• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிஎஸ்பி வேடத்தில் கோட்டைக்குள் ஊடுறுவிய அண்ணன்-தம்பி

By Staff
|

சென்னை:

சுதந்திர தினமான நேற்று பலத்த பாதுகாப்பு அரணையும் மீறி போலீஸ் டிஎஸ்பிஉடையில் கோட்டைக்குள் ஊடுறுவிய அண்ணன், தம்பியை போலீஸார் கைதுசெய்தனர்.

Sriram and Kannan taken by police for questioning
போலீஸ் பிடியில் கண்ணன், தம்பி ஸ்ரீராம்

சுதந்திரதினத்தையொட்டி சென்னையில் தமிழக அரசின் தலைமைச் செயலகம் உள்ளபுனித ஜார்ஜ் கோட்டை வளாகம் முழுவதம் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.கோட்டைக் கொத்தளத்தில் முதல்வர் கருணாநதி கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்ததால் 4அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில், பலத்த பாதுகாப்பை மீறி, இரண்டு இளைஞர்கள் போலீஸ் உடையில்கோட்டை வளாகத்தில் நுழைந்தனர். அங்குகள்ள சாப்பிடலாம் வாங்க என்றஉணவகத்தின் அருகே இருவரும் நின்று கொண்டிருந்தனர்.

ஆனால், அவர்களைப் பார்த்து சந்தேகமடைந்த போலீசார் அவரிகளிடம் விசாரணைநடத்தியபோது இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்துஉயர் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர்.

அவர்களில் ஒருவர் காக்கி சட்டை அணிந்து அதன் மேலே கலர் சட்டைபோட்டிருந்தார். அந்த நபரின் சட்டையை கழற்றிப் பார்த்தபோது டி.எஸ்.பிக்கள்அணியும் சீருடையை அவர் போட்டிருந்தார்.

இதைப் பார்த்து குழப்பமடைந்த அதிகாரிகள், இவர் உளவு பார்க்க வந்த போலீஸ்அதிகாரியாக இருக்கலாமோ என சந்தேகமடைந்தனர்.

Fake DSP Kannan
கைதான போலி

டிஎஸ்பி கண்ணன்

பின்னர் இருவரையும் போலீஸார் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

போலீஸ் சீருடை அணிந்திருந்தவர் கண்ணன். உடன் இருந்தவர் அவரது தம்பி ஸ்ரீராம்.

இருவரும் மடிப்பாக்கம் உள்ளகரம் உஷா நகரைச் சர்ந்தவர்கள். இவர்களது தந்தைகுமாரசாமி ஜோதிடர் ஆவார். கண்ணன் மெக்கானிக்கல் என்ஜீனியர் ஆவார். ஸ்ரீராம்பள்ளிக்கரணையில் உள்ள பாலாஜி பல் மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்துவருகிறார்.

இருவரும் சிறு வயதிலிருந்த போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவில்இருந்துள்ளனர். ஆனால், அது நிறைவேறவில்லை.

இருப்பினும் கண்ணன் தனது தலை முடியை ஒட்ட வெட்டிக் கொண்டு, அவ்வப்போதுபோலீஸ் என்று கூறி பலரை ஏமாற்றி வந்துள்ளார்.

கடந்த 2004 ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரி சீருடை அணிந்து கொண்டு காரில் சிவப்புவிளக்கு பொருத்திக் கொண்டு மடிப்பாக்கத்தை வலம் வந்துள்ளார். கண்ணன். இதுகுறித்து தகவல் அறிந்ததும் செங்கை கிழக்கு மாவட்ட எஸ்.பி. மகேந்திரகுமார்ரத்தோட், கண்ணனைக் கைது செய்துசிறையில் அடைத்தார்.

Fake ID cards seized from Kannan
கண்ணனிடம் கைப்பற்றப்பட்ட

போலி அடையாள அட்டைகள்

பின்னர் ஜாமீனில் வெளியே வந்த கண்ணனுக்கு போலீஸ் வேலை மீதான மோகம்குறையவில்லை.

இந்த நலையில்தான் எப்படியாவது போலீஸ் உடையில் தலைமைச் செயலகம் போய்விட வேண்டும் என்ற ஆசை கண்ணனுக்கு ஏற்பட்டுள்ளது. தனது ஆசையை தம்பிஸ்ரீராமிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து இருவரும் பைக்கில் கிளம்பி தீவுத் திடல் வந்துள்ளனர். தலைமைச்செயலகத்தின் பின்பகுதி வழியாக டிஎஸ்பி உடையில் கோட்டைக்குள் நுழைந்தார்கண்ணன், கூடவே தம்பியையும் சாதாரண உடையில் உள்ளே அழைத்து வந்தார்.

கோட்டைக்குள் வந்தவுடன் மேலே இன்னொரு சாதாரண சட்டையை போட்டுக்கொண்டார் கண்ணன். அப்போதுதான் இருவரும் போலீஸிடம் சிக்கிக் கொண்டனர்.

இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்கள் மீது ஆள் மாறாட்டம், அரசுஊழியர்போல நடித்து மோசடி செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைதுசெய்துள்ளனர்.

இருவருக்குமே மனநிலை பாதிக்ப்பட்டிருக்கலாம் என்றும் போலீஸார்சந்தேகிக்கிறார்கள்.

கண்ணனிடம் இருந்து போலி போலீஸ் அதிகாரிக்கான அடையாள அட்டைகளையும்போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அந்த போலி அடையாள அட்டையில் டிஜிபி, சட்டசபை செயலாளர் ஆகியோரின்கையெழுத்துக்கள் போலியாக போடப்பட்டுள்ளன.

இச் சம்பவம் கோட்டையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X