் உதித்ததை பேசியிருக்கிறேன். யாரும் எழுதித்தரவில்லை.

முதல்வர் கருணாநிதி: அப்படியானால் அம்மையார் இதுவரை சொந்தக் கருத்துக்களைகூறவில்லை என்கிறாரா? இதுவரை யாரோ எழுதிக் கொடுத்ததை ஒப்புக்கொள்கிறாரா?

ஜெ: கடந்த முறை சில குறிப்புகளை வைத்துப் பேசினேன். ஆளும் தரப்பினர்குறுக்கீடு செய்ததால் எனது சிந்தனை ஓட்டம் தடைபட்டது. பதில் சொல்லும் திறமைஎனக்கு எப்போதும் உண்டு.

கருணாநிதி: எதற்கும் பதிலளிக்கும் இயற்கையான மொழி வளம், உடல் வலிமைஎனக்குண்டு.

ஜெ: என் பேச்சைக் கேட்டு திணறவில்லை என முதல்வர் கூறுகிறார். தேர்தல்வாக்குறுதியை அளித்து மக்களை சந்தித்தபோது மக்கள் முன் திக்குமுக்காடிப்போனார்.

கருணாநிதி: எதிர்க் கட்சித் தலைவர் கடன்களை ரத்து செய்தது குறித்து பேசினார்.அதற்கு நிதியமைச்சர் பதில் தந்தார். அந்த பதிலுக்கு எந்த விளக்கமும் தராமல் அடுத்தபிரச்சனைக்கு அம்மையார் சென்றுவிட்டார்.

ஜெ: நான் நழுவவில்லை என்று கூறிய ஜெயலலிதா தொடர்ந்து பேடசிய பேச்சுக்குதிமுக தரப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. பதிலுக்கு அதிமுகவினரும் கூச்சலிட்டதால்பெரும் அமளி ஏற்பட்டது.

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்: அவை மரபு இல்லாத வார்த்தைகளை எதிர்க் கட்சித்தலைவர் பேசுகிறார். இது போன்ற முன்னுதாரணங்கள் எதிர்விளைவைத் தான்ஏற்படுத்தும்.

காங். எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ்: 6 கோடி மக்கள் வாக்களித்து சட்டமன்றஉறுப்பினர்களை தேர்வு செய்து அனுப்பியுள்ளனர். அவர்களை குறை சொல்லும்வார்த்தைகளை பயன்படுத்துவது சரியல்ல.

இதையடுத்து ஜெயலலிதா பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்கியதாகசபாநாயகர் ஆவுடையப்பன் அறிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஜெயலலிதா, அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டது, ஒருகுழந்தைக்கு தாய் கொடுத்த கசப்பு மரும்து என்றார். இதையடுத்து அன்பழகன் பதில்தரவே, ஜெயலலிதாவுக்கும் அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது இடைமறித்த சபாநாயர்: நீங்கள் (ஜெ) 1 மணி 46 நிமிடம் பேசிவிட்டீர்கள்.சீக்கிரம் முடியுங்கள் என்றார். இதையடுத்து சபாநாயகருடன் வாக்குவாதத்தில்ஈடுபட்டார் ஜெயலிலதா.

ஜெ: நாங்கள் ஆட்சியில் இருந்தபோது 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இருப்பதாகசொல்லவே இல்லை. 3.5 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் தான் உள்ளது. இதை நான்பலமுறை சொல்லியும் திமுக, பாமக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஏற்காமல்அதே குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் சொல்கின்றன.

கருணாநிதி: அம்மையார் கம்யூனிஸ்ட், பாமக, காங்கிரசை ஏமாற்றுபவர்கள் என்றுகுறிப்பிடுகிறார். அவர்கள் அப்படி ஏமாற்றுபவர்கள் அல்ல. நான் ஏமாளியும் அல்லஎன்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X