For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவை குண்டுவெடிப்பு-தலைமறைவாக இருந்த முக்கிய தீவிரவாதி கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முஸ்லீம் பாதுகாப்புப் படை என்ற தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த, 4ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த இம்ரான் என்ற நபரை திருச்சி போலீஸார்கைது செய்துள்ளனர்.

தமிழகத்தை உலுக்கிய கோவை தொடர் குண்டுவெடிப்பில் கைதாகியுள்ள ஜாகீர்உசேனின் நெருங்கிய நண்பர் தான் இம்ரான். கடந்த 2002ம் ஆண்டு முஸ்லீம்பாதுகாப்புப் படை என்ற தீவிரவாத அமைப்பு உருவானது. இந்த அமைப்பின் தளபதிபோல செயல்பட்டார் இம்ரான்.

இந்த அமைப்பின் தலைவர்களாக அபு உமர், அபுஹம்சா ஆகியோர் செயல்பட்டனர்.இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் 2002ம் ஆண்டு குற்றாலத்தில் ரகசிய கூட்டம்போட்டு சதித் திட்டங்கள் குறித்து ஆலோசித்தனர். இதையடுத்து போலீஸார்தகவல்அறிந்து சுற்றி வளைத்தனர்.

கிட்டத்தட்ட 20 பேரைக் கைது செய்தனர். இவர்களில் இம்ரான், அபு உமர், அபுஹம்சாஆகியோர் மட்டும் தப்பி விட்டனர். இவர்களிடமிருந்து ஏராளமான வெடிகுண்டுகள்,வெடிபொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவான 3பேரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

மற்றவர்கள் மீது பூந்தமல்லி வெடிகுண்டுகள் வழக்குக்கான நீதிமன்றத்தில் வழக்குநடந்து வருகிறது. இதில் இம்ரானை எப்படியும் பிடிக்க போலீஸார் மும்முரமாகஇருந்தார்கள். காரணம், இம்ரான் வெடிகுண்டுகள் தயாரிப்பதில் நிபுணர். அதேபோலகுறிபார்த்து சுடுவதிலும் கில்லாடி.

இம்ரான் செளதி அரேபியாவுக்கு தப்பிச் சென்று விட்டதால் அவரைப் பிடிககமுடியவில்லை. தமிழகத்திற்க்கு வரும் போது வளைத்துப் பிடிக்க போலீஸார்காத்திருந்தனர். இந்த நிலையில் கடந்த 2005ம் ஆண்டே இம்ரான் தமிழகம் வந்துவிட்டார். இருப்பினும் அவரைப் பிடிக்க முடியவில்லை.

தொடர்ந்து போலீஸார் இம்ரானை தேடி வந்தனர். இந்த நிலையில் திருச்சியில்இம்ரான் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக அந்தஇடத்தை போலீஸார் முற்றுகையிட்டனர். பஸ் நிலையம் அருகே வைத்து இம்ரானைபோலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.

கைது செய்யபபட்ட இம்ரான் உடனடியாக சென்னைக்கு கொண்டு வரப்பட்டார்.அங்கு அவரிடம் சிபிசிஐடி போலஸீார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீஸாரிடம் இம்ரான் அளித்துள்ள வாக்குமூலம்: எனது சொந்த ஊர் தஞ்சைமாவட்டம் மல்லிப்பட்டனம்.

எனது தந்தை பெயர் அப்துல்காதர். 10ம் வகுப்பு வரை படித்துள்ளேன். ஏ.சிமெக்கானிசம் படித்துள்ளேன். தீவிரவாதி ஜாகீர் உசேனை கோவை குண்டுவெடிப்பில்போலீஸார் தேடிய போது தன்னிடமிருந்த 15 கிலோ வெடிபொருளை தலா 5கிலோவாக பிரித்து 3 பேரிடம் கொடுத்தார்.

அப்போது என்னிடம் 5 கிலோ வெடி பொருளைக் கொடுத்தார். அதை பாலிதீன்பையில் போட்டு எனது வீட்டுக்குப் பின்புறம் புதைத்து வைத்தேன். ஜாகீர் உசேனுடன்எனக்கு தொடர்பு இருந்ததால் என்னையும் போலீஸிார் தேடி வந்தனர். கடைசியில்நான் போலீஸில் பிடிபட்டேன்.

ஆனால், நான் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததால் என்னைஉளவாளி போல பயன்படுத்தினார்கள். குண்டு வெடிப்பில் தொடர்புடைய பலகுற்றவாளிகளைப் பிடிக்க நான் உதவியாக இருந்தேன். குண்டுவெடிப்பு கைதிகள்பட்டியலிலிருந்து என்னை விடுவித்து விட்டனர். தொடர்ந்து போலீஸாருக்கு உளவுசொல்லி வந்தேன்.

அதேசமயம, தீவிரவாதிகளுடனான எனது தொடர்பை துண்டித்துக் கொள்ளமுடியவில்லை. ஹைதாரபாத்தைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் என்ற தீவிரவாதி என்னுடன்அடிக்கடி போனில் பேசுவான். அவனது டைரியில் எனது பெயரும், தொலைபேசிஎண்ணையும் குறித்து வைத்திருந்தான். மேலும், முஸ்லீம் பாதுகாப்புப் படை குறித்தும்தனது டைரியில் எழுதி வைத்திருந்தான்.

அவன் போலீஸாரால் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனது டைரிக் குறிப்பைவைத்துத்தான் முஸ்லீம் பாதுகாப்புப்படையின் செயல்பாடுகளை போலீஸார்கண்டறிந்து 20 பேரைக் கைது செயதனர். பின்னர் நான் செளதி சென்று விட்டேன்.அங்கு ரியாத் நகரில் அபு உமர், அபு ஹம்சா ஆகியோரை சந்தித்தேன். கடந்த ஆண்டுவிசா முடிந்ததால் ஊர் திரும்பினேன். இங்கு பழைய தீவிரவாத நண்பர்களைசந்தித்துப் பேசினேன்.

அவர்களுடைய உதவியில் தான் வாழ்ந்தது வந்தேன் என்று கூறியள்ளார் இம்ரான்.இம்ரானை எழும்பூர் 10 வது நீதிமன்றத்தில் போலீஸார் பலத்த பாதுகாப்புடன்கொண்டு வந்து ஆஜர்படுத்தினர். பின்னர் 15 நாள் சிறைக்காவலில் அடைக்கப்பட்டார்இம்ரான்.

இம்ரான் பிடிபட்ட கதை சுவாரஸ்யமானது. கல்யாணம் செய்து கொள்வதற்காகதீவிரமாக பெண் தேடி வந்தார் இம்ரான். இதை அறிந்த போலீஸிார் காயல்பட்டனத்தைதச் சேர்ந்த ஒரு கொலைக்குற்றவாளியை பெண் தேடித் தரும் புரோக்கர்போல வேடமிட வைத்து அந்த நபரை இம்ரானிடம் அனுப்பினர்.

திருச்சியில் பெண் இருக்கிறது, பார்க்கலாம் வா என்று கூறி அந்த நபரும் இம்ரானைதிருச்சிக்கு வரவழைததார்.அங்கு வந்தபோதுதான் இம்ரான் போலீஸ் பிடியில்சிக்கினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X