For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யாழ்ப்பாணத்தை அடைந்தன நிவாரண பொருட்கள்

By Staff
Google Oneindia Tamil News

யாழ்ப்பாணம்:

கொழும்பிலிருந்து இரண்டு செஞ்சிலுவைச் சங்க கப்பல்கள் மூலம் கொண்டுவரப்பட்ட நிவாரணப் பொருட்களை வினியோகிக்கும் பணி யாழ்ப்பாணத்தில்தொடங்கியுள்ளது.

புலிகள், ராணுவத்திற்கு இடையே நடந்த கடும் சண்டையால் திரிகோணமலை,யாழ்ப்பாணததைச் சுற்றியுள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. யாழ்ப்பாணம்,நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டது.

இதனால் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் 10 லட்சம் தமிழர்க் கடும் அவதிக்கு ஆளாகினர்.அவர்களில் 2 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி காட்டுக்குள் தஞ்சம்புகுந்தனர்.

அதே போல யாழ்ப்பாணத்தில் குவிக்கப்பட்டுள்ள 40,000 ராணுவ வீரர்களும் ஆயுதசப்ளை இல்லாமல் தவித்தனர். புலிகள் உள்ளே புகுந்தால் இவர்களின்நிலைமோசமாகும் எனறு இலங்கை ராணுவம் அஞ்சியது.

இந் நிலையில் யாழ்ப்பாணத்தில் அத்தியாவசியப் பொருடகளுக்கு பெரும் பஞ்சம்ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து செஞ்சிலுவைச் சங்கம் நிவாரணப் பொருட்களைவினியோகிக்க முன் வந்தது.

இதற்கு ராணுவமும், விடுதலைப் புலிகளும் சம்மதம் தெரிவித்ததையடுத்துகொழும்பிலிருந்து 2 கப்பல்கள் நிவாரணப் பொருட்களுடன் யாழ்ப்பாணத்திற்குவந்துள்ளன.

1,500 டன் உணவு, மருந்து உள்ளிடட நிவாரணப் பொருட்கள் யாழ் துறைமுகத்திற்குவந்துள்ளன. அந்த நிவாரணப் பொருட்கள் தற்போது பொது மக்களுக்குவினியோகிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், யாழ்ப்பாணத்தில் சிக்கியிருந்த 500 வெளிநாட்டவர்கள் மற்றும் நிவாரணப்பணியாளர்களை மீட்டு கொழும்பு கொண்டு செல்லவும் இந்த கப்பல்கள்பயன்படுத்ப்படும்.

முதல்கட்டமாக 150 பேர் கொண்டு செல்லப்படவுள்ளனர். திரிகோணமலை கொண்டுசெல்லப்படும் அவர்கள்அங்கிருந்து கொழும்பு அழைத்துச் செல்லப்படுவர்.

கொழும்பில் 18 பேர் கைது:

இதற்கிடையே, கொழும்பு நகரில் ஏராளமான கண்ணி வெடி, துப்பாக்கிள்,டெட்டனோட்டரகளை அதிரடிப் படையினர் பறிமுதல் செய்தனர். குடியிருப்புகளுக்குமத்தியில் இந்தப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. விடுதலைப்ப புலிகள் தான்இவற்றை பதுக்கி வைத்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக 16 ஆண்கள், 2 பெண்களை அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.

போலீஸ்காரரை விடுவிக்கும் புலிகள்:

இந் நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கடத்திச் சென்ற சிங்களபோலீஸ்காரர் ஒருவரை விடுதலைப் புலிகள் விடுதலை செய்ய சம்மதித்துள்ளனர்.

இதுகுறித்து இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர்தொர்பின்னூர் ஒமர்சன் கூறுகையில, கண்காணிப்புக் குழுத் தலைவர் பதவியிலிருந்துவிலகும் உல்ப் ஹென்ரிக்சனும், புதிய தலைவராக பொறுப்பேற்கவுள்ள நார்வேநாட்டின் லார்ஸ் ஜோகன்சோல்வ்பர்க்கும் வெள்ளிக்கிழமை விடுதலைப் புலிகளின்அரசியல் பிரிவுத் தலைவர் எஸ்.பி.தமிழ்ச்செல்வனை சநிதித்துப் பேசினர்.

விடுதலைப் புலிகள் 3 போலீஸ்காரரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிறைபிடித்தனர். அவர்களில் 2 பேரை ஏற்கனவே விடுவித்து விட்டனர். ஒருவர் மட்டும்தொடர்ந்து பிடியில் இருந்து வந்தார். அவரை விடுவிக்குமாறு தமிழ்ச்செல்வனிடம்கோரிக்கை வைக்கப்பட்டது.

அதை புலிகள் ஏற்றுக் கொண்டனர் என்றார் ஒமர்சன்.

இதற்கிடையே, போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இடம் பெற்ற உள்ளஐரோப்பிய நாடுகளான ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து ஆகியவற்றின் பிரதிநிதிகிள்இன்னும் சில தினங்களில் இலங்கையிலிருந்து தாயகம் திரும்புகின்றனர்.

ஐரோப்பிய யூனியன் புலிகள் அமைப்புக்கு தடை விதித்ததைத் தொடர்ந்து போர்நிறுத்தக் குழுவிலிருந்து ஐரோப்பிய நாடுகள் விலக வேண்டும் என புலிகள்கோரிக்கை வைத்தது நினைவிருக்கலாம்.

கண்ணி வெடிக்கு 6 ராணுவத்தினர் பலி:

இந் நிலையில் யாழ்ப்பாணம் அருகே பதுங்கு குழிகளில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி வெடித்து 6 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.

இலங்கையின் வட பகுதியில் சற்றே போர் ஓய்ந்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் அருகே இன்று ராணுவ வீரர்கள் பதுங்கு குழிகளை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு புதைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி வெடித்ததில் 6 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் பலாலி விமான தள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X