For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏர்ஹோஸ்டஸ் மூச்சு திணறடித்து கொலை: புதிய தகவல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பெங்களூரைச் சேர்ந்த ஏர்ஹோஸ்டஸ் பெண்ணை தலையணையை வைத்து அமுக்கி மூச்சுத் திணறடித்துத் தான்அவரது காதலர் கொலை செய்துள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதன் பின்னர் 3 மணிநேரம் கழித்தே காதலர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளதும் உறுதியாகியுள்ளது.

Shilpa

Jayanth

திருவான்மியூர் சுரக்ஷா அபார்ட்மென்ட்டில் வசித்து வந்த ஜெட் ஏர்வேஸ்ஏர்ஹோஸ்டர் ஷில்பாவும் (24)உடன் வசித்த அவரது காதலர் ஜெயந்தும் வீட்டுக்குள்இறந்து கிடந்தனர்.

ஷில்பா படுக்கையிலும் காதலன் ஜெயந்த் தூக்கிலும் தொங்கியபடி இறந்து கிடந்தனர்.

இருவரும் 4 நாட்களுக்கு முன் இறந்துள்ளனர். வீட்டில் பீர் பாட்டில்களும் கிடந்தன.இதனால் மதுவில் விஷம் கலந்து ஷில்பாவை ஜெயந்த் கொன்றதாகக் கருதப்பட்டது.

ஆனால், இவர்களது உடல்களில் நடத்தப்பட்ட போஸ்ட் மார்ட்டத்தில் ஷில்பா மூச்சுத்திணறி இறந்தது தெரியவந்துள்ளது. அவரது உடலில் விஷம் ஏதும் இல்லை.

இதனால் தலையைணைக் கொண்டு ஷில்பாவை அமுக்கி மூச்சு திணறடித்து ஜெயந்த்கொன்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

மேலும் ஷில்பா இறந்து 3 மணி நேரம் கழித்தே ஜெயந்த் தூக்கு மாட்டிக் கொண்டும்இறந்துள்ளார்.

கால் சென்டரில் வேலை பார்த்த ஜெயந்தும் ஜெட் ஏர்வேசில் ஏர் ஹோஸ்டசாக இருந்தஷில்பாவும் திருமணம் செய்யாமலேயே (ஏர் ஹோஸ்டகள் திருமணம் செய்யஅலுவலக விதி தடையாக இருப்பதால்) ஒரே வீட்டில் கணவன், மனைவியாக வசித்துவந்தனர்.

ஷில்பாவுக்கு வேறு சில ஆண்களுடனும் தொடர்பு ஏற்பட்டதாலும், அவர்களைவீட்டுக்கு வரவழைத்து ஷில்பா தண்ணியடித்து கும்மாளம் அடித்தாதலும், அவர்களுடன்ஊர் சுற்றியதாலும் அவரை ஜெயந்த் கொன்றுவிட்டு தானும் இறந்துள்ளதாக ஆரம்ப கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது.

ஷில்பாவின் தோழி மானசாவிடம் போலீசார் விசாரித்தபோது, இந்த விவரங்கள்உறுதியாயின. ஷில்பாவுக்கும் ஜெயந்துக்கும் மோதல் முற்றி கடைசி 10 நாட்களாகஇருவரும் பேசுவதையே நிறுத்திவிட்டதாவும், ஜெயந்த் கொடுமைப்படுத்ததொடங்தியதால் அவர் இருக்கும்போது வீட்டுக்குப் போவதையே ஷில்பா தவிர்த்துவந்ததாகவும் மானசா கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X