For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏட்டு மகளை கற்பழித்த பைனானிசியர்-உடந்தையாக இருந்த போலீசார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சினிமா பைனான்சியர் ஏட்டு மகளை கற்பழிக்க 4 போலீசார் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.

சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ். ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு, இவரது மனைவி கிரேஸி. சாராதாபள்ளியில் ஆசிரியாராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகள் கரோலின் (16).

கரோலினை மைலாப்பூரைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் கோபி கண்ணன் (48) கடத்திச் சென்று கட்டாயதிருமணம் செய்ததாக தங்கராஜ் புகார் கொடுத்தார். உயர் நீதிமன்றத்தலி ஹேபியஸ் கார்பஸ் மனுவும் தாக்கல்செய்தார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி மைலாப்பூர் போலீசார் கரோலினை ஆண்டிப்பட்டியில் மீட்டனர்.

பின்னர் இது தொடர்பாக மைலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு அதிர்ச்சி தரும்தகவல்கள் கிடைத்தன. அதன் விவரம்,

பைனான்சியரான கோபி கண்ணன், தங்கராஜிடம் சென்று உங்கள் மகளை சினிமாவில் நடிக்க வைக்கிறேன் என்றுகூறியுள்ளார். தொட்டால் பூ மலரும் என்ற படத்தில் நடிக்க வைப்பதாக கூறி ரூ. 15,000 அட்வான்சும்கொடுத்துள்ளார்.

அதன் பிறகு படப்பிடிப்பு என்று கூறி கரோலினை அழைத்து சென்றார். பல்வேறு ஆபாச கோணங்களில்கரோலினை படம் எடுத்ததோடு கரோலினுக்கு செக்ஸ் தொல்லையும் கொடுத்துள்ளார் கோபிக்கண்ணன்.இதையடுத்து எனக்கு சினிமாவே வேண்டாம் என்று கூறிவிட்டு கரோலின் வந்து விட்டார். அதன் பிறகு நடந்தபடப்பிடிப்புக்கு செல்லவில்லை.

இதையடுத்து கரோலினையும், அவரது தந்தையும் கோபிக்கண்ணன் மிரட்டியுள்ளா. படப்பிடிப்புக்குவராவிட்டால் பண மோசடி செய்து விட்டதாக புகார் கொடுத்து உள்ளே தள்ளி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.ஆனாலும் கரோலினும் அவரது தந்தையும் சினிமாவே வேண்டாம் என ஒதுங்கிவிட்டனர்.

ஆனாலும் விடாத கோபிக்கண்ணன், மைலாப்பூர், திண்டிவனம், மெரீனா கடற்கரை ஆகிய காவல் நிலையங்களில்கரோலின் மற்றும் தங்கராஜ் மீது புகார்கள் கொடுத்தார். கோபிக்கண்ணனுக்கு போலீசிலும் அரசியலிலும்செல்வாக்கு இருந்ததாத் பயந்து போன தங்கராஜ் தனது மனைவியின் நகைகளை விற்று ரூ.80,000த்தைகோபிகண்ணனிடம் கொடுத்துவிட்டு, இத்தோடு விட்டுவிடுமாறு கெஞ்சியுள்ளார்.

ஆனாலும் கோபிக்கண்ணனின் மிரட்டல் தொடரவே, பயந்து போன தங்கராஜ் ராயபுரம் வீட்டையே காலி செய்துவிட்டு பாண்டிச்சேரியில் ஒரு மீனவர் கிராமத்தில் குடும்பத்தோடு குடியேறினார். இதையும் அறிந்தகோபிகண்ணன் அங்கு சென்றும் மிரட்டினார். ஆனால் ஊர்காரர்கள் சேர்ந்து அவரை விரட்டியத்துள்ளனர்.

இதையடுத்து தனது நண்பரான அரக்கோணம் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், நொச்சிக்கும் போலீஸ்காரர்உதயகுமார், மைலாப்பூர் பெண் போலீஸ் செந்தாமரை செல்வி, மெரீனா கடற்கறை ஏட்டு சந்திரன் ஆகியோரைஅழைத்து கொண்டு பாண்டிச்சேரி சென்றுள்ளார் கோபிக்கண்ணன்.

பாண்டிச்சேரி போலீசாரிடம், தங்கராஜும் கரோலினும் பண மோசடி செய்துவிட்டதாக வழக்கு உள்ளதாகக் கூறி,தங்கராஜ் குடும்பத்தினரை அழைத்து செல்ல நீங்கள் உதவ வேண்டும் என்று கூறியுள்ளனர். எனவே பாண்டிச்சேரிபோலீசார் அவர்களுடன் சென்றனர்.

பின்னர் தங்கராஜ், அவரது மனைவி, அவரது மகள் 3 பேரையும் அழைத்துக் கொண்டு சென்னை வந்துள்ளனர்.முட்டுக்காடு அருகே வந்த போது கரோலினை அருகில் உள்ள கோவிலுக்கு இழுத்து சென்று கட்டாய திருமணம்செய்துள்ளார் கோபிக்கண்னண்.

கரோலினின் பெற்றோரை விரட்டி விட்டுவிட்டு, சென்னை தியாகராய நகரில் உள்ள தனது நண்பர் வீட்டுக்குகரோலினை கொண்டு சென்று கற்பழித்துள்ளார் கோபிக்கண்ணன்.

இதையடுத்துத் தான் கரோலினை மீட்டுத் தரக் கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார் தங்கராஜ். நீதிமன்றம்தலையிட்டதன்பேரில் கரோலினை போலீசார் மீட்டுள்ளனர்.

கோபிகண்ணன் மீது கற்பழிப்பு மற்றும் ஆள் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவருக்குஉடந்தையாக இருந்த சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், போலீசார் உதயகுமார், சந்திரன், செந்தாமரை செல்விஆகிய 4 பேர் மீதும் ஆள் கடத்தல் மற்றும் கற்பழிப்புக்கு உடந்தை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

ஒரு ஓய்வு பெற்ற ஏட்டையாவுக்கே இந்த கதி என்றால்..?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X