For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரியார் படத்துக்கு அரசு நிதி: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பெரியார் படத்துக்கு தமிழக அரசு நிதி வழங்குவதற்கு இடைக்கால தடை விதிக்கசென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. அதே நேரத்தில் இந்த எதிர்த்த வழக்கில்,ஒரு வாரத்தில் அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதிஏ.பி.ஷா உத்தரவிட்டுள்ளார்.

பெரியார் குறித்த படத்துக்கு தமிழக அரசு ரூ. 95 லட்சம் நிதி வழங்க தடை விதிக்ககோரி டிராபிக் ராமசாமி என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏபி.ஷா, நீதிபதி, கே.சந்துரு ஆகியோர் முன்விசாரணைக்கு வந்தது.

மனுதாரர், வக்கீல் வைத்து கொள்ளாமல் தானே வாதாடினார். வாதம் வருமாறு,

டிராபிக் ராமசாமி: மக்கள் வரிப்பணம் வீணாகிறது. வரிப்பணத்தை நல்லகாரியத்துக்குத்தான் பயன்படுத்த வேண்டும். பெரியார் படத்துக்கு அரசு நிதி வழங்கதடை விதிக்க வேண்டும்.

தலைமை நீதிபதி ஏபி.ஷா: பெரியார் சிறந்த தலைவர். அவரை எதிர்க்கிறீர்களா?

ராமசாமி: பெரியாரையும், அவரது கொள்கையையும் எதிர்க்கவில்லை. நிதிவழங்குவதைத் தான் எதிர்க்கிறேன்.

தலைமை நீதிபதி: மற்ற மாநிலங்களில் சிறந்த படங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது.அது போலத்தான் மரியாதைக்குரிய தலைவர் பெரியார் படத்துக்கும் அரசு நிதிவழங்குகிறது. இதில் எந்த தவறும் இல்லை.

ராமசாமி: இந்த நிதியை வைத்து பெரியார் படத்தை மாநில அரசே தயாரித்துவெளியிடலாம். ஒரு தனி நபர் தயாரிக்க இவ்வளவு நிதியை அரசு வழங்க கூடாது.தனி நபருக்கு வழங்குவதைத்தான் எதிர்க்கிறேன்.

சட்டமன்றத்தில் இது பற்றி எம்.எல்.ஏ. எஸ்வி சேகர் பேசியபோது, ராஜாஜி பற்றிபடம் எடுத்தால் நிதி தரப்படுமா என்று கேட்டார். அப்படி கேள்வி எழுப்பியதால்,அவர் சென்னையில் ஒரு நாடகத்தில் நடித்த போது அவரை சிலர் தாக்க முயன்றனர்.அதை நேரில் பார்த்த பிறகுதான் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளேன்.

தலைமை நீதிபதி: இந்த படத்துக்கு மட்டும் நிதி தரக்கூடாது என்கிறீர்களா? அல்லதுஎல்லா படத்துக்கும் நிதி தருவதை எதிர்க்கிறீர்களா?

ராமசாமி: அரசு பணம் ரூ.95 லட்சத்தை வீணாக்கக் கூடாது என்றுதான் கூறுகிறேன்.

தலைமை நீதிபதி: இதில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்கிறீர்களா?

ராமசாமி: மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. இது பற்றி மேலும் சிலவிளக்கத்துடன் கூடுதல் மனு தாக்கல் செய்ய விரும்புகிறேன். அனுமதிக்க வேண்டும்.

தமைமை நீதிபதி: நிதி தரக்கூடாது என்று சட்டவிதிகள் ஏதாவது இருந்தால், அதைகூடுதல் மனுவில் தெரியப்படுத்துங்கள்.

தமிழக அரசின் வழக்கறிஞர் ராஜா கலிபுல்லா: மகாத்மா காந்தி படம் எடுக்க மத்தியஅரசு ரூ.4 கோடி நிதி கொடுத்துள்ளது. காமராஜர் படம் எடுக்க தமிழக அரசு நிதியுதவிவழங்கியது. அதுபோல பெரியார் படத்துக்கு நிதி கொடுப்பதில் எந்த தவறும் இல்லை.இதில் அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. நிதி வழங்க தடை விதிக்கக் கூடாது.

தலைமை நீதிபதி: பெரியார் படத்துக்கு நிதி வழங்க இடைக்காலத் தடை விதிக்கமுடியாது. அரசின் கொள்கைமுடிவில் நீதிமன்றம் தலையிடமுடியாது. இந்த வழக்கில்,ஒரு வாரத்திற்குள் அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த வக்கீல் எஸ்.குமாரதேவன் மற்றும்வக்கீல்கள் டிபி.செந்தில்குமார். காசிநாத் பாரதி, கலைமணி, விஜயேந்திரன் ஆகியோர்பெரியார் படத்துக்கு அரசு நிதி வழங்கியது சரியானது. எங்களையும் வழக்கில் சேர்த்துஎங்கள் வாதத்தையும் கேட்க வேண்டும் என்றனர்.

வக்கீல் ஹரிகரன் என்பவர் குறுக்கிட்டு வழக்கு போட்ட டிராபிக் ராமசாமி, நடிகர்எஸ்வி.சேகர், ராஜாஜி எல்லாம் பிராமணர்கள். இதனால் தான் பெரியார் கொள்கைக்குவிரோதமாக செயல்படுகின்றனர் என்றார்.

இதைக் கேட்டதும் தலைமை நீதிபதி ஏபி.ஷா கோபத்துடன், நீதிமன்றத்தில் அரசியல்நோக்கத்தில் ஜாதி பற்றி பேசி விளம்பரம் தேட முயற்சி செய்ய வேண்டாம். ஜாதிபற்றி வக்கீல் பேசியதை கடுமையாக கண்டிக்கிறேன்.

மனுதாரருக்கு அரசு தரப்பு வக்கீல் பதில் தெரிவிப்பார். அரசுக்கு சாதகமாக வாதாடஅரசு வக்கீல் இருக்கிறார். மற்றவர்கள் இதில் தங்களை இணைத்துக் கொள்ளவேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது. அவர்கள் பேச அனுமதிக்க முடியாது.விசாரணையை ஒரு வாரம் தள்ளி வைக்கிறேன் என்றார்.

டிராபிக் ராமசாமிக்கு பாதுகாப்பு:

இதன் பின்னர் நீதிமன்றத்தில் இருந்து டிராபிக் ராமசாமி வெளியேறும் போது அவரைசில வக்கீல்களும், பெரியார் திராவிடர் கழகத்தினரும் அவரை சூழ்ந்து கொண்டனர்.அவரை ஒரு வக்கீல் மிரட்ட, இன்னொரு வக்கீல் ராமசாமியை காலில் மிதித்தார்.இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

போலீசார் விரைந்து சென்று ராமசாமியை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

ஆனால் ராமசாமி மீண்டும் நீதிமன்றத்துக்குள் சென்று, தன்னை வக்கீல்கள்மிரட்டுவதாகவும், ஒரு வக்கீல் தன்னை காலால் மிதித்தார் என்றும் தலைமைநீதிபதியிடம் புகார் செய்தார். தலைமை நீதிபதி ஏபி.ஷா மீண்டும் கோபமடைந்துவழக்கு போட அவருக்கு உரிமை இருக்கிறது.

இதை வக்கீல்கள் சட்டரீதியாக சந்திக்க வேண்டும். இப்படி அநாகரிகமாக நடந்துகொள்ளக் கூடாது. பாதுகாப்புக்கு நின்ற போலீசார் என்ன செய்தனர்? மனுதாரருக்குபாதுகாப்பு அளிக்கும்படி போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடுகிறேன் என்றார்.

இதைத் தொடர்ந்து போலீஸ் துணை கமிஷனர் நீதிமன்றத்துக்கு வந்து ராமசாமியைபாதுகாப்புடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X