For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிலத்தை விற்று, கடனை வாங்கி, நாடு விட்டு, உயிரை இழந்த பரிதாபம்!

By Staff
Google Oneindia Tamil News

கடலூர்:

பஹ்ரைன் தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ள 16 பேரின் குடும்பங்களும்பெரும் சோகத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. இவர்கள் பஹ்ரைன் செல்வதற்காக நிலத்தைவிற்றும், வட்டிக்குக் கடன் வாங்கியும் தான் பணத்தைக் கட்டியுள்ளனர். இப்போது அங்கு போய் உயிரை இழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் மாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்துரையின் மரணம் அவரதுகுடும்பத்தை நிலைகுலைய வைத்துள்ளது. இவரது அண்ணன் தெய்வீகம், சாதாரணவிவசாயத் தொழிலாளி. தெய்வீகம் கூறுகையில்,

எனது ஊரைச் சேர்ந்த பலர் பஹ்ரைனில் இருப்பதால் எனது தம்பியும் அங்கு போகஆசைப்பட்டான். நானும், எங்களுக்கு இருந்த நிலத்தை விற்று அவனைஅனுப்பிவைத்தேன். போன இடத்தில் அவன் உயிரை விட்டுள்ளது என்னால் தாங்கமுடியவில்லை.

எனது மாமா துரைசாமியின் மகன் சிவப்பிரகாசமும் இந்த விபத்தில் இறந்துள்ளான்.இருவரும் இப்படி அல்பாயுசில் அந்நிய நாட்டில் போய் உயிரை விட்டிருக்கிறார்களேஎன்று கூறி தெய்வீகம் கதறி அழுதார்.

விழுப்புரம் மாவட்டம் ஓகையூர் கிராமத்தைச் சேர்ந்த பூமாலையின் கதை இன்னும்சோகமானது. இவர் பஹ்ரைன் போவதற்காக ரூ. ஒன்றரை லட்சம் பணத்தை வட்டிக்குகடனாக வாங்கி அனுப்பி வைத்துள்ளனர் குடும்பத்தினர்.

பூமாலைக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருக்கு 2 சகோதரிகள்,1 அண்ணன்ஆகியோர் உள்ளனர். மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பூமாலையின் தாயார்,தனது மகனின் மரணச் செய்தியால் உடைந்து போய் அழுதவண்ணம் உள்ளார்.

இதேபோல குழந்தையின் முகத்தைக் கூட பார்க்க முடியாமல் மரணத்தைத்தழுவியுள்ளார் சிறுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த குமார். இவருக்கு செல்வி என்றமனைவியும், சினேகா என்ற ஒன்றரை வயது மகளும் உள்ளனர்.

கடந்த 12 நாட்களுக்கு முன்புதான் செல்விக்கு ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தையை இன்னும் குமார் பார்க்கக் கூட இல்லை. அதற்குள் காலன் காவு கொண்டுவிட்டான்.

இறந்து போன அத்தனை பேரின் குடும்பங்களும் மிகவும் ஏழ்மையானபின்னணியைக் கொண்டவை என்பது தான் சோகத்திலும் பெரிய சோகம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X