• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புலிகள் பலமுனை தாக்குதலில் திணறும் இலங்கைபடைகள்- இந்திய உதவி கோரிக்கை?

By Staff
|

கொழும்பு:

திரிகோணமலை பகுதியில் இலங்கை ராணுவத்தினரும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே மோதல் மேலும்தீவிரமடைந்துள்ளது. புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது ஆர்ட்டிலரி, மார்ட்டர் குண்டுகள் தாக்குதலைராணுவம் தொடர்ந்து நடத்தி வருகிறது.

அதே நேரத்தில் ராணுவத்தினரை பல முனைகளிலும் இருந்து தாக்கி அவர்களை புலிகள் நிலைகுலைய வைத்துவருகின்றனர். திரிகோணமலையில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ராணுவம் ஊடுருவ முயன்று வரும்நிலையில் ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஊடுருவி புலிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனால் படைகளை பல இடங்களுக்கும் பிரித்து அனுப்ப வேண்டிய நிலைக்கு ராணுவம் தள்ளப்பட்டுள்ளது.

புலிகளின் பதிலடியை ராணுவத்தால் சமாளிக்க முடியவில்லை என பெரும்பாலான நாட்டு தூதர்கள் கருத்துதெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது. தேவையில்லாமல் அவர்களது பகுதிக்குள் ராணுவம்நுழைந்துவிட்டு அல்லாடி வருவதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். புலிகளின் எதிர் தாக்குதல்எதிர்பார்த்ததை விட மிகத் தீவிரமாக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ராணுவத்தின் தரப்பில் ஏராளமான உயிர்ச் சேதம் ஏற்பட்டு வருகிறது. ஆனால், சாவு எண்ணிக்கையை இலங்கைஅரசு குறைத்தே வெளியில் சொல்லி வருகிறது. திரிகோணமலை கடற்படை முகாம் மீது விடுதலைப் புலிகள்பீரங்கித் தாக்குதல் நடத்தியதோடு, அதே வேகத்தில் பீரங்கிகளை மறைவான இடத்துக்கும் கொண்டுசென்றுவிட்டனர். இந்த பீரங்கிகளை கடந்த காலத்தில் இலங்கை ராணுவத்தோடு நடத்திய போர்களில் புலிகள்கைப்பற்றியவை என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் முட்டூர் பகுதியை ராணுவம் புலிகளிடம் இழந்து வருவதாகத் தெரிவதாகராய்ட்டர்ஸ் கூறுகிறது.

அரபிக் கல்லூரி மீது விழுந்த குண்டு-10 பேர் பலி:

முட்டூரில் ராணுவத்தினர் மீது புலிகள் வீசிய ஆர்ட்டிலரி குறி தவறி குண்டு அரபிக் கல்லூரியைத் தாக்கியதில்அங்கிருந்த 10 பேர் பலியாயினர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் பொதுமக்களாவர்.

இந்திய உதவி கோரும் இலங்கை?:

இதற்கிடையே விடுதலைப் புலிகள் தாக்குதலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தப்ப முயலும் இலங்கை ராணுவத்திற்குஇந்திய அரசு உதவக் கூடாது என்று தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திரிகோண மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக தமிழருக்கு எதிரான இனப் படுகொலை நடத்தப்பட்டுவருகிறது.

இதில் பல நூறு தமிழர்களைக் கொன்று குவித்தும், தமிழர் சொத்துகளை சூறையாடியும், ஆயிரக்கணக்கானதமிழர்களை அகதிகளாக தமிழ்நாட்டிற்கு துரத்தியடித்தும் வருகின்றனர்.

இப்படி அட்டூழியம் புரிந்து வரும் இலங்கை ராணுவத்தினர், விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் கப்பலில் ஏறித் தப்பியோட முயன்ற போது புலிகள் முற்றுகைக்கு ஆளாகித் தவிக்கின்றனர்.

கப்பலையும் அதிலுள்ள இலங்கை ராணுவத்தினரையும் காப்பாற்ற உதவுமாறு இந்திய அரசுக்கு இலங்கை அரசுவேண்டுகோள் விடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த செய்தி உண்மையாயின் கொலை வெறியர்களானஇலங்கை ராணுவத்திற்கு உதவி புரிவது மேலும் தமிழர்களைக் கொன்று குவிக்க ஊக்கமளிப்பதாகிவிடும்.

அவ்வாறு இந்தியா உதவுமானால் ஒட்டுமொத்த தமிழருக்கு எதிரான நடவடிக்கையாக கருத நேரிடும் எனஎச்சரிக்க விருப்புகிறேன் என அவர் கூறியுள்ளார்.

நார்வே தூதர் வருகை:

இந் நிலையில் நார்வே அமைதித் தூதர் எரிக் சோல்ஹைம் இன்று இலங்கை வருகிறார். இலங்கை அரசுடனும், விடுதலைப்புலிகளுடனும் அவர் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார்.

கோவை-இலங்கை போலீசுக்கு பயிற்சி தொடக்கம்:

இந் நிலையில் இலங்கை ஆயுதப் படை போலீசாருக்கு கோவை மத்திய ஆயுதப்படைமையத்தில் பயிற்சி தொடங்கியுள்ளது.

கோவை அருகே உள்ள குருடம்பாளையத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை(சிஆர்பிஎப்) பயிற்சிக் கல்லூரி உள்ளது. தமிழ்நாட்டில் கோவை மற்றும் மத்தியபிரதேசம், மராட்டிய மாநிலம் ஆகிய 3 மாநிலங்களில் இந்த பயிற்சி மையங்கள்உள்ளன.

சப்-இன்ஸ்பெக்டர்கள் முதல் துணை கண்காணிப்பாளர் வரை உள்ளவர்களுக்கு இங்குபயிற்சி அளிக்கப்படுகிறது. வெடிகுண்டுகளை கண்டறியந்து செயல் இழக்கச்செய்வது, கண்ணி வெடிகளை அகற்றுதல், ராக்கெட் லாஞ்சர்களை இயக்குவது, நவீனதுப்பாக்கிகளை கையாள்வது உள்பட நவீன பயிற்சிகள் இங்கு மத்திய ஆயுதப்படைபோலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இங்குள்ள பயிற்சி மையத்தில் தற்போது இலங்ககை ஆயுதப் படையை சேர்ந்த 43பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கலவரத்தை அடக்குவது, கலவரம்ஏற்படாமல் தடுப்பது, குண்டு வெடித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளைஎதிர்கொள்வது உள்பட நவீன பயிற்சிகள் இங்கு அவர்களுக்கு அளிக்கப்பட்டுவருகிறது.

இவர்களுக்கு 4 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிகிறது. இது குறித்துசிஆர்பிஎப் அதிகாரிகளிடம் கேட்டபோது, பயிற்சி அளிக்கப்படுவது உண்மை தான்.ஆனால் இது பற்றிய விவரங்களை வெளியிட முடியாது என்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X